CATEGORIES
"பிரிந்தவர்கள் மீண்டும் இணையுங்கள்"
சவால் மிக்க ஒரு சூழலில் இந்த தேர்தல் இருப்பதனால் இணங்கி வந்து இந்த தேர்தலுக்கு முகங்கொடுக்குமாறு இரு கரம் நீட்டி அழைக்கின்றோம்
கிழக்கு மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல் பஹ்ரியா பிரகாசிப்பு
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், கல்முனை அல் பஹ்ரியா வித்தியாலயம் பிரகாசித்தது.
பலமான நிலையில் நியூ சிலாந்து
இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் பலமான நிலையில் நியூசிலாந்து காணப்படுகின்றது.
மூன்று வாகனங்கள் மோதி விபத்து; ஒருவர் காயம்
அக்குரஸ்ஸ தெனியாய வீதியில் ஹுலங்தாவ பிரதேசத்தில் வியாழக்கிழமை (19) மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாயின் "சூனியமாகும்”
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது, வாக்களிப்பு நிலையத்தில் 'ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால், அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்க நேரிடும் என்பதுடன், அங்கே மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நெடுந்தாரகை பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தது
நெடுந்தாரகை பயணிகள் படகு சுமார் ஒரு வருடத்தின் பின்னர் வியாழக்கிழமை (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
“சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும்”
தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஜனாதிபதி தெரிவிப்பு
500 பணியாளர்கள் பாதிப்பு
பொலன்னறுவை, பக்கமூன பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 500 பணியாளர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.
சனியன்று விசேட போக்குவரத்து திட்டம்
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு 1,358 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
"9 மாகாணங்களிலும் கண்காணிக்கின்றோம்”
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 32 குறுகிய கால தேர்தல் கண்காணிப்பாளர்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளனர்.
நான்கு துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி
நாடளாவிய ரீதியில், புதன்கிழமை (18) இரவும் வியாழக்கிழமை (19) மாலை 6 மணிக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற நான்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடத் தடை
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளை திரையிட தடை
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“வாக்களிக்குமாறு இரந்து கேட்க முடியாது”
ஆறு முக்கிய விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக 1,124 சூரிய பாடசாலைகளுக்கு மின்சக்தி திட்டம்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் திருகோணமலையில் உள்ள முதல்கட்டமாகத் 348 பாடசாலைகளுக்கு solar panel வழங்கி வைக்கப்பட்டது.
கெஹலியவின் மகனுக்கு தடை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் மகனும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு அதிசொகுசு வீடுகளை கொழும்பு மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது.
முதலாம் நாளில் முன்னிலையில் இலங்கை
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டின் முதலாம் நாளில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.
மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஷீல்ட் றக்பி சம்பியன்ஷிப்: சம்பியனானது மடவள மதீனா தேசிய கல்லூரி
மத்திய மாகாண றக்பி நடுவர் சங்கமும், மத்திய மாகாண றக்பி சம்மேளனமும் இணைந்து மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையே நடத்திய றக்பி தொடரில் மடவள மதீனா தேசிய கல்லூரி சம்பியனானது.
தங்கச் சிலையை திருட முயன்ற இருவருக்கு வலை
புத்தளம் - கருவலகஸ்வெவ, புளியங்குளம், வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையைத் திருடுவதற்காக வருகை தந்த கொள்ளையர்களின் இருவர் கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்திய துணைத் தூதரக அதிகாருகளுடன் சந்திப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் துணை தூதர் அதிகாரிகள் மட்டும் திருகோணமலையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு திருகோணமலையில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (17) மாலை இடம்பெற்றது.
“மீள்கிறது இலங்கை”
இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வியாழக்கிழமை (19) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் இலங்கையின் வங்குரோத்து நிலை முற்றாக முடிவடைந்து அனைத்து நாடுகளினதும் ஆதரவு மீண்டும் நாட்டுக்குக் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இருளில் தள்ளும் அரசியலுக்கு "பலியாகி விடாதீர்கள்”
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது
20 இலட்சம் மேலதிக வாக்குகளால் “வெற்றி நிச்சயம்”
திருடிச் சென்ற அனைத்து சொத்துக்களையும் வளங்களையும் மீண்டும் பெற்றுக்கொள்வோம் இறுதித் தருணத்தில் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் தொலைபேசிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
இருவருக்கு மட்டுமே தனி வாக்களிப்பு நிலையம்
வாக்கெடுப்பு நிலையத்தில் பின்பற்றப்படும் சகல நடைமுறைகளும் இங்குப் பின்பற்றப்படவுள்ளது
விபத்தில் மாணவி பலி
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் தரம் 9 பயிலும் 14 வயது மாணவி வாகன விபத்தில் பரிதாபகரமாக பலியானார்.
வாக்காளர் அட்டையை சனியன்றும் பெறலாம்
இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், தேர்தல் நடைபெறும் தினம் (21) வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
அரியநேத்திரனுக்கு MSD பாதுகாப்பு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்த்தத்தில் ஒருவர் மரணம்; மற்றுமொருவர் மாயம்
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத்தீர்த்த திருவிழாவின் போது, ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
“பதிலளிக்காது தலையை பரிசோதிக்க சொல்கிறார்”
அனுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஓரினச்சேர்க்கை நிலையங்களும் விபசார விடுதிகளும் சட்டப்படி திறக்கப்படும் என்று நான் கூறிய கருத்துக்கு அவர் பதிலளிப்பதை விடுத்து, எனது தலையை பரிசோதிக்க வேண்டுமென கூறியுள்ளார் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.ம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
பரீட்சை திணைக்கள அறிவிப்புக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம்
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் 3 வினாக்களை நீக்கி பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுமாறு பரீட்சை திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பெற்றோர்கள் சிலர் பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக புதன்கிழமை(18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.