CATEGORIES
"அச்சமின் சாப்பிடுங்கள்”
சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அரிசியை மக்கள் அச்சமின்றி உட்கொள்ளுமாறு, சுங்க திணைக்கள பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
மின் கட்டண திருத்தம் இன்று...
மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறுமி பலி; நபர் கைது
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபர் தப்பிச் சென்ற நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை(16) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிறுத்திய போது நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.
நீதியமைச்சர் CID இல் முறைப்பாடு
பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (16) முறைப்பாடு செய்துள்ளார்.
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு; தொடர்ந்தும் விளக்கமறியல்
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா TI0 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியப் பிரஜை பிரேம் தக்கரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
CID இல் ஆஜராகாத யோஷித
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரான மேஜர் நெவில் வன்னியாராச்சி திங்கட்கிழமை (16) ஆகியோரை விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் நடைபெறவுள்ளது.
மைத்திரி உரிமை கோர மாட்டார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு எதிர்காலத்தில் எந்த உரிமையும் கோரப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி ஊடாக திங்கட்கிழமை(16) மேன்முறையீட்டு தெரிவித்துள்ளார்.
"முதலாவது கூட்டத்திலேயே பொருத்தமானது”
நிலையியற் கட்டளைச் சட்டங்களின் பிரகாரம், பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்திலேயே சபாநாயகரை நியமிப்பதே பொருத்தமானது என, சட்டத்தரணி கலாநிதி பிரதிபா மஹாநாம் தெரிவித்துள்ளார்.
அருச்சுனா உட்பட இருவருக்கு பிணை
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோரை தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
அரிசி இறக்குமதி தாமதம்
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, திங்கட்கிழமை(16), நாட்டுக்கு வரவிருந்த போதிலும், அது எதிர்வரும் 19ஆம் திகதி வரை தாமதமாகலாம் என, அரச வர்த்தக(பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பிரேரணை கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று தாக்கல்
\"ஒரே நாடு, ஒரே தேர்தல்\" தொடர்பான பிரேரேணைகள், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பாராளுமன்றத்தில், இன்று (16) தாக்கல் செய்யப்படவுள்ளது.
சிம்பாப்வேக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு ] 20 சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேஷியா
இந்தியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது நாள் முடிவில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.
பில் கேட்ஸ் சொத்துக்களை இழக்க போகிறார்?
உலக பணக்காரர்களான மைகோரோசாப்ட் நிறுவர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் நீண்ட நாள் பகையாளிகள்.
சதுரங்கத்தில் புதிய சகாப்தம்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில், உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷுக்கு தங்கப் பதக்கம், டிராபியுடன் ரூ.11 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
1.5 மில்லியன் பயனாளிகளைக் Combank Digital கடந்துள்ளது
இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது தனது டிஜிட்டல் புரட்சியில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது, வங்கியின் ஓம்னி - ஊடக டிஜிட்டல் வங்கித் தளமான 'கொம்பேங்க் டிஜிட்டல்' - 1.5 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளை கடந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை “நிறுத்த உதவுங்கள்"
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என கிழக்கு மாகாண பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
புதிய சபாநாயர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரை
\"கலாநிதி பட்டம்' தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து, அசோக்க ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
வெள்ளவத்தையில் போதைப்பொருள் விநியோகித்தவர் சிக்கினார்
வெள்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் பெரும் பணக்காரர்களின் பாவனைக்காக பாரியளவில் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப் பொருட்களை கடத்தியவர் உட்பட இருவர் மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படை அதிகாரிகளால் சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவார்கள்"
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவார்கள். சிலர் இடை நிறுத்தப்படுவார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மீகொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மீகொட, நாகஹவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சபாநாயகரின் பதவி வெற்றிடமானது
சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமாவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
ஆளும் கட்சி எம்.பிக்களின் 'தகைமை' அறிய தீர்மானம்
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயர் கல்வி தகைமைகள் குறித்து ஆராய்வதற்கு புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்றில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளது.
சபாநாயகர் பதவிக்கு சஜித் அணியும் போட்டி
புதிய சபாநாயகரை தெரிவு செய்யும் போது, ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரின் பெயரை ஆளும் கட்சி முன்மொழிய உள்ள நிலையில் இதற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் பெயரினை தாங்கள் முன் மொழிய உள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
2024 இல் அதிகமாக கடன்களை பெற்று பெரும் நெருக்கடிக்குள் அரசாங்கம் வீழ்ந்துள்ளதா?
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
எலிக்காய்ச்சலால் 8 ஆவது மரணம்
யாழில், எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் சனிக்கிழமை (14) உயிரிழந்தார்.
ஜனாதிபதி அனுர குமாரவின் முதலாவது இராஜதந்திர விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியாவுக்கு இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (15) புறப்பட்டுச்சென்றார்.
அகதிகள் விவகாரத்துறை அமைச்சு அலுவலகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்
ஆப்கானிஸ்தானில், அகதிகள் விவகாரத்துறை அமைச்சு அலுவலகத்தில், புதன்கிழமை (11) காலை நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், அமைச்சர் கலில் ஹக்னி உயிரிழந்துள்ளார்.