Essayer OR - Gratuit
அதிகக் குற்றங்கள் நடப்பதுபோல் தவறாக சித்தரிக்கப்படுகிறது: முந்தைய ஆண்டுகளை விட கொலைகள் குறைந்துள்ளன
Malai Murasu
|March 20, 2025
எடப்பாடி பழனிசாமி புகாருக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
-

தமிழ்நாட்டில் முன்னணி ஆண்டுகளை விட கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன என்றும், ஆனால் அதிக குற்றங்கள் தவறாக நடப்பதுபோல் சித்தரிக்கப்படுகின்றன என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிசாமியின் புகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முறைப்படி, விதிமுறைகளின்படி அனுமதி கேட்காவிட்டாலும், நீங்கள் அவரைப் பேச அனுமதி தந்தீர்கள். நீங்கள்கூட அனுமதி தருவதற்கு யோசித்தீர்கள். ஆனால், நான் உங்களிடம் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில், நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு அவரைப்பேச அனுமதித்தீர்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் முறையாகப் பேசிருக்க வேண்டும். ஆனால், அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏனென்றால், நான் பதிலளிக்கும்போது, வேறு ஏதாவது விஷயங்களை நான் எடுத்துச்சொல்லிவிடுவேன் என்று பயந்துகொண்டு, இன்றைக்கு அவர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இருந்தாலும், நான் அவர்களுக்கு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நேற்று நான்கு கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கே தெரிவித்தார். கோவை சம்பவத்தைப் பொறுத்தவரை யில், முதற்கட்டமாகத் தற்கொலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சம்பவத்தைப் பொறுத்தவரையில், விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சிவகங்கையில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து விசாரித்ததில், குடும்பத்தகராறு எனத் தெரியவந்துள்ளது.
ஈரோட்டில் நடைபெற்ற சம்பவம் குறித்து நான் இப்போது விரிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
சேலம்மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ஜான் (எ) சாணக்கியன் என்பவர் உயர் நீதிமன்ற நிபந்தனை பிணையின் அடிப்படையில் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று கையொப்பமிட்டுவிட்டு, தன்னுடைய மனைவியுடன் காரில் திருப்பூர் நோக்கிச் சென்று போது, பின்னால் காரில் சென்ற அடையாளம் தெரியாத சிலர் இருவரையும் அரிவாளால் தாக்கிவிட்டுச் தவறி சென்றிருக்கிறார்கள். காயமடைந்த சாணக்கியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார். கொண்டிருந்த அவரது மனைவி, சித்தோடுதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
Cette histoire est tirée de l'édition March 20, 2025 de Malai Murasu.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Malai Murasu
Malai Murasu
ஆவணித் திருவிழா தொடக்கம்: திருச்செந்தூர் கோவிலில் இன்று கொடியேற்றம்! ஆக. 23-ஆம் தேதி தேரோட்டம்!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 23ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.
1 mins
August 14, 2025
Malai Murasu
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு போட்ட வக்கீலுக்கு ரூ.1 லட்சம் அபராதம்! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu Chennai
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்! மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடைமுறைகளை டிஜிட்டல்மயமாக்கி எளிமையாக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu
நள்ளிரவில் கைது செய்தது அராஜகம்: தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா?
எடப்பாடி, விஜய் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!!
1 mins
August 14, 2025
Malai Murasu
கட்டாய மதமாற்றத் தடை மசோதா: ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம்!
உத்தரகாண்ட் மந்திரி சபை ஒப்புதல்!!
1 min
August 14, 2025

Malai Murasu
நாளை சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்!
5, 000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு !!
1 min
August 14, 2025

Malai Murasu Chennai
ஆலந்தூர் மண்டலத்தில் இணையதளம் வாயிலாக சிறு தொழில் உரிமம் பெறலாம்!
சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்தில் இணையதளம் வாயிலாக சிறு தொழில் உரிமம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
August 14, 2025

Malai Murasu
சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த 900 துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவு முதல் சிறைவைப்பு!
4 பேர் மயங்கியதால் பரபரப்பு; 20 வக்கீல்களும் கைதானதாக தகவல் !!
2 mins
August 14, 2025
Malai Murasu Chennai
குவைத்தில் பயங்கரம்: கள்ளச் சாராயம் குடித்த தமிழர் உள்பட 16 இந்தியர்கள் பலி!
40 பேர் மருத்துவமனையில் அனுமதி !!
1 mins
August 14, 2025
Malai Murasu Chennai
மாநகரத்தில் பூட்டிக் கிடந்த குடோனில் வாலிபர் படுகொலை!
மாதவரம் அருகே பூட்டிக் கிடந்த குடோனில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
August 14, 2025