CATEGORIES
நோய்க்கு விருந்து பகல் தூக்கம்!
காலையில் ஆசனம், மாலையில் உடற்பயிற்சி, இடைப்பட்ட நேரத்தில் தியானம் நாள்தோறும் செய்ய பழக வேண்டும். ஆசனப் பயிற்சி உடலின் உள் உறுப்புகளை நலம் பெறச் செய்யும். உடலின் புற உறுப்புகளை வலு பெற செய்யும். தியானம் உள்ளத்தை தூய்மையாகவும் மனதை தெளிவாகவும் செய்யும்.
திரவுபதியாக நடித்தது மறக்க முடியாதது! - நிஷா
தற்போதைய காலகட்டத்தில் அனைத்து வீட்டு பெண்மணிகளுக்கு பொழுது போக்கு அம்சம் மற்றும் மனதிற்கு குதூகலமாய் உள்ளது டி.வி. தொடர்கள் தான்.
திருமுல்லைவாயில் கொடியிடை நாயகி!
அன்னை பராசக்தி உலகைக் காக்கும் தாய் கிரியா சக்தியாக எழுந்தருளி இருப்பவள் திருமுல்லைவாயில் கொடியிடை நாயகி.
கேரளா சுற்றுலா: அதிரப்பள்ளி அருவி!
அதிரப்பள்ளி பெயருக்கு ஏற்ற வகையில் அதிரவைக்கும் சுற்றுலாத் தலம். இயற்கை எழில் கொஞ்சும் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள ஓர் அருவி.
குழந்தைகள் மீது கவனம் இருக்கட்டும்!
இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு என பார்க்கும்பொழுது பெற்றோர்களுக்கு குழந்தைகளுடன் பேசவோ, அவர்களின் செயல்களை புரிந்து கொள்ளவோ, விளையாடவோ, நேரம் ஒதுக்க முடியவில்லை. இது அக்குழந்தையை உளவியல் ரீதியான பிரச்னையை உருவாக்கும்.
எவ்வளவு தைரியம் உங்களுக்கு?
கிரெட்டா துன்பர்க்
உலர் திராட்சை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
உலர்ந்த திராட்சை என்பது பலருக்குப் பிடித்த ஒன்றாகவும் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. இதில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் உள்ளன. திராட்சைகளை இரண்டு முதல் நான்கு வாரங்கள் நேரடியாகச் சூரியனில் காய வைத்து எடுப்பது தான் உலர்ந்த திராட்சைகளாகும். உலர்ந்த திராட்சைகளை குழந்தைகளுக்குக் கொடுப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து எனக்கு ஒரு போதிமரம்! - பாரதி ராமசுப்பன்
பாரதி ராமசுப்பன், இன்றைய தலைமுறையின் இசைக்கலைஞர்களில் முன்னணி இடம் வகிப்பவர். 2017-ம் ஆண்டு மியூசிக் அகடமியில் வாய்ப்பாட்டு வரிசையில் தலைசிறந்த இளம் கலைஞர் என்ற சிறப்பு விருதைப் பெற்றவர். ஸ்டெல்லா மேரி கல்லூரியில் ரசாயனப் பிரிவில் மாநில அளவில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் வென்றவர். கல்லூரியிலிருந்து வெளிச் செல்லும் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாட்டு, படிப்பு இரண்டிலுமே சிறந்து விளங்கிய இவர் இசைமேல் உள்ள தீராத தாகத்தால் இசையையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டார்.
அணு வடிவில் ஒரு கட்டிடம்!
அணுவின் வடிவம் எப்படியிருக்கும் என்று உலகம் ஆவல் கொண்டிருந்த காலம்.
அஞ்சாமையின் மறுபெயர் இந்திரா!
சத்தியத்தின் வடிவமாகத் திகழ்ந்த காந்தியடிகளால் நாட்டு மக்கள் ஒன்று பட்டனர். அவர் வருகைக்குப்பிறகு தேசபக்தியும் சுதந்திரப் போராட்டமும் புதிய பரிமாணம் பெற்றது. இமயம் முதல் குமரிவரை பல லட்சம் பேர் இந்த மண்ணுக்காக அரிய பல தியாகங்கள் செய்தனர். அத்தகைய குடும்பங்களில் ஒன்று அலகாபாத், ஆனந்த பவனில் வாழ்ந்த நேரு குடும்பம்.
(அ)சுரமயில்!
“புண்ணியம் செய்தார்க்குப் பூவுண்டு நீருண்டு”' என்பார்கள். அசுரனாகப் பிறந்தும் சிவபக்தனாக இருந்தான் சூரன். ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆளும் வரத்தைப் பெற்றான். அழியாமல் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டான். வரம் கேட்பதில் வல்லவர்கள் அசுரர்களும், அரக்கர்களும். பிரகலாதனின் தந்தை இரண்யாக்ஷன் எப்படி வரம் கேட்டான்? பகலிலும் இரவிலும் சாகக்கூடாது. மனிதர்களால் தேவர்களால் எனக்கு சாவு வரக்கூடாது. வரத்தைக் கொடுத்தவனே அழிக்க மாட்டான் என்ற தைரியம்.