![அகவையை அனுபவித்தல்!](https://cdn.magzter.com/1409397437/1688359535/articles/EsFJ6yRQ31688536000000/1688537580508.jpg)
இந்த ஒவ்வாமை ஏன் வருகிறது?
வயதாகுதல் என்பதை நோய் என்றே நாம் புரிந்து கொள்கிறோம். இது முதல் பிழை. அடுத்து வயதான பெரும்பாலானோர் உடல் மற்றும் உளச்சிக்கலை கொண்டவர்களாக மாறிவருவதை பார்த்து, நமக்கு இது நிகழக்கூடாது என நினைக்கிறோம். ஆகவே நாற்பது வயதிற்கு மேல் யாராவது வயது பற்றி பேசினாலே சிறு பதற்றம் கொள்கிறோம்.
நாம் அகவையடைதலை நவீனமும் , மரபும் எப்படி அணுகுகிறது என்பதை தெரிந்து கொண்டால், போலி பாவனைகள் ஏதுமின்றி வயதை சரியாக நிர்வகிக்க கற்றுக்கொள்வோம்.
நவீன அறிவியல் ஒவ்வொரு உறுப்பு மண்டலங்களிலும் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை பட்டியலிட்டிருக்கிறது.
வயதாக வயதாக நமது இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தடித்தும், இறுக்கமாகவும் மாறிவிடுவதால், உயர் ரத்த அழுத்தம் முதல் இதயத்தில் அடைப்பு வரையான உபாதைகள் தொடங்குகிறது.
எலும்பு மண்டலங்கள் சுருங்கத் தொடங்குகிறது, அதையொட்டி தசைகள் அதன் திடத்தன்மையை இழக்கிறது, இந்த இரண்டு காரணிகளால் கூன் போடுதல் உயரம் குறைதல் நிகழ்ந்து இணைப்புகளில் சமநிலை குலைகிறது. அதை தொடர்ந்து கைத்தடியின் துணையோ பிடிமானமோ இல்லாதபோது உடல் நடுக்கமும் தடுமாற்றமும் அதிகரிக்கிறது.
ஜீரண மண்டலத்தில் பெருங்குடலின் அமைப்பும், அளவும் மாறிவிடுவதால், உடலிலிருந்து கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் உருவாகிறது. போதிய நீர் அருந்தாமை அல்லது சிறுநீரக மண்டலம் சரியாக இயங்காமை போன்ற உபாதைகள் வயது கூடும் பொழுது நிகழ்வது இயற்கையே. அத்துடன் நினைவுத்திறனும், சிந்திக்கும் திறனும் குறைந்து விடுவதும் நிகழ்கிறது.
மேற்சொன்ன அனைத்து பிரச்னைகளுக்கும் துல்லியமான தீர்வுகளையும் அறிவியல் முன்வைக்கிறது. அதே வேளையில் மருந்து மாத்திரைகளால் உண்டாகும் பக்கவிளைவுகளையும் பட்டியலிடுகிறது. வயதானவர்களுக்கே இதன் தாக்கம் அதிகமாக நிகழ்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
வயது விகிதம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் சராசரி வயது விகிதம் 35-40ஆக இருந்தது. இன்று 70 வயதாக உயர்ந்திருக்கிறது. இந்திய மரபில் நூறு வயது என்பது வாழ்வை நான்கு பகுதிகளாக பிரித்து அறிந்து கொள்ள சொல்லப்படும் ஒரு காலக்கணக்கு.
この記事は Kungumam Doctor の July 01, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam Doctor の July 01, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/pdtlF4F_S1706785532150/1706785625369.jpg)
இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்
ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பருவத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல்கட்டம், பூப்பெய்தும் வரை. அடுத்தது, குழந்தைப்பேறு அடையும் பருவம்.
![எளிய மருத்துவம்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/BguKajRvu1706785350088/1706785527058.jpg)
எளிய மருத்துவம்!
வேப்பம் பூ ரத்தத்தை சுத்தப்படுத்தும். பித்த நோய்களை குணப்படுத்தும்.
![பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/hlFmxYxnO1706784739967/1706785326482.jpg)
பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்
சில வாரங்களுக்கு முன், நன்றாக படித்த, பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண், தன் மகனைக் கொலை செய்து விட்டார் என்று செய்தித்தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் பார்க்க முடிந்தது.
![ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/EDQlCh5yg1706784600816/1706784704130.jpg)
ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!
உடலில் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால்தான் உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.
![உலர்திராட்சையின் நன்மைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/nD_maF_dd1706784400955/1706784595094.jpg)
உலர்திராட்சையின் நன்மைகள்!
ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை.
![சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/MUGljrvju1706783603452/1706784395552.jpg)
சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!
வலி சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை.
![இரைப்பை புற்றுநோய் அறிவோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/1WrVK1oUj1706783302463/1706783595008.jpg)
இரைப்பை புற்றுநோய் அறிவோம்!
ஆனால், ஜப்பானைவிட இந்தியாவில் குறைவாகதான் காணப்படுகிறது.
![குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/CuOAdihFa1706782948810/1706783093508.jpg)
குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!
நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்தால் வகிப்பது கீரைகள்.
![சுத்திகரிப்பின் சூட்சுமம்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/MPTIBoP5D1706782744292/1706782942619.jpg)
சுத்திகரிப்பின் சூட்சுமம்
கோடையின் மாலை வேளையில் நீங்கள் வீடு திரும் | புகிறீர்கள், உடல் சோர்வும், களைப்பும் நிறைந்து இருக்கிறது. எனினும் வீட்டில் உங்களை சந்திக்க முக்கிய மான ஒருவர் வருவதாக சொல்லியிருக்கிறார்.
![கழுத்து வலி காணாமல் போக...](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/XH-XLeQ1T1706782428241/1706782734630.jpg)
கழுத்து வலி காணாமல் போக...
மத்திய வயதுள்ளவர்களுக்கு இன்று அதிகம் தொல்லை தருவது கழுத்துவலி.'செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டிஸ்' (Cervical Spondylitis) என்று மருத்து வர்கள் இதை அழைக்கிறார்கள்.