நீண்டு கிடந்த நாற்காலிகளில் மனிதர்கள் சொப்பிக் கிடந்தார்கள். குழந்தைகளின் வீச் வீச் என்ற சத்தங்களும், ஸ்டெக்சர்தள்ளும் சத்தமும், தொப்பியை கோணலாக்கி வைத்திருந்த வார்டு பாய்களும், கலவையான இரைச்சலுமாய் ... இது எதுவுமே காதில் நுழைந்து மூளையை ஆக்ரமிக்க வில்லை விஜிக்கு.
வெள்ளை சீருடையில் இருந்த செவிலிப் பெண் பக்கத்தில் வந்து அட்டையுடன் நின்றாள்.
"பேஷன்ட் யாரு..?"
"இவங்கதான்."
"நீங்க அட்டெண்டரா..?"
அம்மாவின் தலையாடியது.
"டீடெயில் சொல்லுங்க."
"விஜயலட்சுமி.''
"வயசு..?"
"நாற்பத்தி மூணு..."
தொடையில் பரவிய நடுக்கம்,நெஞ்சுக்குழி தாண்டி தொண்டைக் குழியை அடைத்தது. இன்று நேற்றில்லை, இந்த இரண்டு வருடமாய் இதே வலிதான், அதே நடுக்கம் தான்.
"உங்க பொண்ணா..?" பக்கத்து இருக்கையில் இருந்த கிழவி, அம்மாவிடம் பேச்சு வளர்த்தாள்.
"ஆமாம்.''
"என் பேத்திக்கு. ரெண்டாவது புள்ளை தங்க மாட்டேங்குது. அதான் சுத்தம் பண்ணிட்டு போகலாம்னு வந்தோம்..." சிரமத்தைக் கடந்து கண்களை திறந்து பார்த்தாள் விஜி.
ஐந்தாறு வயது பெண் குழந்தையோடு மலங்க பார்த்தபடி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். முப்பது கூட இருக்காது.
"ஒன்று பத்தாதா..? நாடு இருக்கிற நிலமைக்கு..." உள்ளுக்குள் முணுகிக் கொண்டாள்.
"நீ எதுக்கோ பயந்துகிட்டு இருக்கே..!டாக்டரம்மா தான் எல்லாம் பார்த்துகிடலாம்னு சொல்லி இருக்காங்கள்ல. நான் போய் காப்பி வாங்கிட்டு வர்றேன்..."அம்மா கண்களில் சமாதானம்மின்ன, பக்கத்து இருக்கை பாட்டி இவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
முகத்தை திருப்பிக் கொள்ள, அம்மா அரை மனதாய் எழுந்து போனாள். அடிவயிறு புதிதாய் பொங்கியது. பயமாக இருந்தது. எல்லைகளை கடந்து உடைகளை மீறி உலகத்துக்கு அவள் அந்தரங்க செயல்களை காட்டிக் கொடுத்து விடுமோ என்று.தொடைகள் இரண்டும் இரும்புக் குண்டை சுமந்ததுபோல் ஓய்ந்து போயிருக்க, அப்படியே சுருண்டு விழலாமா என்று உடம்பு கெஞ்சியது.
'ஏன் பெண்ணாகப் பிறந்தோம்...' லட்சமாவது முறையாய் அந்தச் சிந்தனை வந்தது.
Denne historien er fra 1-15, May 2023-utgaven av Thozhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 1-15, May 2023-utgaven av Thozhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள்!
விளையாட்டில் உச்சபட்ச திருவிழாவான 33வது 'ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஃபிட் & ஃபேஷன் @ யுவர் டோர் ஸ்டெப்
\"மக்குப் பிடித்த மாதிரியான டெய்லர் செட்டாவது அதிர்ஷ்டம். அப்படி அமைந்தாலும் அவரைத் தேடிச் செல்வது சென்னை மாதிரியான பெருநகரங்களில் ரொம்பவே கஷ்டம். இனி அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்.
மகப்பேறியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெண்களுக்கான வரம்!
\"குழந்தை என்னும் வரத்திற்காக இன்றும் பெண்கள் வருகிறார்கள். பல போராட்டங்களை சந்தித்து 14 வருடங்களுக்குப் பிறகுதான் அந்த பாக்கியம் எனக்கே கிடைத்தது\" என்கிறார் நாற்பது வருடமாக மகப்பேறு துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி, பல குடும்பங்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தினை மீட்டுக் கொடுத்து வரும் பிரஷாந்த் மருத்துவ மனைத் தலைவர் மற்றும் மகப்பேறு நிபுணர் டாக்டர் கீதா ஹரிபிரியா.
கதக்கும் ஆடுவேன் காஜலும் தயாரிப்பேன்!
\"ஆரோக்கியமான தரமான பொருட்களை மட்டுமே அளிக்க வேண்டும் என்பதால்தான் நான் இந்தத் தொழிலை துவங்கினேன்\" என்கிறார் இந்தியாவின் வட மாநிலமான சட்டீஸ்கர் இல் வசித்து வரும் நித்யா சுப்ரமணியம்.
தலைமுடி நீளமாக வளர...
பொதுவாக ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது.
மகா சக்தியின் நான்கு வடிவங்கள்!
நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளே அம்பிகை. நான்கு வேதங்களை நான்கு முகமாகக் கொண்ட தேவியை சிதம்பரம் தில்லைக் காளி ஆலயத்தில் காணலாம். மூலப் பரம்பொருள் உலக உயிர்களுக்கு நான்கு வடிவங்களாக அருள் புரிகின்றது.
புற்றுநோயுடன் போராடி வென்ற புன்னகை அரசி
இயற்கை நம் வாழ்விற்கான சந்தோஷங்களையும், சங்கடங்களையும் சேர்த்தே கொடுக்கிறது.
அபாயம் ஏற்படுத்தும் PMDD... (Pre Menstrual Dysphoric Disorder)
மாதந்தோறும் மாதவிலக்கு ஏற்படும் பெண்கள் அது ஏற்படுவதற்கு முன் உடல் மற்றும் மன ரீதியாக சில அவஸ்தைகளை சந்திப்பார்கள்.
ஆரோக்கிய மலர் ரெசிபி
ஒவ்வொரு பூவிற்கும் தனிப்பட்ட நறுமணம் மட்டுமில்லை 'அதற்கென குறிப்பிட்ட மருத்துவ குணங்களும் உள்ளன. பெரும்பாலும் நாம் அதனை அலங்காரப் பொருட்களாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் அது நம்முடைய உடலின் ஆரோக்கியத்தினை காக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
நாய் வளர்ப்பு சிம்பிள் விஷயம்! டாக் டிரெயினர் சத்யா
சமீபத்தில் குழந்தைகளை நாய் கடிக்கும் வீடியோக்கள் வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வைரலாக, அது குறித்த கேள்விகளோடு டாக் டிரெயினராக வலம் வரும் சத்யா வைச் சந்தித்தபோது...