அந்த ஒரு நாள் எந்த ஒரு பெண்ணும் தான் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள். அவள் வாழ்வில் மறக்க முடியாத நாள். பசுமையாக அவளின் மனதில் நிலைத்து இருக்கும் அந்த ஒரு நாள் அவளின் திருமண நாள். அன்று எல்லா பெண்களும் தங்களை அழகாகவும் பிரகாசமாகவும் எடுத்துக் காட்டிக் கொள்ள மேக்கப் போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஒருவரின் முக அமைப்பிற்கு ஏற்ப மேக்கப் போடலாம். இதில் பல தொழில்நுட்பம் மற்றும் மாடர்ன் முறைகள் இருப்பதால், அந்த நாள் முழுக்க அவர்களை அழகாக காண்பிக்க முடியும். இதற்காகவே பிரத்யேக பயிற்சிகளை அளித்து வருகிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லக்சா பிரசன்னா. இவரிடம் பயிற்சி பெற்ற 500க்கும் மேற்பட்டவர்கள் மேக்கப் துறையில் தங்களுக்கு என ஒரு வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறார்கள். சென்னையில் மேக்கப் வர்க் ஷாப்பிற்காக வந்திருந்த லக்சா தன் மேக்கப் பயிற்சி பயணம் குறித்து விவரித்தார்.
‘‘நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் இலங்கையில் தான். தற்போது பிரான்சில் செட்டிலாயிட்டேன். மேக்கப் துறையில் நான் வருவதற்கான காரணம் என் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவம். அம்மா எனக்கு கொடுக்கும் காசில் சேமிப்பது என் வழக்கம். 15 ஆயிரம் யுரோவினை சேமித்திருந்தேன். இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம். அதைக் கொண்டு பயனுள்ள விஷயம் கற்றுக்கொள்ள விரும்பினேன். என்னிடம் பட்டப்படிப்பு இருந்தாலும், கைத்தொழிலாக ஒன்றை கற்றுக் கொள்ள நினைச்சேன்.
பிரான்சில் மேக்கப் கலைக்கென சிறந்த பயிற்சி மையம் உண்டு. அதில் சேர்ந்தேன். இதில் என்ன விசேஷம் என்றால், மேக்கப் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. என் 21 வயது வரை நான் மேக்கப் செய்து கொண்டதில்லை. புருவங்களைக் கூட தீட்டியதில்லை. அம்மா பள்ளி ஆசிரியர் என்பதால் வீட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவங்களுக்கு மேக்கப் போடுவது தவறான செயல். ஆனால் நான் அவங்களுக்கு பிடிக்காத துறையைதான் தேர்வு செய்தேன். காரணம், இந்த கலைக்குதான் மொழி தடை கிடையாது. எங்கு போனாலும் சொல்லி புரிய வைக்கலாம்.
Denne historien er fra 1-15, July 2023-utgaven av Thozhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 1-15, July 2023-utgaven av Thozhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள்!
விளையாட்டில் உச்சபட்ச திருவிழாவான 33வது 'ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஃபிட் & ஃபேஷன் @ யுவர் டோர் ஸ்டெப்
\"மக்குப் பிடித்த மாதிரியான டெய்லர் செட்டாவது அதிர்ஷ்டம். அப்படி அமைந்தாலும் அவரைத் தேடிச் செல்வது சென்னை மாதிரியான பெருநகரங்களில் ரொம்பவே கஷ்டம். இனி அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்.
மகப்பேறியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெண்களுக்கான வரம்!
\"குழந்தை என்னும் வரத்திற்காக இன்றும் பெண்கள் வருகிறார்கள். பல போராட்டங்களை சந்தித்து 14 வருடங்களுக்குப் பிறகுதான் அந்த பாக்கியம் எனக்கே கிடைத்தது\" என்கிறார் நாற்பது வருடமாக மகப்பேறு துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி, பல குடும்பங்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தினை மீட்டுக் கொடுத்து வரும் பிரஷாந்த் மருத்துவ மனைத் தலைவர் மற்றும் மகப்பேறு நிபுணர் டாக்டர் கீதா ஹரிபிரியா.
கதக்கும் ஆடுவேன் காஜலும் தயாரிப்பேன்!
\"ஆரோக்கியமான தரமான பொருட்களை மட்டுமே அளிக்க வேண்டும் என்பதால்தான் நான் இந்தத் தொழிலை துவங்கினேன்\" என்கிறார் இந்தியாவின் வட மாநிலமான சட்டீஸ்கர் இல் வசித்து வரும் நித்யா சுப்ரமணியம்.
தலைமுடி நீளமாக வளர...
பொதுவாக ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது.
மகா சக்தியின் நான்கு வடிவங்கள்!
நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளே அம்பிகை. நான்கு வேதங்களை நான்கு முகமாகக் கொண்ட தேவியை சிதம்பரம் தில்லைக் காளி ஆலயத்தில் காணலாம். மூலப் பரம்பொருள் உலக உயிர்களுக்கு நான்கு வடிவங்களாக அருள் புரிகின்றது.
புற்றுநோயுடன் போராடி வென்ற புன்னகை அரசி
இயற்கை நம் வாழ்விற்கான சந்தோஷங்களையும், சங்கடங்களையும் சேர்த்தே கொடுக்கிறது.
அபாயம் ஏற்படுத்தும் PMDD... (Pre Menstrual Dysphoric Disorder)
மாதந்தோறும் மாதவிலக்கு ஏற்படும் பெண்கள் அது ஏற்படுவதற்கு முன் உடல் மற்றும் மன ரீதியாக சில அவஸ்தைகளை சந்திப்பார்கள்.
ஆரோக்கிய மலர் ரெசிபி
ஒவ்வொரு பூவிற்கும் தனிப்பட்ட நறுமணம் மட்டுமில்லை 'அதற்கென குறிப்பிட்ட மருத்துவ குணங்களும் உள்ளன. பெரும்பாலும் நாம் அதனை அலங்காரப் பொருட்களாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் அது நம்முடைய உடலின் ஆரோக்கியத்தினை காக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
நாய் வளர்ப்பு சிம்பிள் விஷயம்! டாக் டிரெயினர் சத்யா
சமீபத்தில் குழந்தைகளை நாய் கடிக்கும் வீடியோக்கள் வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வைரலாக, அது குறித்த கேள்விகளோடு டாக் டிரெயினராக வலம் வரும் சத்யா வைச் சந்தித்தபோது...