CATEGORIES
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3,000 போலீஸார் பாதுகாப்பு
காஞ்சி/செங்கை திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (மே 2) நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
கத்தி', தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்
மாரி, ராஜா ராணி, கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் செல்லதுரை (84) நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.
50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க கடைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்
அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் காயமடைடைந்த சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்.
சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ம் தேதி வரை கோடை விடுமுறை
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளை விசாரிக்க 8 நாட்கள் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும் எனவும் சென்னை உயர் நீதி மன்றம் அறிவித்துள்ளது.
மாநில அரசுகளிடம் 1 கோடி டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது
மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் .
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்
ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வரவேற்பு
நகை கடைகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க கோவையில் தங்க காசு ஏடிஎம் தொடக்கம்
கோவை கிராஸ் கட் சாலையில் 'கோல்ட் ஆன் தி கோ' என்ற பெயரில் தங்கக் காசு ஏடிஎம் மையம் நேற்று தொடங்கப்பட்டது. தங்கம் வாங்க நினைக்கும் பொதுமக்கள் தங்கக் காசு ஏடிஎம் மூலம் 2 நிமிடங்களில் பணமாக செலுத்தியோ, ஆன்லைன் முறையில் பணம் செலுத்தியோ தங்கக் காசுகளை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து லட்சத்து 63 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருப்பு
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 63 லட்சத்து 63 ஆயிரம் பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 1-ம் தேதி முழு ஊரடங்கு தேவையில்லை
18 வயதினருக்கு தடுப்பூசி பணி தொடக்கம். உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
கோவேக்சின் கரோனா தடுப்பூசி விலை குறைப்பு
மாநில அரசுகளுக்கான கோவேக்சின் கரோனா தடுப்பூசி விலை ரூ.600-ல் இருந்து ரூ.400 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி 2 நாள் சிறப்பு முகாம்
மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளுக்கான மறு தேர்வு ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களுக்கான மறு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்துக்கே ஆக்சிஜன் தந்த கலெக்டருக்கு பாராட்டு
பல மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்க, மகாராஷ்டிராவில் நந்துர்பார் என்ற பழங்குடியினர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து அசத்தி வருகிறார் ஐஏஎஸ் அதிகாரிடாக்டர் ராஜேந்திர பாருத்.
வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
பக்தர்கள் வருகையை தடுக்க 144 தடை
ரூ.75 கோடி சம்பளம் வாங்கிய ரிலையன்ஸ் முன்னாள் அதிகாரி ஜைன மத துறவியானார்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் வலது கரமாகத் திகழ்ந்தவர் பிரகாஷ் ஷா (64). இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் திட்டப் பிரிவு துணைத் தலைவராக இருந்தவர்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்பாடு வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகளுக்கு கரோனா பரிசோதனை
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றன.
திருவண்ணாமலை பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது
தலைமறைவாக இல்லை என பாஜக வேட்பாளர் தரப்பு விளக்கம்
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பாளர்கள் மனு
தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு
சோலார் பேனல் ஊழல் வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை
கேரள மாநிலம் திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய நகரங்களில், 'சோலார் சிஸ்டம்ஸ்' என்ற பெயரில், சூரிய மின் உற்பத்தி தகடுகள் (சோலார் பேனல்) அமைக்கும் நிறுவனத்தை நடிகை சரிதா நாயர் நடத்தி வந்தார்.
நெஹ்ராவும் 12 அறுவைச் சிகிச்சைகளும்
இந்திய கிரிக்கெட் அணியில் நீண்டகாலம் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஆசிஷ் நெஹ்ராவின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 29).
தனியார் ஓட்டல்கள், மருத்துவமனைகளில் கோவிட் மையங்களை தொடங்க சென்னை மாநகராட்சி அனுமதி
சென்னையில் தனியார் ஓட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளில் கோவிட் பராமரிப்பு மையங்களைத் தொடங்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
ஆளுநருடன் தலைமைச் செயலர் சந்திப்பு
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த வணிகம் 11.45 சதவீத வளர்ச்சி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 2020-21 நிதியாண்டுக்கான தணிக்கை முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை வங்கி இயக்குநர்கள் முன்னிலையில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கே.வி. ராமமூர்த்தி வெளியிட்டார்.
தமிழகத்தில் புதிதாக 15,830 பேருக்கு கரோனா
முதியவர்கள் உட்பட 77 பேர் உயிரிழப்பு
கரோனா பாதிப்பால் திரைப்பட இயக்குநர் தாமிரா காலமானார்
கரோனா தொற்று காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திரைப்பட இயக்குநர் தாமிரா காலமானார். அவருக்கு வயது 53.
ரூ.28 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் உட்பட 2 பேர் தலைமறைவு; இருவர் கைது
ராணுவத்தில் சேர மறுத்த முகமது அலி
வியட்நாம் போரில் பங்கேற்க அமெரிக்க ராணுவத்தில் சேருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முகமது அல் புறக்கணித்த நாள் ஏப்ரல் 28, 1967.
தொலைத்தொடர்பு சேவை வழங்குவது தொடர்பாக இந்தியன் வங்கி, பிஎஸ்என்எல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
தொலைத்தொடர்பு சேவை வழங்குவது தொடர்பாக, இந்தியன் வங்கி மற்றும் பி எஸ் என் எல் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை வைகை ஆறு வெண் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை அழகர்கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் கோயில் வளாகத்தில் செயற்கையாக உருவாக்கப் பட்ட மாதிரிவைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் வெண் பட்டு உடுத்தி கள்ளழகர் நேற்று இறங்கினார்.