CATEGORIES
Kategorier
பதிப்பாளர்களின் அநீதி!
வரலாறு புதிதாகப் படைப்பதற்கு வரலாறு தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் அரசியலுக்கு அது பொருந்தாது. வரலாறு பற்றிய அறிவு மிகக்கண்டிப்பாகத் தேவை.
“அரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள்!”
காந்தியடிகளிடம், 'உங்களிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?' என கேட்கிறார்கள். 'ஒரு பெரிய நூலகம் அமைப்பேன்' என்கிறார். நெல்சன் மண்டேலா, நேரு போன்றவர்கள் என்னை எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமென்றாலும் சிறையில் வைத்துக்கொள்ளுங்கள், புத்தகங்களை கொடுத்துவிடுங்கள்' என்று சொன்னார்கள்.
பயணங்களின் தூரத்தைக் குறைக்கும் நண்பன்!
ஓரே காலகட்டத்தில் நான் பற்பல நூல்களையும், ஆங்கிலம் தமிழ் என மாற்றி மாற்றிப் படிப்பேன்.
பணத்தை இஷ்டம் போல் அச்சடித்தால்?
ஜிம்பாப்வேயின் அதிபராக இருந்த ராபர்ட் முகாபே 2008 இல் அந்நாட்டுப் பணத்தை எக்கச்சக்கமாக அச்சடித்து, பணவீக்கத்தை உருவாக்கினார். அப்போது உலகமே இப்படி பணத்தை அச்சடிப்பதை கண்டித்தது.
தொ.ப வின் மறுபக்கம்
சமீபத்தில் மறைந்த பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் மகள் விஜயலெட்சுமி தந்தையின் நினைவுகளை அந்திமழைக்காகப் பகிர்ந்தார்:
தரம் தாழ்ந்த அரசியல்: எப்படி மாற்றுவது?
மாநிலம் முழுவதும் அறிமுகமான அவர் அரசியலில் நீண்ட அனுபவம் உள்ளவர், பல முதல்வர்களுக்கு அறிமுகமானவர். எந்த குற்றச்சாட்டும் இல்லாதவர். அவரோடு தொடர்பில் இருக்கும் நண்பரிடம் "சாருக்கு இந்த தடவை சீட் கிடைக்குமா? என்று கேட்டேன். " இதே கேள்வியைத் தான் நானும் கேட்டேன், சார் ரொம்பத் தான் புலம்பிவிட்டார்'' என்று அவரின் புலம்பலின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டார்.
நட்டு என்னும் வேகப்பந்து அற்புதம்!
"நடராஜனின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து எங்கள் சேலம் மாவட்டத்தைச் சுற்றிலும் புதிதாக பத்துப் பதினைந்து கிரிக்கெ அகாடமிகள் தொடங்கப்பட்டுள்ளன. மூன்று வயது சிறுவன் முதல் முப்பது வயது இளைஞர் வரை எல்லோரும் நாங்கள் நடராஜன் மாதிரி ஆகணும் என்று சொல்கிறார்கள் ," என பெருமையுடன் சொல்கிறார் கண்ணன், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர். சேலம் கிங்ஸ் என்ற கிரிக்கெட் கிளப்பின் செயலாளர்.
நட்சத்திர பட்டாளம்!
'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித் திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கூடவே, இரண்டு பெரிய ஸ்டார்கள் ஒரு படத்தில் நடித்திருப்பது பற்றிய பரவலான விவாதத்தையும் இப்படம் உருவாக்கியிருக்கிறது.
ஒரு மக்னா யானையின் கதை!
முதுமலை தெப்பக்காடு முகாமில் மருத்துவராகச் சேர்ந்து முதல் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்ததும் நான் பார்த்த யானை, பிரமாண்டமாக இருந்தது. தந்தம் இல்லை! 10 அடி உயரம், 5 டன் உடல் எடை, கருத்த பாறை போன்ற அகன்ற தலை, முட்டை மாதிரியான கண், கல் தூண் போன்ற கால்கள் ! பார்க்கவே பயமாக இருந்தது. தந்தம் இல்லாத ஆண்யானையை மக்னா என்பார்கள்.
நூல்களைப் படிப்போம், சாதனைகளைப் படைப்போம்!
