CATEGORIES
Kategorier
அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் அடங்கிய தமிழக அரசின் குழு திங்கள்கிழமை (பிப். 24) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
தெலங்கானா கோயிலில் நாட்டின் மிக உயரமான தங்க கோபுரம்
தெலங்கானா மாநிலத்தின் யாதகிரி குட்டாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரத்துக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
என்சிஇடி நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் மும்மொழிக்கொள்கையை ஏற்க மாட்டோம்
ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக்கொள்கையில் கையொப்பமிட மாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது.

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயர்
சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
சமூக ஊடக பதிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்: மத்திய அரசு பரிசீலனை
சமூக ஊடக தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண முக்கிய முடிவு
‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் சனிக்கிழமை தெரிவித்தாா்.
கேரளம்: குருவாயூர் கோயிலில் யானை காணிக்கை
கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் யானை காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்க விழா: 13 பேருக்கு விருது
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து
சென்னை சென்ட்ரல் கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (பிப். 24) ரத்து செய்யப்படவுள்ளன.
சண்டைக் கோழியன்று; குப்பைக் கோழி!
ஈராயிரம் ஆண்டளவிலான சங்க காலத்தில் எண்ணிலாக் தமிழ்ப் புலவர்கள் அகம், புறம், அறம் என்ற நிலையில் எண்ணற்ற பாடல்களைப் பாடிக் குவித்தனர்.
இணைய வழியில் புதிய சேமிப்புக் கணக்கு: ஐஓபி அறிமுகம்
இணைய தளம் மூலம் புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வசதியை பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமரின் 2-ஆவது முதன்மை செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலராக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ் (68) சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

கீதையுடன் எஃப்.பி.ஐ இயக்குநர் பதவியேற்பு
அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ-யின் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பகவத் கீதையின் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார் (படம்).
மனிதர்களைப் பாதிக்கக் கூடிய புதிய வகை கரோனா தீநுண்மி
வௌவால்களிடம் இருந்து பரவி மனிதர்களைப் பாதிக்கக் கூடிய புதிய வகை கரோனா தீநுண்மியை (வைரஸ்) சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா (1-0)
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி மகளிர் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
யுபி வாரியர்ஸ் வெற்றி
டில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யுபிஎல் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவுறுத்தல்
செட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஈஸ்ட் பெங்கால் அதிரடி வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எஃப்சி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால் எஃப்சி.
புதிய ஆயுதங்கள், சக்தி வாய்ந்த ரேடார்களுடன் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் ராணுவம்
சமீபத் திய உலகளாவிய மோதல் களில் ஆளில்லா விமா னங்கள் (ட்ரோன்) மற் றும் வான் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிப்ப தைக் கருத்தில் கொண்டு, அடுத்ததலைமுறைவான் பாதுகாப்பு அமைப்பு கள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த ரேடார்களுக்கு மேம்பட்டு, போர்த்தி றனை அதிகரிக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
சரிவுப் போக்கை சமாளித்து முன்னேறிய ஜியோ
கட்டணங்களை உயர்த்தியதால் இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிவைக் கண்டுவந்த போக்கை சமாளித்து, கடந்த நவம்பரில் ரிலையன்ஸ் ஜியோ கூடுதல் வாடிக்கையாளர்களைச் சேர்த்தது.
கல்வி வேறு: ஞானம் வேறு!
வளர்ச்சி இல்லாமல் மானிட சமூகத்தின் வளர்ச்சி இல்லை. மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் நாம் உண்ணும் உணவையும், கற்கும் கல்வியையும் ஒப்பிட்டுப் பேசுவார்.

மேலும் 6 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து தங்களால் கடத்திச் செல்லப்பட்ட ஆறு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் சனிக்கிழமை விடுவித்தனர்.

ஈஸ்டர் தின தாக்குதல் விசாரணையை திசைதிருப்ப சதி
ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட பெரிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பவே அண்மையில் நடைபெற்ற நீதிமன்ற துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் நடத்தப்படுவதாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.

தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2-ஆம் இடம்
தரமான கல்வி வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பிரமிக்க வைத்த பிரான்ஸ் கலைஞர்கள்!
\"செம்புலப் பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே\" என்ற சங்கப் பாடலுக்கு எடுத்துக்காட்டாக பிரான்ஸ் நாட்டு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் புதுச்சேரி மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

தேசிய சீனியர் கபடி: மகாராஷ்டிரம், ஹரியாணா, சர்வீஸஸ் முன்னேற்றம்
தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரம், ஹரியாணா, சர்வீஸஸ் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

ரூ.1.90 லட்சம் விலை குறைந்த இத்தாலிய பைக்
இத்தாலிய நிறுவனமான மோட்டோ மொரினியின் சேயேமெஸோ பைக்கின் விலை இந்தியச் சந்தையில் ரூ.1.90 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.