CATEGORIES
பிராயச்சித்தம்
காலை பத்து மணிக்குள் வேகமாகச் செய்தி பரவி வீட்டில் கூட்டம் சேர்ந்து விட்டது.
காரைச்சித்தர்
புனிதமான பாரத நாட்டில் அவ்வப்போது தோன்றும் மகான்கள் மற்றும் சித்த புருஷர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. அதிலும் காவிரி நதி பாயும் சோழவள நாட்டில் தோன்றிய மகான்கள் விசேஷத் தன்மை வாய்ந்தவர்கள்.
கக்கன் என்றொரு மாமனிதர்!
பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக விளங்கிய கக்கன் 1908 இல் பிறந்தவர், மதுரையைச் சேர்ந்தவர். அதே மதுரையைச் சேர்ந்த தியாகி வைத்தியநாதய்யரைத் தம் தந்தை போல் கருதியவர். வைத்தியநாதய்யரோ கக்கனைத் பெறாத மகன் போலவே எண்ணினார்.
மானாமதுரை வீர அழகர்பெருமாள்
நம் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றுள் ராமாயணத்துடன் தொடர்புடைய "மானாமதுரை" எனும் ஊர் தென்தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. ஊரின் இயற்பெயர் 'வானர வீர மதுரை' என்பதாகும்.
தேசிய தெய்வீகம்!
சிதம்பரம் நடராஜப் பெருமான் கோவிலின் கிழக்கு கோபுரத்துக்கு முன்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குழுமியிருக்கிறார்கள். கரங்கள் கூப்பி கண்களில் நீர் பனிக்க அந்த கோபுரத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருக்கிறார்கள்.
தி. ஜானகிராமன்: எளிமையான மனிதர், ஆழமான சிந்தனையாளர்!
நான் அரசாங்கப் பணி நிமித்தமாக விசாகப்பட்டினத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அடிக்கடி டெல்லி செல்வதுண்டு.
ஜானி
என் பள்ளி வயதில் ஒருநாள் என் அம்மா பேச்சுவாக்கில் 'நாயிக்குப் பேரு முத்துமால!' என்று எளக்காரமாகச் சொன்னது என் காதில் விழுந்து விட்டது.
சிவ சிவா எனும் சிவனடியார் இவரே!
'மதி சூடி துதி பாடி' எனும் அற்புத நூல் ஒன்று கையில் கிடைத்தது. எழுதியவர் வி. சுப்பிரமணியன். சென்னை - கோட்டுர்புரத்தில், அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த போது, அவர் பேசப்பேச, வியப்பு ஏற்பட்டது.
இலக்கியச் சோலையில் வீசிய தமிழ்த் தென்றல்!
திரு.வி.க. என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் அமரர் திரு. வி.கல்யாணசுந்தரனார் சிறந்த எழுத்தாளர். மேடைப் பேச்சாளர். சிறந்த பத்திரிகையாளர். அவரது இனிய தமிழ்நடை காரணமாக தமிழ்த் தென்றல்' என்று அழைக்கப்பட்டவர். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பத்திரிகையுலக குரு.
தமிழ்ப் பழம்!
தமிழ் மொழிக்காக தமிழ்மன்றம் ஒன்றை அமைத்து ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தார் தமிழறிஞர் அன்புப் பழம்நீ. ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்ட தமிழ் அறிஞர்களோடு கலந்தாலோசித்து சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் அமைப்பைத் தொடங்கியவர்களில் இவரும் ஒருவர்.
ஊடகவியல் கற்பித்தலில் ஒரு புதிய முயற்சி
இன்றைய காலகட்டத்தில் செய்தித்தாள்கள், மாத, வார இதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள் என ஊடகங்கள் எண்ணிக்கையில் பல்கிப் பெருகி விட்டிருக்கின்றன. ஆனாலும் பெரும்பாலான ஊடகங்கள் ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்தே இயங்குகின்றன என்பதை வெளிப்படையாகவே உணர முடிகின்றது. அதிலும் பல செய்திச் சேனல்கள் கட்சிகளாலேயே நடத்தப்படுகின்றன என்பதும் உண்மை!