புத்தக வாசிப்பு என்பது அவரவர்களது இருப்பையும் இடத்தையும் தக்க வைப்பதும், தக வமைப்பதுமே ஆகும். சிந்தனைகளை மேம்படுத்தவும், தெளிவான பாதைகளைச் செப்பனிடவும், ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்திற்கும் நூல்களே பெரிதும் பேருதவியானவையாக இருக்கின்றன.
படிக்க வேண்டிய நூல்கள்!
1. காரல் மார்க்சு எழுதிய “மூலதனம்'' நூல் தொகுப்பு தமிழில் க.ரா. ஜமதக்னி
சரக்கடித்தால் நல்லா தூங்கலாமா?
குடியைப் பற்றி நமக்கு எல்லாமே தெரியும் என்ற எண்ணம் இருக்கிறது; குறிப்பாக குடிப்பவர்களுக்கு. குறைவாக குடித்தால் உடம்புக்கு நல்லது, பியர் குடியே கிடையாது அதில் மிகக் கொஞ்சமே ஆல்கஹால் உள்ளது. ரெட் வைன் உடம்புக்கு நல்லது, மிதமாக குடித்தால் நல்ல தூக்கம் வரும் இப்படி பல நம்பிக்கைகள் உண்டு.
அரசியல்வாதிகளுக்கான ஆயுதம்!
செல்லப்பா ஒரு புத்தகப் பிரியர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைத்தாரோ அல்லது வாசிக்கப்படுவதைத் தவிர புத்தகங்களுக்கு வேறு என்ன பயன் இருக்கும் என்று நினைத்தாரோ தெரியாது. தன்னிடமுள்ள புத்தகங்களைக் கொண்டு தன் வீட்டின் முன்னிருந்த அறையில் வாசக சாலை ஒன்றை உருவாக்கினார்.
ரோமாபுரி காட்டும் வழி!
மதுரையில் 21, பிப்ரவரி 2018 இல் தொடங்கப்பட்ட கமலின் மக்கள் நீதி மய்யம்' வர இருக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் என்னவாகும் என்பதை விரிவாகப் பார்ப்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
“பிரம்பெடுத்து ரெண்டு அடி போட்டார்!”
நடிகர் பிரபு
தந்தை என்னும் நாயகன்?
"Daddy, thanks for being my hero, Chauffeur, financial support, listener, life mentor, friend, guardian and simply being there everytime I need a hug'' Agatha Stephanie lin
கொரோனா தடுப்பூசி : நாம் போட்டுக் கொள்ளலாமா?
கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டில் வர உள்ளது. இந்த தடுப்பூசிகள் தொடர்பான அடிப்படை சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார் டாக்டர் எஸ். பி. நாகேந்திரபாபு. ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் இவர் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வுத் திட்டங்களில் பங்கேற்று பணியாற்றி வருகிறார்.
தமிழ் சினிமா: அப்பப்பா..
தமிழ் சினிமாவில் அப்பாக்கள் எங்கிருந்து துவங்கினார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தால், நினைவு தெரிந்த அப்பாவாக முதலில் பளிச்சிடுபவர், ராவ் சாஹிப் மாணிக்க முதலியார்தான்.
சொக்கலால் பீடியும்...குதிரை படம் போட்ட பிராந்தியும்...
ஞாயிறுகளில் அப்பா அப்படியொரு அழகாக பேட்டையில் காட்சியளித்துக் கொண்டிருப்பார். வெளுத்த வேட்டியும் சட்டையும் கசங்காமல் உடுத்திக் கொள்வார். உள்ளங்கையளவு தேங்காய் எண்ணெயை தலைக்கும், கைகளுக்கும், கால்களுக்கும் தடவிக் கொள்வார். தலையைப் படிய வாரி, மீசையையும் ஒரு மாதிரி வாரிக்கொள்வார். ஒரு தடவை அம்மையைப் பார்த்துக்கொள்வார். கறி எடுப்பதற்கு தூக்குவாளியை எடுத்துக் கொண்டு என்னையும் கடைத்தெருவிற்கு அழைத்துச் செல்வார்.
சாட்டையால உரிச்சுட்டாங்க!
அப்பாவைப் பார்க்க வீட்டுக்கு நிறையபேர் வந்து போய்ட்டுருப்பாங்க. அப்ப அவர் எவ்வளவு பெரிய ஆளுன்னு எனக்குத் தெரியாது.
