CATEGORIES
Kategorier
குடி பெயர்ந்த ராமரும் குணம் தரும் அனுமனும்
சென்னை ராஜதானி என அழைக்கப்பட்ட இன்றைய கேரளம்' ஆந்திரம் தமிழ்நாடு, கர்னாடகத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை, பிரிட் டீஷாரும், டச்சு போர்ச்சுக்கீசியர்களும் காலனிகளை அமைத்துக்கொண்டு கூறு போட்டுக்கொண்டு சிறு மன்னர்களை அடிமைகளாக்கி வரிவசூல் செய்து கப்பம் கட்ட வைத்தனர்.
எலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்
பிரம்மா அகிலத்தின் நான்கு திசைகளை மயும் ஒரே நேரத்தில் கம்பீரமாக பார்த்தபடி நின்றிருந்தான். தன் காலடியில் இத்தனை பிரபஞ்சமா என கால் மடக்கினான். கோணலாய்ப் பார்த்தான்.
இங்கண் (எண்கண்) பிரமீஸ்வரம்
இந்தியத் திருநாட்டில் திருக்கோயில்களின் சுவர்க்கபூமியாக விளங்குவது தமிழ்நாடாகும். அதிலும் குறிப்பாகப் பொன்னி எனும் காவிரிந்தி லட்சக்கணக்கான வாய்க்கால்களாகவும் கண்ணிகளாகவும் கிளைவிட்டு நீர்வளம் பெருக்கும் சோழநாட்டில் பல்லாயிரக்கணக்கான கற்கோயில்கள் திகழ்கின்றன.
காஞ்சி மாவடிக் கந்தனைப் போற்றுவோம்
காஞ்சி மாநகரின் கவின்மிகு சைவத் திருக்கோயில் கள் எண்ணிலடங்கா . அவற்றின் நடுநாயகமாக விளங்குவது ஏலவார் குழலி அம்மையுடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில். ஆம்ர = மா. மாமரத்தடியில் ஈசன் அம்பிகைக்குக் காட்சி கொடுத்ததால் ஏகாம்பரேஸ்வரர் என்று பெயர் பெற்றார். மாமரத்தடியில் பெற்றோருடன் அமர்ந் திருக்கும் முருகப் பெருமானை, அருணகிரியார், தனது க்ஷேத்ரக் கோவைப் பாடலில் ‘கம்பைமாவடி மீதேய சுந்தர' என்று விளிக்கிறார்.
அரிய பொருளே அவிநாசியப்பா!
தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் காலத்துக்கு முன் ஆண்ட அரசர்கள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான ஆலயங்களை எழுப்பினர். அதில் ஒரு சில கோவில்கள் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் உள்ளது.
சரணம் அரண் நமக்கே
அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 79
ஆமான்
ஆமான். மானைப் போன்ற தோற்றம் கொண்ட பசு (காட்டுப் பசு).
திருப்பங்கள் தருவார் திரிவிக்ரமப் பெருமாள்
பிரபுசங்கர்
எம்மைப் பேணம் அம்மையே வருக
மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் ஊனம் இல் சீர்ப் பெருவணிகர் குடி துவன்றி ஓங்குபதி கூனல்வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக் கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சுற்றியுள்ள பகுதி ஒரு காலத்தில் சுவேதகிரி என்று அழைக்கப்பட்டது.
மங்களம் தருவாள் ஸர்வமங்களா!
‘ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே...
மங்கல நித்திலம் பங்குனி உத்திரம்
காலத்தையும் இடத்தையும் கவனித்துக் கணித்துக் காரியங்கள் ஆற்றினால் 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி' என்று ஆனந்தமாக ஆடலாம். பாடலாம். இக்கருத்தைத் திருக்குறளில் திருவள்ளுவர் கூறுகின்றார். நேரத்தையும், நிகழிடத்தையும் கவனித்துவினையாற்றுபவனின் விரல்களுக்குள் உலக உருண்டையே வந்து உட்கார்ந்து கொள்ளும்.
