ஏஜென்ட் கெளசி...குட்டி வீரன்...ஜூனியர் டார்க் டெவில்...
Kungumam|17-11-2023
இன்ஸ்டாகிராமில் சரசரவென ரீல்ஸ்களையும், யூடியூபில் மடமடவென வீடியோக்களையும் கடந்து செல்லும்போது கண்ணில் பட்டார்கள் இந்த ஆர்கே ஃபிளையிங் ஸ்க்வாட் கேங்.
ஷாலினி நியூட்டன்
ஏஜென்ட் கெளசி...குட்டி வீரன்...ஜூனியர் டார்க் டெவில்...

‘விக்ரம்’ படத்தின் சிக்னேச்சர் சண்டைக் காட்சியான ஏஜென்ட் டீனாவின் மாஸ் ஆக்‌ஷன் சண்டை, ‘வீரன்’ படத்தின் ஹிப்ஹாப் ஆதி வீரனாக மாறி எதிரிகளை சுளுக்கெடுக்கும் காட்சி, டார்க் டெவில் கேரக்டரில் வங்கியில் ஸ்டைலாக சண்டையிடும் ‘துணிவு’ படத்தின் அஜித்குமார் காட்சி... என இப்படி மிகவும் கடினமான காட்சிகளை அப்படியே தத்ரூபமாக மீண்டும் உருவாக்கி, அதனை மொபைலிலேயே வீடியோவாக பதிவேற்றுகிறார்கள் ஆர்கே ஃபிளையிங் ஸ்க்வாட் குழு.

யார் இவர்கள்... எல்லாம் அதிகபட்சம் 25 வயதைக் கூட கடந்திருக்க மாட்டார்கள் போலவே... அவ்வளவு டெக்னிக்கலான காட்சியை எப்படி வெறும் மொபைலில் இவர்களால் உருவாக்க முடிகிறது... என்னும் பல கேள்விகள் மண்டையைக் குடைய, தொடர்பு கொண்டோம்.‘‘என்னுடைய ஸ்டூடண்ட்ஸ்தான், என்னுடைய கலை வாரிசுகள்தான் இவர்கள் எல்லாம்...’’ பெருமையும், மகிழ்ச்சியுமான குரலில் பேசுகிறார் ஆர்கே ஃபிளையிங் ஸ்க்வாட் குழுவின் மாஸ்டரும், உரிமையாளர் மற்றும் நிர்வாகியுமான ரத்னகுமார்.

‘‘E.ரத்னகுமார்... இதுதான் என்னுடைய முழுப் பெயர். நான் 6ம் வகுப்பு படிச்சிருக்கேன். தூத்துக்குடி, மகாநகர்தான் சொந்த ஊர். அப்பா மெக்கானிக், அம்மா ஹவுஸ் ஒயிஃப்.
சின்ன வயதிலேயே வேலைக்குப் போகவேண்டிய சூழல். அதே நேரம்தான் இந்த தூர்தர்ஷன்ல அப்போதெல்லாம் சனிக்கிழமைகள்ல ஆங்கிலப் படங்கள் போடுவாங்க. அதிலேதான் இந்த மார்ஷியல் ஆர்ட்ஸ், கராத்தே மேலே எல்லாம் ஆர்வம் வந்தது.

இதைக் கத்துக்கறதுக்காக சுமார் 15 கிமீ பயணிச்சு போவேன். வெறும் மண்ணாக இருந்தவனை ஒரு சிலையாக உருவாக்கினது என்னுடைய கராத்தே மாஸ்டர் முருகேசன். எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கி உருவாக்கினது ஜிம்னாஸ்டிக் மாஸ்டர் ஆர்.கே. ராமர் மாஸ்டர்தான்.ஆர்.கே. மாஸ்டர்தான் எனக்கு வாழ்க்கைன்னா என்னன்னு சொல்லிக் கொடுத்தவர். ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுத்துக்கிட்டிருக்கும் பொழுதே ஒரு கட்டத்தில் ‘நீயே பயிற்சி எடுக்க ஆரம்பி’ என சொல்லி, என்னை மாஸ்டராக மாற்றியதும் அவர்தான்.

Denne historien er fra 17-11-2023-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra 17-11-2023-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KUNGUMAMSe alt
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
Kungumam

சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்

‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.

time-read
2 mins  |
22-11-2024
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
Kungumam

அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!

யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!

time-read
2 mins  |
22-11-2024
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
Kungumam

அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்

‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.

time-read
1 min  |
22-11-2024
கோலம்
Kungumam

கோலம்

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.

time-read
1 min  |
22-11-2024
தேவரா பாகம் ஒன்று
Kungumam

தேவரா பாகம் ஒன்று

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.

time-read
1 min  |
22-11-2024
யோலோ
Kungumam

யோலோ

உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.

time-read
1 min  |
22-11-2024
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
Kungumam

திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்

‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும்  மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.

time-read
2 mins  |
22-11-2024
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
Kungumam

ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.

time-read
2 mins  |
22-11-2024
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
Kungumam

இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.

time-read
2 mins  |
22-11-2024
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
Kungumam

மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..

‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.

time-read
2 mins  |
22-11-2024