CATEGORIES
ஆயுதங்களுடன் மௌலவி மாட்டினார்
மட்டக்களப்பு மாஞ்சோலை பிரதேசத்தில் மௌலவி ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
“92 பேரில் சிலர் நடிக்கின்றனர்"
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து யார் வெளியேறினாலும் கட்சியை விட்டு வாக்காளர்கள் வெளியேற மாட்டார்கள். மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர வேறு எவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் அவர்களால் வாக்குகளைப் பெற முடியாது என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, புதன்கிழமை (31) தெரிவித்தார்.
‘ஜனாதிபதி சாரணர் பதக்கம்'
சாரணர் இயக்கம், கெடட் படைப் பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளை சகல வழிகளிலும் பலப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பரந்த பங்களிப்பைப் பெறுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தாய்ப்பாலூட்டல் வாரம் ஆரம்பம்
தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் திகதி வரையிலான ஒரு வாரம் சர்வதேச தாய்ப்பாலூட்டல் வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
கனடா செல்ல இருந்தவர் கழுத்து நெரித்து கொலை
வவுனிக்குளத்தில் இருந்து புதன்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
VFS விசா ஒப்பந்தத்துக்கு எதிராக TISL மனுத் தாக்கல்
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவதற்கான இலத்திரனியல் பயண அனுமதி முறையை (ETA) கையாளுவதற்கு தனியார் நிறுவனங்களைக் ஒப்பந்தம் செய்யும் போது அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் நடைமுறை மீறல்கள் மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை ஜூலை 30 ஆம் திகதி தாக்கல் செய்தது.
மூன்று குழுக்களை நியமித்தார் ஜனாதிபதி
இரானில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனி படுகொலைச் செய்யப்பட்டதை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், ஜூலை 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்படுவது ஏன் யூகித்து, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை கொள்வனவு செய்யாத காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"மொட்டின் முடிவை ஏற்கவே முடியாது”
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மனசாட்சி உள்ளவர்கள் என்றவகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, கடிதமொன்றை புதன்கிழமை (31) அனுப்பிவைத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆயுர்வேத வெற்றிக் கிண்ணத் தொடர் கல்முனை சம்பியன்
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆயுர்வேத நலன்புரிச் சங்கத்தால் நடாத்தப்பட்ட “கிழக்கு மாகாண ஆயுர்வேத வெற்றிக் கிண்ணம் - 2024\" கிரிக்கெட் தொடரில் கல்முனை பிராந்திய ஏ அணி சம்பியனானது.
நிலச்சரிவுக்கு தமிழகம் சார்பில் 5 கோடி நிவாரணம்
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 கோடியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
காதலனுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்த சிறுமி
மேற்கு வங்க மாநிலத்தில் 14 வயது சிறுமியும் அவரது காதலனும் சேர்ந்து சிறுமியின் தாயைக் கொலை செய்து நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பரிஸ் 2024: வெளியேறிய நடால்
பினான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் பில் ஆண்களுக்கான தனிநபர் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஸ்பெய்னின் ரஃபேல் நடால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
கிராம சேவக உதவியாளர் பாகுபாடு பெண் ஆர்ப்பாட்டம்
நவாலி, வடக்கு ஜே/134 கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரின் உதவியாளராக செயல்படும் பெண்ணொருவர், உதவித் திட்டங்களில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண் குறித்த கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பாடசாலை மாணவன் மீது தோட்ட அதிகாரி தாக்குதல்
அமைப்பாளர் ரூபன் பெருமாள் கடும் கண்டனம்
“கூட்டணியாக செயற்பட தீர்மானம்”
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், இலங்கை விவசாயிகள் சங்கமும் ஒன்றாக இன்று சங்கமித்து உள்ளன. எனவே, இனிவரும் காலப்பகுதியில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் இந்த கூட்டணி தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு: உதவியை இந்தியா இரட்டிப்பாக்கியது
இந்திய அரசின் 300 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, 2019.06.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஃப்ளுவன்ஸா வேகமாக அதிகரிப்பு
இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால், கொவிட் 19 தொற்றின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட்டின் புதிய யாப்பு சட்டமாகிறது
இலங்கை கிரிக்கெட் இற்கான புதிய யாப்பு வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால செயலக இணையத்தளம்
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் (ISTRM) உத்தியோகப்பூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
“மீயுயர் சட்டத்தை மீறுகிறார் ஜனாதிபதி"
ஜனநாயகத்தின் 3 தூண்களுக்குமிடையே இருக்க வேண்டிய தடைகள் மற்றும் சமன்பாடுகள் உட்பட ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பும் முற்றிலுமாக சீரமிக்கப்பட்டு வருகின்றன.
காத்திருந்த இளைஞன் சடலமாக மீட்பு
வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று வடக்கில் இடம்பெற்றுள்ளது.
வயநாட்டை புரட்டி போட்டது நிலச்சரிவு
கேரள மாநிலம், வயநாட்டில், செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.
பிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் அழைப்பு
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சரவையை உயர் நீதிமன்றம், அழைத்துள்ளது. இந்த அழைப்பு, தெளிவுப்படுத்தலுக்காக, திங்கட்கிழமை (29) விடுக்கப்பட்டுள்ளது.
முட்டை இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி
இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபனத்தால் இதுவரைக்கும் 224 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
'ரணிலை சந்தித்தவர்கள் என்னையும் சந்தித்தனர்"
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக சென்ற சிலர் தனது வீடுகளுக்கு வந்து ஆதரவு தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐ.ஜி.பி பிரச்சினையை “தீர்க்கவும்”
பொலிஸ் மா அதிபர் (IGP) தொடர்பில் தற்போது நிலவும் பா, பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
பெல்ஜியம் குரான் பிறீ: வென்ற ஹமில்டன்
பெல்ஜியம் குரான் பிறீயை மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் வென்றார்.
நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாக சபை நியமனம்
நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் 90ஆவது பொதுக்கூட்டம் நுவரெலியா கூட்டுறவு விடுதியில் ஞாயிற்று கிழமை (28) நடைபெற்றது.
சூரிய மின் உற்பத்திக்கு எதிர்ப்பு
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (29) அன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.