தலங்கள்தோறும் அறுபத்துமூவர் பெருவிழா
சென்னை மயிலாப்பூர் 26-3-2021
அழகன் முருகனின் அபூர்வ வடிவங்கள்
அழகன் திருமுருகப் பெருமானின் திரு உருவை வருணித்து ஆதிசங்கரர் தமது சுப்பிரமணிய புஜங்கத்திலும், அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலி வெண்பாவிலும், பாம்பன் சுவாமிகள் சண்முகக் கவச நூலிலும், திருப் போரூர் சிதம்பரம் சுவாமிகள் திருப்போரூர் சந்நதி முறையிலும், அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் தம் திருவருட்பாவிலும், கந்த சஷ்டி கவசம் தந்தருளிய தேவராய சுவாமிகளும் அற்புதமாகப் பாடி அருளியுள்ளார்கள்!
எட்டெழுத்தைத் தட்டிப் பறித்த பங்குனி உத்திர இரவு
பங்குனி உத்திரத் திருவிழாமிகவும் பழமையும் பெருமையும் உடையது. பன்னூறு ஆண்டுகளாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
பதின்மூன்றாம் நூற்றாண்டில் அந்நியப் படையெடுப்பு நடந்தபோது, திருவரங்கம் நம்பெருமாளுக்கும் அறநூல்களுக்கும் பேராபத்து ஏற்பட்டது. அந்நிலையில், பிள்ளை லோகாச்சாரியார் என்னும் வைணவ குரு, திருவரங்கம் உற்சவர் நம்பெருமாளைத் திருவரங்கத்தில் இருந்து பாதுகாத்து, வேறு பாதுகாப்பான இடத்துக்கு எழுந்தருளப் பண்ணிச்சென்றார்.
கிராம தெய்வ வழிபாட்டில் அறுபத்துமூவர்
நாட்டுப்புறத் தெய்வங்களான வீரன், ஐயனார், காளி, பிடாரி, முதலிய தெய்வங்கள் காவல் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன.
தெய்வானையை மணந்த திருப்பரங்குன்றத்து குமரன்
காவடி எடுத்துவரும் முருகனடியார்கள் ஆடிப்பாடிக் கொண்டு பழநி மலைக்குச் செல்கிறார்கள். அடியார்கள் உள்ளத்தில் சரவணபவ' என்னும் திருநாமம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பழநி மலையில் முருகன் அருளைப் பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பங்குனி உத்திர நன்னாளன்று பழநி முருகன் திருத்தேர் விழா நடைபெறும் அழகைத்தான் 'பங்குனித் தேர் ஓடும் மலை' என்று பாடுகிறார்கள்.
அநுபூதியில் அடைவித்து அருள்வாயே!
தமது க்ஷேத்ரக் கோவைப் பாடலில் அருணகிரியார், இருபத்திரண்டாவது திருத்தலமாக கரூர் என்று இன்று அழைக்கப்படும் கருவூரைக்குறிப்பிடுகிறார்.
நாம அமுத சாகரம் நாமதேவர்
தெய்வ பக்தியும், ஆன்மிக சிந்தனையும் கொண்ட மகா யோகியர், ஞானியர் பலரை நம் பாரதம் கண்டிருக்கிறது.
அறுபத்து மூவரும் பொள்ளாப் பிள்ளையாரும்
சிவனடியை இடையறாது சிந்தித்து, மேதினியில் செம்மைசேர் திருவாழ்வு வாழ்ந்து முக்தியடைந்து, உலகில் நிலைத்த புகழுடன் விளங்குபவர்கள் அறுபத்து மூன்று அடியார்கள். இவர்கள் விநாயகப் பெருமானைத் தனியாகத் துதித்துப் போற்றிய பாடல்களோ, பாடியதாக வரலாறுகளோ ஏதும் இல்லை. என்றாலும் அறுபத்து மூவர் வரிசையில் முதல்வராக விநாயகப் பெருமானும், இறுதியில் அவருடைய அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியும் இருக்கக் காண்கிறோம்.
