கலை வழியாக என் அடையாளத்தை வெளிப்படுத்தினேன்!
Thozhi|1-15, May 2023
அரங்கக் கலைஞர் ரேவதி
கலை வழியாக என் அடையாளத்தை வெளிப்படுத்தினேன்!

எழுத்தாளர், அரங்கக் கலைஞர், மேடை பேச்சாளர், சமூக செயற் பாட்டாளர் என பல்வேறு பரிமாணங்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர் திருநங்கை ரேவதி. மாற்றுப் பாலினத்தவர் குறித்து இவர் தமிழில் எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்கள் "உணர்வும் உருவமும்" மற்றும் 'வெள்ளை மொழி". சமூகச் செயற்பாட்டாளராக தான் மாறியதையும், தற்போதைய தன்நிலை குறித்தும் ரேவதி தமிழில் பகிர்ந்ததை, நந்தினி முரளி ஆங்கிலத்தில் எழுதி வெளியான புத்தகம் "A Life in Trans Activism." அரங்கக் கலைஞர் ரேவதியிடம் பேசியதில்..

“கலை மட்டுமே வெகு விரைவில் நமது கருத்துக்களை அடுத்தவர் மனதில் விதைக்கும்" என்றவர், "நாடகத்தின் மூலமாகவே மாற்றங்களும் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். ஆரம்ப நிலையில், என்னோட பெண்மையை பெண்வேடமணிந்து நாடகங்கள் மூலமாகவே வெளிப் படுத்தினேன். "ஊருக்குத் தான் நான் போடுவது வேஷம். ஆனால் அதுவே எனக்கான அடையாளம்” என்றவரிடத் தில், அவரின் ஆரம்பகட்டம் குறித்து கேட்டபோது...

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் 3 அண்ணன் மற்றும் ஒரு அக்காவிற்கு பிறகு கடைசி மகனாகப் பிறந்தவருக்கு பெற்றோர் வைத்த பெயர் துரை சாமி. குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு உடல் அமைப்பு ஆணாகவும், உள்ளுணர் வுகள் பெண்மைக்குரியதாக இருப்பதை உணர்ந்து, 'எனக்கு மட்டும்தான் இப்படியா" என்கிற குழப்ப நிலையில் நாட்களை நகர்த்தியதைக் குறிப்பிட்டவர், தான் பத்தாவது படித்துவந்த நிலையில், "நான் யார் என்கிற குழப்பம் என்னை தொலைத்துக்கொண்டே இருந்தது" என்கிறார்.

பாலின குளறுபடிகளின் காரணமாக, கல்வியை தொடர முடியாத அளவுக்கு சுற்றி இருந்தவர்களின் கேலி கிண்ட லுக்கு ஆளானவர். நான் பெண்ணாக மாறுவதற்கான போராட்டம் வலிகள் நிறைந்தது எனக் குறிப்பிட்டு, என்னோட பாலியல் வெட்கையும், பெண்ணாக உடை அணிய வேண்டும் என்கிற எனது தணியாத தாகமும், சுதந்திரம் கிடைக்கும் இடம் நோக்கி என்னை நகர்த்தியது. இதுவே என்னுடைய சமுதாயத்தோடு நான் இணைந்த தருணம். தொடர்ந்து டெல்லி, மும்பை, மீண்டும் நாமக்கல் என தன் வாழ்க்கை திசைமாறியதை, பழைய நினைவுகளில் மூழ்கி மனதில் அசை போட்டவராய் மேலும் பேச ஆரம்பித்தார்.

Denne historien er fra 1-15, May 2023-utgaven av Thozhi.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra 1-15, May 2023-utgaven av Thozhi.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA THOZHISe alt
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள்!
Thozhi

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள்!

விளையாட்டில் உச்சபட்ச திருவிழாவான 33வது 'ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
1-15, August 2024
ஃபிட் & ஃபேஷன் @ யுவர் டோர் ஸ்டெப்
Thozhi

ஃபிட் & ஃபேஷன் @ யுவர் டோர் ஸ்டெப்

\"மக்குப் பிடித்த மாதிரியான டெய்லர் செட்டாவது அதிர்ஷ்டம். அப்படி அமைந்தாலும் அவரைத் தேடிச் செல்வது சென்னை மாதிரியான பெருநகரங்களில் ரொம்பவே கஷ்டம். இனி அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்.

time-read
1 min  |
1-15, August 2024
மகப்பேறியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெண்களுக்கான வரம்!
Thozhi

மகப்பேறியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெண்களுக்கான வரம்!