உலகம் நோயிலிருந்து விடுபடும்!
ஸ்ரீ அரவிந்தரின் சிஷ்யையாக ஆன்மீக வாழ்வை நடத்தி, அவருக்கிணையாக ஆன்மீகத்தில் உயர்ந்தவர் ஸ்ரீஅன்னை. தெய்வமாகி இன்று வழிபடப்படுபவர்.
அப்பாடா!
இரும்பு நாற்காலியில் கால்களை நல்லா நீட்டிக் கொண்டு, சாய்ந்த மேனிக்கு உட்கார்ந்தான் கந்தசாமி கைகள் இரண்டையும் கோத்துக் கொண்டு தலையின் பின்புறம் வைத்துக்கொண்டு "ஆண்டவா, என்னப்பனே, சண்முகா, முருகா" என்று சொல்லிக் கொண்டான், கண்ணை மூடிய வண்ணம்.
கர்ஜித்தார் காமராஜர்!
எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது எழுத்துலக அனுபவங்கள் உள்ளிட்ட தனது வாழ்க்கை வரலாற்றை ' என்னை நான் சந்தித்தேன்' என்று புத்தகமாக எழுதியுள்ளார்.
சிக்கன செலவில் மகத்தான குடியிருப்புகள்!
வசிப்பிடம் என்பது ஒரு மனிதரின் தனக்கென்று சொந்தமாக ஒரு வீட்டை எல்லோராலும் அமைத்துக்கொள்ள முடிவதில்லைதான்.
ராமா அமிர்தம்!
நால் மனம் என் வார்த்தைகளின் காதலன் என்பது என் தகுதிக்கு மீறிய வார்த்தைகளாயிருக்கலாம். ஆனால் நம்மில் யாருக்குத்தான் வார்த்தைகள் மீது காதல் இல்லை? வார்த்தைகள் உயிருள்ளவை. அவைகள் மனத்தை என்னவோ செய்யத்தானே செய்கின்றன.
வித்தியாசமாக ஒரு மருத்துவர்!
சாந்தமான குரல், எந்த நேரத்தில் தொலைபேசியில் அழைத்தாலும் நம் நோய்க்கு மருந்து சொல்லும் பாங்கு. சிறந்த பண்பாளர். ஒரு சிறந்த மருத்துவப் பேராசிரியர், அவர்தான் டாக்டர் டி.வி.தேவராஜன்.
வாழ்வில் வெற்றிபெற வழி!
ஆன்மீகம் என்பது மனிதர் சிறந்த பின் முக்திக்கு வழிகோலுவது, அதற்கும் உலகியல் வாழ்வுக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தை உடைத்து, உலகியல் வாழ்வுக்கும் வழிகாட்டுவதே ஆன்மீகம் என வலியுறுத்தியவர்களில் ஸ்ரீஅன்னை முக்கியமானவர்.
பொன்மகள் வந்தாள்
அமேசான் பிரைமில் நேரடியாக வெளியான முதல் தமிழ்த் திரைப்படம். இது ஒரு நல்ல தொடக்கம்.
வரதராஜபுரம் காலம் கடந்த காவியத் தலைவன்
150ஆம் ஆண்டை நோக்கி....
மருத்துவர்களைப் போற்றுவோம்!
