CATEGORIES
ஒன்-நைட் ஸ்டாண்ட் முறையை ஒப்புக் கொண்ட நடிகர், நடிகைகள்
சல்மான் கான் முதல் சன்னி லியோன் வரை ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’ குறித்து ஒப்புக் கொண்ட பிரபலங்கள் குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது
சங்ககிரி அருகே டூவீலர் மீது மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் உயிரிழந்தார்.
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மலையேற்ற திட்டத்தை கைவிட கோரி வழக்கு
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 40 மலையேற்ற பயண திட்டத்தை அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 2.153 போலீசாருக்கு பணியிட மாறுதல்
தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார்.
கொரோனா காலத்தில் ₹14 கோடி முறைகேடு எடியூரப்பா மீது வழக்கு பாய்கிறது
கர்நாடகாவில் கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ரூ.14 ேகாடி முறைகேடு நடந்துள்ளதால், அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா மீது வழக்கு பதிய ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.
தொழிலாளர்கள் பற்றாக்குறை அயோத்தி ராமர் கோயில் பணிகள் முடிவதில் தாமதம்
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான குழுவின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
பேரவைக்கு செல்ல முடியாவிட்டால் ஜெகனுக்கு எம்எல்ஏ பதவி எதற்கு?
தங்கை ஷாமிளா பாய்ச்சல்
தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா துவக்கம்
தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா நேற்று காலை தொடங்கியது.
முதல்ல உங்க கட்சி ஸ்டிராங்கா இருக்கா? அப்புறம் ஸ்டிராங்க் கூட்டணி பார்க்கலாம்...
முதலில் உங்க கட்சி வலுவான கட்சியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். அதற்கு பின் வலுவான கூட்டணியை பற்றி பார்க்கலாம் என்று எடப்பாடியை பாலகிருஷ்ணன் கலாய்த்து உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஊட்டி, கொடைக்கானலில் தீவிர இ-பாஸ் சோதனை
உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, ஊட்டி, கொடைக்கானல் வரும் வாகனங்களில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கை 34 இடங்களை வீணாக்கிய மாணவர்கள்
நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 6 எம்பிபிஎஸ் இடங்கள், 28 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
பாஜ மாநில நிர்வாகி மிளகாய்பொடி வெங்கடேசன் வீட்டில் போலீசார் சோதனை
செங்குன்றம் அருகே பாஜ மாநில நிர்வாகி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 13 பேட்டரி வாக்னங்கள் இயக்கம்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் இலவச பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 9ல் இருந்து 22ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய ஒட்டுண்ணிகளாக இருந்தவர்கள் காங்கிரஸ் மீது குற்றம்சாட்ட எந்த அருகதையும் கிடையாது
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: மகாராஷ்டிர மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
186 ஏக்கர் தரிசு நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்ட விவகார தவறாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை
சென்னை உயர் நீதிமன்றத்தில் தெய்வானை சிங்காரவேலு என்பவர் கடந்த 2022ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், கடலூர் மாவட்டம், சிலம்பநாதன்பேட்டை ஊராட்சியில் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 186 ஏக்கர் தரிசு நிலத்தை அரசு ஒப்புதல் பெறாமல், நஞ்சை நிலமாக வகை மாற்றம் செய்து பலருக்கு பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் கனமழை பெய்யும்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கன முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விருதுநகரில் 2 நாள் கள ஆய்வு பட்டாசு தொழிலாளர்களுடன் முதல்வர் பேச்சு
விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வு மேற்கொண்டார்.
முதல்நிலை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு குரூப் 2 பணியிடம் 2540 ஆக உயர்வு
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
திருச்சி, மதுரையுடன் சேர்த்து சென்னை விமான நிலையத்தையும் தனியார்மயமாக்க ஏற்பாடு
பட்ஜெட்டுக்கு பிறகு பணிகள் தொடக்கம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதானவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் பேச்சு போட்டி
ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் பேச்சு போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்படுகிறது.
மனைவி நடத்தையில் சந்தேகம் கத்திரிக்கோலால் குத்தி டெய்லர் தற்கொலை
திருமணம் நடந்த 6 மாதத்தில் மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் டெய்லர் ஒருவர் தன்னைத் தானே கத்திரிக்கோலால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.
வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற இந்தியா தகுதியானது
வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெறுவதற்கு இந்தியா தகுதிவாய்ந்தது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
சமோசா மாயமானது பற்றி விசாரணையா?
இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கடந்த மாதம் சிஐடி, அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டி 20 போட்டி சஞ்சு சாம்சன் அதிரடியில் இந்தியா அபார வெற்றி
தென்ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஆட்டம் தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடைபெற்றது.
இந்தியா ஏ அணி மீண்டும் சொதப்பல்
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும், இந்தியா ஏ – ஆஸி ஏ இடையிலான அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்டின், 2ம் நாள் ஆட்டத்தில், இந்திய வீரர்கள் சொதப்பலாக ஆடி, 5 விக். இழப்புக்கு 73 ரன் எடுத்துள்ளனர்.
ஓட்டல் பிசினஸில் கோலிவுட் பிரபலங்கள்
கோலிவுட் பிரபலங்கள் பலர் சமீபத்தில் ஓட்டல் பிசினஸில் இறங்கியுள்ளனர்.
சென்னையில் அனுமதியின்றி போராட்டம் அர்ஜூன் சம்பத், கார் டிரைவருடன் கைது
கனடா நாட்டில் இந்து கோயிலுக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அனுமதியின்றி அண்ணாசாலையில் போராட்டம் நடத்த முயன்ற அர்ஜூன் சம்பத், அவரது கார் டிரைவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கனடா நாட்டில் இந்து கோயிலுக்கு சென்ற இந்துக்கள் மீது அந்நாட்டில் வசித்து வரும் காலிகிஸ்தான் ஆதரவார்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
எனது உயிர் போகும் முன்பு மோடியிடம் மேகதாது அணை கட்ட அனுமதி பெற்றுத்தருவேன்
எனது கடைசி மூச்சை விடுவதற்கு முன்பு மேகதாது திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் இருந்து அனுமதியை பெற்றுத் தருவேன் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.
மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை ஏற்க மோகன்லால் மறுப்பு
மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்குப் பின் முன்னணி நடிகர்கள், டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்தன.