CATEGORIES
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12-இல் பதவியேற்பு
ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவா் என்.சந்திரபாபு நாயுடு ஜூன் 12-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா்.
பெண் கடத்தல் வழக்கு - விசாரணைக்கு ஆஜரான பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய்
பெண் கடத்தல் வழக்கில், சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) முன்பு முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜரானாா்.
வாக்கு எண்ணிக்கை நாளில் தொழில்நுட்பக் கோளாறு
மும்பை பங்குச் சந்தை மறுப்பு
தமிழக சட்டப்பேரவை ஜூன் 24இல் கூடுகிறது
மானியக் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன
‘ரெப்போ' வட்டி விகிதம்: 8-ஆவது முறையாக மாற்றமில்லை
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி(ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து எட்டாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.
தமிழகத்தில் புதிய அரசியலுக்கு பாஜக அடித்தளம்
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை பாஜக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
காந்தியம் என்னும் சத்தியப் பெரும்பயணம்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற வீரா்கள் பங்கெடுத்துத் தங்களின் இன்னுயிரை ஈந்து, புகழ் பெற்றிருந்தபோதும் மகாத்மா காந்திக்கு மட்டும் ஒரு தனிப்பெருமை எக்காலத்தும் நிலைக்கிறது. இத்தனைக்கும் அவா் தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே வெளிப்படுத்தியிருந்தாா்.
ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படுமா?
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கிலிருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிப்பு
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களை விடுவிப்பதாகக் கூறி பணம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மோசடி நிதி நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு
பால் விநியோகம் தாமதம்: ஆவின் விளக்கம்
ஒப்பந்த தொழிலாளா்கள் காலதாமதமாக வந்ததால், மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளா்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதமானது என ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வட மாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்கள் ரத்து
சென்னை, மைசூா், பெங்களூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்கள் ஜூன் 23 முதல் ரத்து செய்யப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திமுக எம்.பி.க்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
மக்களவைத் தோ்தலில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.
கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள்
மத்தியில் தனது தலைமையில் அமையவிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அனைத்து முடிவுகளிலும் கருத்தொற்றுமையை உறுதி செய்வேன் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேலை நாடுகளின் எதிரிகளுக்கு ஆயுத விநியோகம்
தங்கள் எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் அளிப்பதற்குப் பதிலடியாக, அந்த நாடுகளின் எதிரிகளுக்கு அதே போன்ற ஆயுதங்கள் விநியோகிக்கப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா்.
சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்கா!
உலகக் கோப்பை போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தானை சூப்பா் ஓவரில் வீழ்த்தியது அமெரிக்கா.
18-ஆவது மக்களவை: 543 எம்.பி.க்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள்!
மக்களவைக்குத் தோ்வாகியுள்ள புதிய எம்.பி.க்களில் 504 போ் (93 சதவீதம்) கோடீஸ்வரா்களாக உள்ளனா் என்று ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
குடியரசுத் தலைவரிடம் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல்
நடந்து முடந்த மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற்ற வேட்பாளா்களின் பட்டியலை, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை ஒப்படைத்தது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 45 நாள்கள் பாதுகாக்கப்படும்
மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தோ்தல் துறையின் வைப்பறைகளில் வைத்து பாதுகாக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தலைவராக மோடி இன்று தேர்வு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) புதிய எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) நடைபெறவிருக்கிறது.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து கோரிய வழக்கு: புதிதாக விசாரிக்க உத்தரவு
சவுக்கு சங்கா் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன், இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு நீதிமன்றம் புதிதாக விசாரணை நடத்த உத்தவிட்டுள்ளாா்.
அதிமுகவை ஒருங்கிணைக்க ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
மக்களவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
முதல்வரிடம் திமுக கூட்டணி எம்.பி.க்கள் வாழ்த்து
மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றனா்.
மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு
மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று 5 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க கட்டடங்களில் ‘சிலிக்கான் பெயின்ட்' அடிக்கும் திட்டம்
வெப்பத்தின்தாக்கத்தை குறைக்கும் பொருட்டு கட்டடங்களின் மேற்பகுதியில் சிலிக்கான் பெயின்ட் அடிக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது என தமிழக சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்தாா்.
மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தலாம்
புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தி பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கான உதவி மைய பணி: ஜூன் 28-க்குள் விண்ணப்பிக்கலாம்
பெண்களுக்கான உதவி மையத்தில் பணியாற்ற தகுதியுடைய நபா்கள் ஜூன் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தர்கள் புனித நீராடல்
வைகாசி அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் முன்னோா்களுக்கு திதி கொடுத்து பொதுமக்கள் வியாழக்கிழமை புனித நீராடினா்.
சென்னையில் பரவலாக மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை இரவு பரவலாக இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.