CATEGORIES
உக்ரைன் போர் குறித்து ரஷ்ய- அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சவுதி அரேபியாவில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் சந்தித்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மோடி-மஸ்க் சந்திப்பு எதிரொலி வேலைக்கு ஆள் எடுக்க தொடங்கியது டெஸ்லா இந்திய சந்தையில் நுழைகிறது
அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, மும்பையில் தனது நிறுவனத்திற்காக வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தி.நகரில் அனுமதியின்றி கட்டிய கட்டுமானங்களை 8 வாரங்களில் இடிக்க வேண்டும் சிஎம்டிஏவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தி.நகர் வணிக கட்டிடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிஎம்டிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சியில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டைபெற 28ம் தேதி வரை அவகாசம் - ஆணையர் குமரகுருபரன் தகவல்
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்களுக்கான அடையாள அட்டையை, வரும் 28ம் தேதி வரை பெறலாம், என ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் சிறுமி கூட்டு பலாத்காரம் 7 மாணவர்கள் கைது போக்சோ வழக்கு பாய்ந்தது
டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். கோவையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார்.

சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் இன்று துவக்கம்
நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா உட்பட 8 முன்னணி அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 9வது தொடர் கராச்சி நகரில் இன்று தொடங்குகிறது.

சென்னையில் 'பிங்க்' ஆட்டோ திட்டத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு
பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகின்ற சூழலில் அதனை கூடுதலாக வலுப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ‘சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுய தொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி ரூ.2 கோடி செலவில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் (பிங்க் ஆட்டோ) அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
எடப்பாடி தலைமையில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் 24ம் தேதி நடைபெறுகிறது
அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு செய்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் .

ஒன்றிய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி பாஜ நிர்வாகிக்கு வலை போலி பணி ஆணை வழங்கியது அம்பலம்
ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பாஜ முக்கிய நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண் டாக்டரை கடத்தி பலாத்காரம் சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை
வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டரில் இரவுக்காட்சி பார்த்து விட்டு நள்ளிரவில் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

நடிகர் மனோஜ் மன்ச்சு திடீர் கைது
தெலுங்கு நடிகர் மனோஜ் மன்ச்சு திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். மோகன்பாபுவுக்கும் அவரது இரண்டாவது மகனும் நடிகருமான மனோஜ் மன்ச்சுவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து தகராறு நிலவி வருகிறது.
ஐநா. தலையிட வேண்டும் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு பாக்.நாடாளுமன்றத்தில் தீர்மானம்
இஸ்லாமாபாத்: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பாக். நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி நிர்மலாதேவி மனு
சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் நிர்மலா தேவி மனு செய்துள்ளார்.

பிடிவாரன்ட் எதிரொலி கோர்ட்டில் சீமான் ஆஜர்
பிடிவாரன்ட் எதிரொலியாக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார்.

நடிகர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துவது எத்தனை பேருக்கு தெரியும்? - பாஜ தலைவர் அண்ணாமலை கேள்வி
நடிகர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் மீண்டும் ஒரு மொழிப்போராட்டம் நடத்த தயார் - துணை முதல்வர் உதயநிதி பேச்சு
ஒன்றிய பாஜ அரசின் கட்டாய மொழி திணிப்புக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவினர் அரசியல் ஆக்க வேண்டாம், எங்களுடன் ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வாருங்கள் என்று கூறினார்.
அரசின் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்திட பங்குத்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும் - ஒன்றிய அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஒன்றிய அரசின் பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

2025-2026ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ல் தாக்கல் - பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற மார்ச் 14ம் தேதி கூடுகிறது.

தொலைநோக்கு பார்வை, கொள்கையற்ற மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து விட்டது - காங். கடும் தாக்கு
தொலைநோக்கு பார்வை, கொள்கையற்ற மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து விட்டது” என காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் பதிவில், “பங்கு சந்தை சரிவால் 2025ல் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரு்.45 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-கத்தார் வர்த்தகம் இரட்டிப்பாக்குவதே இலக்கு
அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியா-கத்தார் இடையேயான வர்த்தகத்தை ரூ.2.40 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்க பிரதமர் மோடி, கத்தார் அதிபர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

உயிர் பலியை மறைக்கும் உபி அரசு மகா கும்பமேளா நிகழ்ச்சி மரண மேளாவாகி விட்டது - மம்தா சாடல்
மகா கும்பமேளா மரண மேளாவாகி விட்டதாக கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உபி அரசு பலி எண்ணிக்கையை மறைப்பதாக குற்றம்சாட்டினார்.
கோவையில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் 17வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை ஏற்க கோஸ்டா ரிகா ஒப்புதல்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் மற்றும் மத்திய ஆசியாவை சேர்ந்தவர்களுக்கு பாலமாக செயல்படுவதற்கு கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டுள்ளது.

இசையமைப்பாளருக்கு, காப்பி ரைட் அல்லது சம்பளம் மலையாள தயாரிப்பாளர் சங்கம் புது முடிவு
மலையாள தயாரிப்பாளர் சங்கம் சார்பில், தயாரிப்பாளர்களின் நலன்களை காப்பதற்காக வரும் ஜூன் மாதம் முதல் புதிய படங்களை தயாரிக்காமல் ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

சென்னை, மதுரை இசை கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு விரிவுரையாளர் பணி ஆணை
சென்னை மற்றும் மதுரை – தமிழ்நாடு அரசு இசை கல்லூரிகளில் குரலிசை, வயலின், தவில் மற்றும் புல்லாங்குழல் ஆகிய பிரிவுகளில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுரையாளர்கள் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

எஸ்ஐ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டு பணிஆணை வழங்க வேண்டும்
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2023ம் ஆண்டு, மே மாதம் 5ம் தேதி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது.

2 ஆண்டுகள் பணி நிறைவா, 60 வயதா? டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு எப்போது? - புதிய டிஜிபி குறித்த விவாதம் தொடக்கம்
தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் நிறைவு பெறுவது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால் அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகளில் ஓய்வு பெறுவாரா, 60 வயதில் ஓய்வு பெறுவாரா என்று தெரியாததால் காவல்துறையில் புதிய டிஜிபி குறித்து தற்போது விவாதங்கள் தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் முன்னாள் சிறைவாசிகள் 750 பேர் சுயதொழில் தொடங்க ₹3.75 கோடி நிதியுதவி - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் 750 முன்னாள் சிறைவாசிகள் சுய தொழில் தொடங்க ரூ.3.75 கோடி நிதி உதவி தொகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்தியா முழுவதும் பணியாற்றும் அனைத்து மாநில நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ஒரே சம்பளம் - அரசு ஊழியர்கள் கோரிக்கை
இந்தியா முழுவதும் பணியாற்றும் அனைத்து மாநில 4ம் பிரிவு ஊழியர்களுக்கு ஒரே சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அகில இந்திய மாநில அரசு 4ம் பிரிவு ஊழியர்கள் சம்மேளனத்தின் சார்பில் 8வது ஊதிய குழு தொடர்பான கூட்டம் அகில இந்திய தலைவர் கே.கணேசன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மேரிகோம் ராஜினாமா
குத்துச்சண்டை போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை மேரிகோம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) விளையாட்டு வீரர்கள் கமிஷன் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.