CATEGORIES
மின்சாரம், எரிலொருள் அத்தியாவசிய சேவை
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கையை தேடுகிறார் ஆணைக்குழு தவிசாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்த பிரிவைக் கையாள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபரிடம் எழுத்து மூலம் கேட்டுள்ளது.
நாமல் இராஜினாமா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, சர்வதேச தொடர்புகள் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை (06) அறிவித்தார்.
தேர்தல் குண்டா?
மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தைக் கொண்ட தேர்தல் குண்டாகவே தாம் கருதுகின்றோம் என்று தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அடையாளமே தெரியாமல் மாறிய முண்டக்கை
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கிட்டத்தட்ட 500 வீடுகளுக்கு மேல் இருந்த அந்தப் பகுதி, அடையாளமே தெரியாமல் பள்ளதாக்கு போல் மாறியுள்ளது காண்போரை கலங்கச் செய்கின்றது.
"தொங்கு பாலத்தை மொட்டு உடைத்தது"
நாட்டில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது ஒன்றாக இணைந்து மோசடியில் ஈடுபட்டு வந்த தரப்பினர் இன்று ரணிலின் பக்கமும், மற்றொரு தரப்பு மஹிந்தவுடன் கூடியிருக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
செந்திலிடம் கிழக்கின் ஆதரவை கேட்டார் ஜனாதிபதி
ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது.
மத்தியக்கிழக்கில் போர் பதற்றம்
இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இன்று அல்லது அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரிஸ் 2024: 100 மீற்றரில் மகுடம் சூடிய லைல்ஸ்
பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 27 வருட கால மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.
"வித்யார்வதன ஆரம்பம்”
அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவனம் இணைந்து நடாத்தும் பெருந்தோட்டத் துறையின் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டம் \"வித்யார்வதன - VIDHYAWARDANA\" ஆரம்பித்து வைக்கப்பட்டது.
"தாயின் அறிவுரையை கேட்டேன் இணைந்தேன்"
தனது தாய் கூறியதன் காரணமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவெடுத்தாக மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?
ஆளும் கட்சிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
"தனிப்பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உள்ளது"
அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் சிக்கல் இருக்காது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு
2024.09.21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது தேருநர் இடாப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள தேருநர்களுக்கு நாட்டின் எந்தவொரு வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்களிப்பதற்குரிய வசதி செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழுவின் எந்தவொரு உத்தியோகபூர்வ தீர்மானமும் அல்லாத, முற்றிலும் உண்மைக்குப் புறம்பான விடயங்களை உள்ளடக்கிய பிழையான ஒரு செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வலம் வருகிறது.
வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை மனு நிராகரிப்பு
மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் திங்கட்கிழமை (05) உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் எம்.பி அமரசிங்க போட்டி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க கட்டுப்பணத்தை திங்கள்கிழமை (5) காலை வைப்பிலிட்டுள்ளார்.
"கங்காராம பொடி ஹாமுதுருவோ'வின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்
இந்நாட்டில் அனைவராலும் 'கங்காராம பொடி ஹாமுதுருவோ' என்று அழைக்கப்பட்ட, கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்ஸர தேரரின் பூதவுடல், திங்கட்கிழமை (05) மாலை அக்கினியுடன் சங்கமமானது.
பங்கதேசத்தில் இராணுவ ஆட்சி ஷேக் ஹசீனா ராஜினாமா
ஹெலியில் இந்தியாவுக்கு பறந்தார்?
காத்தான்குடியில் கையெழுத்து வேட்டை
34 வது வருட சுஹதாக்கள் ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், கொரோனா காலத்தில் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்தல் தொடர்பான பக்க சார்பற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காத்தான்குடியில் கையெழுத்து பெறும் நடவடிக்கை சனிக்கிழமை (03) முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை சாஹிரா வென்றது
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பிரிவு மூன்று 17 வயதுக்குட்பட்ட கடினபந்து கிரிக்கெட் தொடரின் முதலாவது சுற்றுப் போட்டியின் தமது முதலாவது சுற்றில் அம்பாறை பதியத்தலாவ தேசிய பாடசாலையை கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி வென்றது.
தாக்குதலில் 32 பேர் பலி
சோமாலியா தலைநகர் மொகதிஸில் உள்ள பிரபலமான லிடோ கடற்கரையில் சனிக்கிழமை (02) இரவு பொது மக்கள் அதிகளவில் திரண்டிருந்த இடத்தில், அல் - ஷபாப் பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலைப் படைதாக்குதல் நடத்தினார்.
மீண்டும் ஹிஸ்புல்லா
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பலஸ்தீனத்தின் முக்கிய நகரமான காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
சிகரெட்டுக்களுடன் கல்முனைவாசி கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 18 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வந்த கல்முனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
"வாக்களிப்பது கடமை”
எமது வாக்கு நமது உரிமை என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது ஆனால் இம்முறை வருகின்ற தேர்தலில் எமது வாக்குரிமையை நமது கடமையாக நினைத்து வாக்களிக்க வேண்டிய நேரம் வருகிறது. என்று அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்
“தமிழகத்தில் ஏற்படும் மாற்றத்தால் இலங்கையர்களுக்கு வாய்ப்பு
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண மக்கள் நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற போதிலும், அந்த மாகாணத்தில் பாரிய பொருளாதார திறன் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த சந்தர்ப்பங்களைப் வடக்கு மாகாணம் உட்பட முழு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மு.கா உயர்படத்தில் இருந்து பிரதிப் பொருளாளர் வெளியேற்றம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கழமை (04) கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது.
“ரணிலை தோற்கடிக்க நால்வர் சூழ்ச்சி”
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க சஜித் பிரேமதாஸ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, தம்மிக்க பெரேரா ஆகியோர் இரகசிய சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் திரு.பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை மாணவர்கள் நால்வரும் காலியில் மீட்பு
தலவாக்கலை கிரேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் இருந்து ஜூலை 14 ஆம் திகதி முதல் காணாமல் போன பாடசாலை மாணவிகள் மூவரும் மாணவனும் 22 நாட்களுக்கு பின்னர், காலி பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி அமைப்பாளர் துரை மதியுகராஜா
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளர் துரை மதியுகராஜா,ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.