ஓவ்வொரு வருடமும் ஜுலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. மருத்துவர்கள் தினம் பற்றி அறியும் முன், இன்று பல பேரை பலிவாங்கி உலகத்தையே வேட்டையாடி வரும் கொரோனாவுக்கு எதிராக நடக்கும் யுத்தத்தை, முன்னின்று நடத்தும் வீராதி வீரர்களாக செயல்படும் மருத்துவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
சுடர் விடும் சூடாமணியின் கதாபாத்திரங்கள்
ஆர். சூடாமணியின் (1931-2010) எழுத்துக் களைப் படித்து வியக்காத தமிழ் வாசகர்கள் இருக்க முடியாது. அதற்குக் காரணம் அவருடைய எழுத்துக்களில் இருந்த மனித நேயம். மனித மனங்களை, மனச்சிக்கல்களை வெகு ஆழமாக, துல்லியமாகப் புரிந்து கொண்டு, அதை அழுத்தமான எழுத்துக்களில் வடித்தது அவரது சிறப்பு.
பசிப்பிணி தீர்க்கும் அன்னபூரணி
பசிக்குதே யாராவது உணவு தர மாட்டார்களா என்று ஊரடங்கால் வெறிச்சோடிக் கிடக்கும் தெருக்களில் நாலா திசைகளிலும் தேடும் பஞ்சடைந்த கண்கள். பசியால் அழும் குழந்தைகளுக்குப் பால் கிடைக்காமல் பரிதவிக்கும் அன்னைகள். இவர்களைத் தேடி தேடி உணவும் பாலும் பிஸ்கட்டுகளும் மோடிஜி ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து தினமும் சலிப்பில்லாமல் இனிய முகத்துடன் தாய்மையின் பரிவுடன்.....
நெய்வேலியின் 'சிஷ்யகுலம்'
சமீபத்தில் சென்னையில் கர்னாடக இ ைசக கலை நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் ' சிஷ்யகுலம்' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். குருகுலம் தெரியும். அது என்ன சிஷ்யகுலம்? நெய்வேலி அவர்களை இது தொடர்பாக சந்தித்தபோது:
அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி ஆய்வு செய்தவர்!
பெண்கள் ஒருபோதும் பலவீனமானவர்கள் அல்ல. தங்களுக்குள் இருக்கும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வெளிக் கொணர்ந்து எதையும் சாதிக்க முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டானவர்கள் பெண்கள்.
ஊரடங்கு
'ஓம் நமோ பகவதே வாசு தேவாய தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய விநாசநாய தருலோக்யநாதாய மகா விஷ்ணவே நம:'
ஊரடங்கிலும் உற்சாகம்!
எந்த அவசர காலத்திலும் சிலரால் நிதானமாக இருக்கமுடிகிறது. எந்த நிதானமான சூழ்நிலையிலும் சிலரால் சுறுசுறுப்பாக இயங்கமுடிகிறது. சிறந்த கலைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அதை நம்மால் ஊரடங்கு நேரத்தில் உணரமுடிகிறது. மனம் தளர்ந்த பலரது மனங்களை இவர்களால் ரசிக்கும்படியாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற முடிகிறது.
'கடுகு'க்குள்ளே மலையைக் காணலாம்
ஸ்ரீதரின் சுமைதாங்கி படத்தில் "மனிதன் UIS என்பவன் தெய்வமாகலாம்" என்கிற பாட்டில் ஒரு வரி வரும். 'வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்!' என்று. தெரிந்தோ தெரியாமலேயோ, அவருக்கே, கடுகு என்கிற பெயரில் ஒரு நண்பர் அமைந்து, அந்தக் கடுகின் உள்ளே ஓர் இலக்கிய மலையையே நாம் கண்டு விட்டோம்.
பிறவி எழுத்தாளர் வல்லிக்கண்ணன்
'பிறவி எழுத்தாளர்' என மிக அரிதான சிலரையே சுட்ட முடியும். அவர்களுள் முதன்மையானவர் வல்லிக்கண்ணன்.
மது அனைவருக்கும் பொது அமுதசுரபி
"இந்த ஷட்டௌன் வடிகட்டின முட்டாள் தனம்!': சங்கர் எரிச்சலுடன் மனைவி லதாவிடம் அலுத்துக்கொண்டார்.