'சரணம் சரணம்' என நின்ற நாயகி
அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 78
ஸ்ரீ ராமர் இல்லாத ஸ்ரீராமர் ஆலயம்
மத்திய பிரதேசத்தில் ஓடுகின்ற நதிகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது பெட்வா' என்று சொல்லக் கூடிய நதியும் ஒன்று. இதில் ஓடுகின்ற நதிநீர் வானத்தைப் போல நீலநிறமாக இருக்கும். இந்த நீல வண்ண நதிக்கரையிலே, நதியின் மெல்லிய தென்றல் காற்றினிலே, அமைதியான சூழ்நிலையில் அமைந்திருப்பது 'ஓர்ச்சா' என்ற நகரமாகும். இந்த நகரத்திலே பளிங்குக்கற்களாலான பலவிதமான அரண்மனைகள் கண்களைக் கவரும்படியாக அமைந்திருக்கின்றன.
ருத்திராட்சத்தை நிறைகட்டிய லீலை
மதுரையில் சோமசுந்தரப் பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிய நடத்திய திருவிளை யாடல்கள் அறுபத்து நான்காகும். அவற்றைத் தொகுத்து திருவிளையாடற் புராணம் என்னும் பெயரில் புலவர்கள் அழகிய நூலாகப் பாடியுள்ளனர். அதே போல் திருவாரூரில் தியாகேசப் பெருமான் அன்பர்களுக்காகப் புரிந்து அருள்விளையாடல் முன்னூற்று அறுபத்தைந்து ஆகும். அவற்றை வடமொழியில் தியாகராஜலீலை என்னும் நூலாகப் பாடியுள்ளனர். இதில் அனேக அற்புதக் கதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றாக உருத்திராட்சத்தை நிறைகட்டிய லீலை என்னும் திருவிளையாடல் இடம் பெற்றுள்ளது.
ருத்திராட்சத்தைப் போற்றிய மாணிக்க நாச்சியார்
முன்னாளில் கோயிற் பெண்கள் என்னும் திருக்கூட்டத்தார் ஆலயப்பணியாளர்கள் கூட்டத்தில் இருந்தனர். இவர்கள் அந்தக் கோயிலில் இருக்கும் இறைவனைத் தனது கணவனாக தலைவனாக எண்ணி வாழ்ந்தனர். இவர்கள் பதியிலார் என்றும் அழைக்கப்பட்டனர்.
பாண்டிய நாட்டில் பூத வழிபாடு
தென் தமிழ்நாடான பாண்டிய மண்டலத்தில் பூத வழிபாடு தனிச் சிறப்புடன் இன்று கூட இருந்துவருகின்றது. குறிப்பாக மதுரையில் பூத வழிபாடு சிறப்புடன் திகழ்கிறது. சிவபெருமான் அம்பிகையை மணக்க வந்தபோது, அனேக வெள்ளம் (அளவற்ற எண்ணிக்கை) பூதர்களோடு வந்தார் என்றும், அப்பூதங்கள் பாண்டிய நாட்டின் அழகில் மயங்கி, ஆங்காங்கு கோயில் கொண்டனர் என்று கூறப்படுகிறது.
வித்தியாசமாய் சிவலிங்கங்கள்!
1. சிரசாசனம் செய்யும் கோலத்தில் சிவலிங்கம்
பஞ்சபூத தலங்களில் அம்பிகை
பஞ்சபூதத் தலங்கள் என்றாலே அங்கே கொலுவிருக்கும் ஈஸ்வரன் தான் நம் மனக்கண்ணில் தோன்றுவார். ஐயனுடன் இணைந்து அத்தலங்களில் அருட்பாலிக்கும் அம்பிகையரை இங்கு தரிசிக்கலாம்.
சிவவழிபாட்டில் பூதங்கள்
சிவபூஜா பத்ததி நூல்களில் சிவவழிபாட்டின் அங்கமாக பூதர்கள் வழிபாடு நடத்த வேண்டு மென்று கூறப்படுகிறது. தினசரி பூஜைகளில் அஷ்டபூதங்கள் எனப்படும் எண் பூதங்கள் பூசிக்கப்பட்டு அவர்களுக்கு பலி அளிக்கப்படுகிறது. இவர்கள் சிவாசனத்தில் இடம் பெற்றுள்ளது.
சிவராத்திரியின் தத்துவம்
சிவன் என்றால், முழுமையானது, மங்கலகரமானது என்று பொருள். சிவன் என்ற சொல்லிற்கு “எது இல்லாததோ அது” என்று அர்த்தம். சிவ ராத்திரி என்பது மங்கள ராத்திரி என்று வரும்.