\"குழந்தை என்னும் வரத்திற்காக இன்றும் பெண்கள் வருகிறார்கள். பல போராட்டங்களை சந்தித்து 14 வருடங்களுக்குப் பிறகுதான் அந்த பாக்கியம் எனக்கே கிடைத்தது\" என்கிறார் நாற்பது வருடமாக மகப்பேறு துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி, பல குடும்பங்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தினை மீட்டுக் கொடுத்து வரும் பிரஷாந்த் மருத்துவ மனைத் தலைவர் மற்றும் மகப்பேறு நிபுணர் டாக்டர் கீதா ஹரிபிரியா.

time-read
1 min  |
1-15, August 2024
கதக்கும் ஆடுவேன் காஜலும் தயாரிப்பேன்!
Thozhi

கதக்கும் ஆடுவேன் காஜலும் தயாரிப்பேன்!

\"ஆரோக்கியமான தரமான பொருட்களை மட்டுமே அளிக்க வேண்டும் என்பதால்தான் நான் இந்தத் தொழிலை துவங்கினேன்\" என்கிறார் இந்தியாவின் வட மாநிலமான சட்டீஸ்கர் இல் வசித்து வரும் நித்யா சுப்ரமணியம்.

time-read
1 min  |
1-15, August 2024
தலைமுடி நீளமாக வளர...
Thozhi

தலைமுடி நீளமாக வளர...

பொதுவாக ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது.

time-read
1 min  |
1-15, August 2024
மகா சக்தியின் நான்கு வடிவங்கள்!
Thozhi

மகா சக்தியின் நான்கு வடிவங்கள்!

நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளே அம்பிகை. நான்கு வேதங்களை நான்கு முகமாகக் கொண்ட தேவியை சிதம்பரம் தில்லைக் காளி ஆலயத்தில் காணலாம். மூலப் பரம்பொருள் உலக உயிர்களுக்கு நான்கு வடிவங்களாக அருள் புரிகின்றது.

time-read
1 min  |
1-15, August 2024
புற்றுநோயுடன் போராடி வென்ற புன்னகை அரசி
Thozhi

புற்றுநோயுடன் போராடி வென்ற புன்னகை அரசி

இயற்கை நம் வாழ்விற்கான சந்தோஷங்களையும், சங்கடங்களையும் சேர்த்தே கொடுக்கிறது.

time-read
1 min  |
1-15, August 2024
அபாயம் ஏற்படுத்தும் PMDD... (Pre Menstrual Dysphoric Disorder)
Thozhi

அபாயம் ஏற்படுத்தும் PMDD... (Pre Menstrual Dysphoric Disorder)

மாதந்தோறும் மாதவிலக்கு ஏற்படும் பெண்கள் அது ஏற்படுவதற்கு முன் உடல் மற்றும் மன ரீதியாக சில அவஸ்தைகளை சந்திப்பார்கள்.

time-read
1 min  |
1-15, August 2024
ஆரோக்கிய மலர் ரெசிபி
Thozhi

ஆரோக்கிய மலர் ரெசிபி

ஒவ்வொரு பூவிற்கும் தனிப்பட்ட நறுமணம் மட்டுமில்லை 'அதற்கென குறிப்பிட்ட மருத்துவ குணங்களும் உள்ளன. பெரும்பாலும் நாம் அதனை அலங்காரப் பொருட்களாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் அது நம்முடைய உடலின் ஆரோக்கியத்தினை காக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

time-read
1 min  |
1-15, August 2024
நாய் வளர்ப்பு சிம்பிள் விஷயம்! டாக் டிரெயினர் சத்யா
Thozhi

நாய் வளர்ப்பு சிம்பிள் விஷயம்! டாக் டிரெயினர் சத்யா

சமீபத்தில் குழந்தைகளை நாய் கடிக்கும் வீடியோக்கள் வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வைரலாக, அது குறித்த கேள்விகளோடு டாக் டிரெயினராக வலம் வரும் சத்யா வைச் சந்தித்தபோது...

time-read
1 min  |
1-15, August 2024