CATEGORIES
Kategorier
ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மூத்த தலைவா் சோனியா காந்தி, கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
அனைத்து மதத்தினரையும் சரிசமமாக நடத்த இந்தியாவிடம் கோரிக்கை: அமெரிக்கா
'மதச் சுதந்திரத்தை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதன் முக்கியத்துவத்தையும் பிற நாடுகளுக்கு அமெரிக்கா எடுத்துரைத்து வருகிறது என்றும் அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியின் \"குவாலிஃபயர் 1' ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.
ராமகிருஷ்ண மடத்தின் மீது தாக்குதல்: திரிணமூல் மீது பாஜக பொய் குற்றச்சாட்டு
மம்தா
கொலை முயற்சி வழக்கு கேரள காங்கிரஸ் தலைவரை விடுவித்தது உயர்நீதிமன்றம்
கேரளத்தில் சில கம்யூனிஸ்ட் தலைவா்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து மாநில காங்கிரஸ் தலைவா் கே. சுதாகரனை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.
ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்
நிர்மலா சீதாராமன்
மேக்கேதாட்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை: காவிரி ஆணையத்தில் தமிழகம் எதிர்ப்பு
காவிரிப் படுகையில் கர்நாடகம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை மற்றும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசின் தடுப்பணைக்கு எதிராகப் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட 8 விவகாரங்களை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு எழுப்பியது.
'மக்களுடன் முதல்வர்' திட்ட 2-ஆம் கட்டம்: ஜூலை 15-இல் தொடக்கம்
'மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஜூலை 15-இல் தொடங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் ஆலையை திறக்க வேண்டும்
அமோனியா வாசுக் கசிவு ஏற்பட்ட எண்ணூா் தொழிற்சாலையை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கடல்சாா் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும் என தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு பாராட்டு
நான் பாா்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவா் ராகுல் காந்தி’ என்று அதிமுகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவீன வசதிகளுடன் உருவாகும் புதிய பிராட்வே பேருந்து நிலையம்
நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக ரூ. 823 கோடி மதிப்பில் பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.
அனைத்து மின் சேவைகளுக்கும் ஒரே இணையதளம்
மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
5-ஆம் கட்டத் தேர்தலில் 62% வாக்குப் பதிவு
திங்கள்கிழமை (மே 20) நடைபெற்ற ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 62.19 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது முந்தைய 2019 தேர்தலை ஒப்பிடுகையில் 1.97 சதவீதம் குறைவாகும்.
மம்தா மீது அவதூறு - பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் ஒருநாள் தடை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து பொதுக்கூட்டத்தில் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசிய தம்லுக் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
‘பொக்கிஷ அறையின் சாவிகளை பிரதமர் கண்டுபிடிக்கட்டும்'
புரி ஜெகந்நாதா் கோயிலில் கடவுள்களின் தங்க நகைகள், ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள ‘பொக்கிஷ ’அறையின் தொலைந்துபோன சாவிகளை பிரதமா் மோடி தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கட்டும் என ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன் தெரிவித்தாா்.
தமிழக மக்கள் மீது பழி சுமத்தலாமா?
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்
தமிழகத்தில் 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
உலக சாதனையுடன் தங்கம்: தீப்தி ஜீவன்ஜி அசத்தல்
ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி, மகளிருக்கான 400 மீட்டா் ஓட்டத்தில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளாா்.
நெதன்யாகுவுக்கு எதிராக கைது உத்தரவு: சர்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை
காஸா போா் தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பின் தலைவா்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞா் கரீம் கான் கோரிக்கை விடுத்துள்ளாா்.
பொதுத் துறை வங்கிகளின் வளர்ச்சி: மகாராஷ்டிர வங்கி முதலிடம்
கடந்த நிதியாண்டில் மொத்த வணிகம் மற்றும் வைப்புத்தொகை வசூலின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகளுக்கு இடையே மகாராஷ்டிர வங்கி அதிக வளா்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
மான்செஸ்டர் சிட்டி/சாதனை சாம்பியன்
இங்கிலாந்தில் நடைபெற்ற பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் 32-ஆவது சீசனில், நடப்பு சாம்பியனான மான்செஸ்டா் சிட்டி, தொடா்ந்து 4-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
'குவாலிஃபயர் 1': கொல்கத்தா-ஹைதராபாத் இன்று மோதல்
இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு
ராமகிருஷ்ண மிஷன் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி நகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.
புதிய வகை கரோனா: அச்சப்படத் தேவையில்லை
சிங்கப்பூரில் தற்போது பரவிவரும் புதிய வகை கரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்தி ஜெ.என்.1 வகை தீநுண்மியிலியிருந்து உருமாற்றமடைந்ததுதான் என்றும், எனவே, அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்விநாயகம் தெரிவித்துள்ளாா்.
‘சிறப்புக் குடிமக்கள்' என கருதுவதை ஏற்க முடியாது
சிறுபான்மையினர் குறித்து பிரதமர் மோடி
தத்தெடுப்பு மையங்கள் முறையாக விண்ணப்பித்தால் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது
அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு
பள்ளிப்பட்டு அருகே கரும்பு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
அரசு மாதிரிப் பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுகக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுக கூட்டத்தை ஆட்சியர் ச அருண்ராஜ் குத்து விளக்கேற்றி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
சிக்னல் கோளாறு-ஒரே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட 4 மின்சார ரயில்கள்
செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகா் - சிங்கபெருமாள்கோவில் இடையே ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்த நான்கு மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் அதிா்ச்சியடைந்தனா்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.