அப்போது முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட பிரச்னையால், பாஜவுடனான நீண்டகால கூட்டணியை முறித்துக் கொண்டார் உத்தவ் தாக்கரே. பின்னர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் ஆட்சி அமைத்தார். 2022ல் அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே, பாஜவுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சியை அமைத்தார். அதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவுபட்டது. அஜித்பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று பாஜ – சிவசேனா கூட்டணியில் சேர்ந்தார். பெரும்பான்மை அடிப்படையில் உண்மையான சிவசேனா கட்சி ஷிண்டேவிடமும், தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித்பவாரிடமும் வந்தது.
இதையடுத்து உத்தவ் தாக்கரே, உத்தவ் சிவசேனா என்ற பெயரிலும், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் என்ற பெயரிலும் புதிய கட்சியை பதிவு செய்தனர். அவர்கள் காங்கிரசுடன் சேர்ந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் தொடர்ந்தனர். கடந்த மே மாதம் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் இடம் பெற்ற மகாவிகாஸ் அகாடி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு 30 தொகுதிகள் கிடைத்தன. ஒன்றில் சுயேட்சை வெற்றி பெற்றார். வெறும் 17 தொகுதிகள் மட்டுமே கிடைத்ததால் பா.ஜ முகாம் மட்டுமல்ல, அஜித்பவார், ஷிண்டே முகாம்களும் கதிகலங்கி விட்டன.
அடுத்த 6 மாதத்தில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய பயம் அவர்களுக்கு. இந்த சூழலில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் பாஜ, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாயுதி கூட்டணியில் போட்டியிட்டன. அதனை எதிர்த்து காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் சரத்பவார் கட்சிகள் களமிறங்கின. சட்டப்பேரவை தேர்தலுக்கு மக்களை ஈர்க்கும் விதமாக கவர்ச்சிகரமான பல திட்டங்களை பா.ஜ கூட்டணி அறிவித்தது. அதில் மகளிருக்கு ரூ.1,500 உதவித் தொகை வழங்கும் லட்கி பகின் திட்டமும் ஒன்று.
この記事は Dinakaran Chennai の November 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の November 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
அமித்ஷா மன்னிப்பு கோரி கொட்டும் மழையில் காங்கிரசார் பேரணி
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக கூறி நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மகளிர் காவல் நிலையம் அமைப்பது குறித்து செங்குன்றத்தில் காவல் ஆணையர் ஆய்வு
செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
நினைவு நாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை
எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு, புழல் 24வது வார்டு மேற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் மன்றம் புனித அந்தோணியார் நகர், லட்சுமி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட 6 இடங்களில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சூரிய உதயத்தின் போது உன் முகத்தை பார்க்க வேண்டும் என இளம்பெண்ணை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை
மேட்ரிமோனியலில் அறிமுகமான வாலிபர் கைது 10 கிராம் செயினை பறித்து மிரட்டியது அம்பலம்
10 கிலோ கஞ்சா பறிமுதல்
ஒடிசா, ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் பெரம்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, அண்ணாநகர் மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் சங்குவுக்கு தகவல் கிடைத்தது.
செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
செங்கல்பட்டில் நாளை மறுதினம் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
செங்கை, காஞ்சியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கலெக்டர்களிடம் மனு வழங்கி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற கூட்டத்தில், அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதை தொடர்ந்து இந்தியா முழுவதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தொடர்ந்து ஐந்து தினங்களாக, அமித் ஷா உருவ பொம்மை எரிப்பு என பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை அரசியல் அமைப்புகள் அறங்கேற்றி வருகின்றனர்.
குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம்
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே, ரயில்வே துறை அதிகாரிகள் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாரம்பரியம், புதுமைகளை ஒருங்கிணைத்தல் தொடர்பாக பதஞ்சலியின் கல்வி கருத்தரங்கம்
ஒன்றிய அரசால் நிறுவப்பட்ட பாரதிய ஷிஷா வாரியம் மற்றும் பதஞ்சலி நிறுவனம் இணைந்து “பாரம்பரியம் மற்றும் புதுமைகளை ஒருங்கிணைத்தல்” என்ற தலைப்பில் 2 நாள் கல்வி கருத்தரங்கை நடத்தின.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது
சேலையூர், ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் திலகா (66). இவர், தனது கணவருடன் தாம்பரத்தில் உள்ள பிரபல துணி கடைக்கு சென்றிருந்தார்.