கிருஷ்ணகாந்த்துக்கு வயது 24. உயரம் 165செமீ. மாநிறம். கோரை முடி தலைக்கேசம். சொந்த ஊர் திருவண்ணாமலை. ரமண மகரிஷி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவன். பல்கலை விடுதியில் தங்கிப் படிக்கிறான்.
இரவு மணி எட்டாகப் போகிறது என துணை நூலகர் நினைவூட்டினார். ஒவ்வொருவராக எழுந்து நூலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். கடைசி ஆளாக கிருஷ்ணகாந்த் எழுந்தான். வெளிவாசலுக்கு வந்தான். தனது மொபெட்டை ஸ்டார்ட் செய்து புறப்பட்டான்.பல்கலைக்கும் பல்கலை குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்க சாலையின் இருபுறமும் குளங்கள் வெட்டப்பட்டிருந்தன. குளங்களுக்குத் தேவையான நீர் வீராணத்திலிருந்து வரும். வருடத்தில் இருமுறை குளத்தின் விரால் மீன்கள் பிடிக்கப்பட்டு குளக்கரையிலேயே ஏலம் நடக்கும்.
ஒவ்வொரு விரால்மீனும் கிரானைட் பளபளப்பில் மூன்று கிலோவுக்கு குறையாமல் இருக்கும். கடந்த முறை ஏலம் நடந்தபோது கூட்டத்தோடு கூட்டமாய் நின்று ஏலத்தையும் மீன்களையும் வேடிக்கை பார்த்தான் கிருஷ்ணகாந்த். துணைவேந்தர் மாளிகையைத் தாண்டினான்.பொறியியல் புல அலங்கார வளைவு குறுக்கிட்டது. கடைசி கட்டடம்தான் ஆராய்ச்சி மாணவர்களின் விடுதி. விடுதியை நெருங்கும் போது அந்தக்காட்சி கண்ணில் தென்பட்டது.
திறந்திருந்த வட்டசாக்கடைக்குள் மனித அம்புக்குறி போல தலைகீழாய் செருகியிருந்தான் அவன். சாக்கடைக்கு அருகே இரும்பிலான மேன்ஹோல் கவர் சுவரில் நெட்டுக்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.மொபெட்டை ஸ்டாண்டிட்டு விட்டு ஓடினான். சாக்கடையில் செருகியிருந்த ஆளை வெளியே இழுத்துப் போட்டான். இழுத்துப் போடப்பட்டவன் முகம் முழுக்க சாக்கடை அப்பியிருந்தது. சிறிதும் சங்கோஜப்படாமல் முகத்தை தனது கர்ச்சிப்பால் துடைத்து சாக்கடைக் கழிவுகளை அகற்றினான்.
கைக்குட்டையை தூக்கி வீசிவிட்டு அதிர்ந்தான்.ஆஹா! இவன் கலியன் ஆயிற்றே! கடந்த மூன்று வருடங்களாக கலியன், கிருஷ்ணகாந்த்துக்கு நல்ல பரிச்சயம். விடுதி சாக்கடைகளை சுத்தம் செய்யும் தினக்கூலி ஊழியன் அவன். கிருஷ்ணகாந்த்தை விட பத்து வயது மூத்தவன். கிருஷ்ணகாந்த்தின் பழைய சட்டைகளைக் கேட்டு வாங்கிக் கொண்டு போவான். சிலநேரம் குடிக்க நூறு இருநூறு ரூபாய் கடன் கேட்டு வாங்கிச் செல்வான். சிலநேரம் குடிக்காதே என அறிவுரை கூறினால் நமட்டுச் சிரிப்பு சிரிப்பான்.
Denne historien er fra 24-11-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 24-11-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.
கோலம்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.
தேவரா பாகம் ஒன்று
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
யோலோ
உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.