பதவி அல்ல, பொறுப்பு!
தலைவர் கலைஞர் 1956-இல் கோபாலபுரம் வீட்டை வாங்கியபோது நான் மூன்று வயது குழந்தை. அப்போதிருந்து இங்கே பெரிய கூட்டுக் குடும்பமாக நாங்கள் வசித்து வந்தோம்.
காம்ரேட் அப்பா!
ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு பழைய சைக்கிளில் இரவு 7 மணியளவில் கதவு அருகில் வந்து சைக்கிள் பெல்லை அடித்துக்கொண்டு நிற்கும் அப்பாவின் பிம்பம் தான் அழுத்தமாகச் சிறு வயது நினைவாக மனதில் பதிந்துள்ளது ...
கருணா என்ற சமூக முன்னெடுப்பாளன்!
திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் என் இரண்டாமாண்டு பி.காம் படிப்பை பேருக்குப் படித்துக் கொண்டிருந்த காலமது. இலங்கைத் தமிழர்களின் வாழ்வு, நாட்டுரிமைக்கானப் போராட்டம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.
உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்!
அப்பா! இந்த ஒற்றை வார்த்தையில் மினுங்கும் அன்பின் அர்த்தங்கள் மின்னும் நட்சத்திரங்கள்.
ஆலின் நிழலில்!
எங்கள் குடும்பத்தில் உடன் பிறந்தார் மூவருமே எங்கள் அப்பா அம்மாவின் முகச் சாயலையும், குணவியல்புகளையும், நலங்களையும் ஒரு சேரப் பெற்றவர்களாக இருக்கிறோம். அப்பாவிற்கு அகவை முதிர்ந்தாலும் பிள்ளைத் தமிழாகவே அவர் எனக்கு எப்போதும் தெரிகிறார்!
அப்பி! ஒரு தலைப்பு சொல்லேன்!
பெரிய்ய்ய ஊர்ல இல்லாத அப்பா.. எப்பப் பார்த்தாலும் அப்பாவைப் பத்தியே பெருமை பேசிக்கிட்டு... என்று பள்ளி நாட்களில் நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். (அப்பாவை அப்பி என்று நாங்கள் அழைப்பதற்கும் ஒரே கேலிதான்) ஆமா, ஊர்ல இல்லாத அப்பாதான் எனக்கு. உனக்கு என்ன வந்துச்சு? என்று நானும் சிலுப்பிக் கொள்வேன். "எங்க அப்பா சொன்னாங்க, எங்க அப்பா சொன்னாங்க-” என்று நாள்தோறும் ஏதாவது கூறுவதே எனக்கு வழக்கமாக இருந்தது.
அப்பா மகிழ்ந்த தருணம்!
1991-ஆம் ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்ற எனது தந்தை, மீன்வளத்துறை, பால்வளத்துறை, வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சர் பொறுப்பை வகித்தார்.
வாழ்க்கையை மாற்றிய படம்!
"எனக்கு அப்ப இரண்டு வயசு இருக்கும். 'தொட்டா சிணுங்கி' படத்தில் என்னோட அம்மா, ஹீரோயினுக்கு டப்பிங் பேசியிருந்தாங்க. அந்த படத்தோட ரேடியோ விளம்பரத்துக்கு அம்மா பேசப் போயிருந்த போது, நான் அப்பாவுடன் சவுண்ட் எஞ்சினியர் ரூமில் உட்கார்ந்திருந்தேன்.
யார் பாவம்?
சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் .... இன்றைய தேதியின் ஸ்டார் டைரக்டர்களை வைத்து பாவக் கதைகள் என்ற வெப் சீரிஸை இறக்கியது நெட் ஃப்ளிக்ஸ். டிசம்பரின் திரை சென்சேஷன் இதுதான். வரிசையாகப் பார்ப்போம்:
சுதந்தரமும் அன்பும்!
பிற இல்லங்களில் இருப்பது போன்ற சராசரி அப்பா மகன் உறவு எங்கள் இல்லத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்பா 'தேசாந்திரி' என்பதால் சின்னவயதில் அவர் பெரும்பாலும் வெளியூர்ப் பயணங்களில் இருப்பார்.