அரேபியன், பான் ஆசியன், கான்டினென்டல் என பல உணவகங்கள் இருந்தாலும், வீட்டில் அம்மாவின் கைப்பக்குவத்தில் ஒரு பிடி சாம்பார் சாதம், உருளைக்கிழங்கு கறிக்கு ஈடு இணை என்றுமே கிடையாது. காரணம், ஒரு வாரம் ஓட்டல் உணவுகளை தொடர்ந்து சாப்பிட முடியாது. ஆனால் 365 நாளும் வீட்டு உணவுகளை சாப்பிட நம் மனம் ஏங்கும். அந்த ஏக்கத்தினை கடந்த ஒரு வருடமாக பூர்த்தி செய்து வருகிறார் அரவிந்த். இவரின் பூக்லே செயலி மூலம் வீட்டு கைமணத்துடன் உணவினை நம் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறார். இவரின் இந்த திட்டத்திற்கு உணவுத் துறையின் மிகவும் மதிப்புமிக்க Food Connoisseurs India விருது கிடைத்துள்ளது. சினிமாவிற்கு ஆஸ்கார் போல் உணவுத் துறைக்கு இந்த விருது. தன்னுடைய செயலியின் முதல் விருது பயணத்தை பகிர்ந்து கொண்டார் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அரவிந்த்.
"பொறியியல் படிச்சிட்டு அமெரிக்காவில் அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். நான் ஒவ்வொரு முறை விடுமுறைக்காக சென்னைக்கு வரும் போது எல்லாம் அம்மா எனக்குப் பிடிச்ச உணவினை சமைச்சு தருவாங்க. ஆனால் கோவிட் போது அம்மாவை நான் இழக்க நேரிட்டது. அம்மா நல்லா சமைப்பாங்க. அவங்க சாப்பாட்டில் அன்பு கலந்து இருப்பதை உணர முடியும். அப்பதான் நானும் அப்பாவும் ஒன்றை உணர்ந்தோம். அவங்க சாப்பாட்டினை நாங்கள் சுவைத்து சாப்பிடுவோமே தவிர நல்லா இருக்குன்னு சொன்னதில்லை. ஆனா, அவங்க அதுபத்தி கேட்டதும் இல்லை. காரணம், சாப்பாடு நல்லா இருந்தா நானும் சரி அப்பாவும் சரி எக்ஸ்ட்ரா இரண்டு பிடி அதிகம் சாப்பிடுவோம். அதைப் பார்த்தே அம்மா புரிந்துகொள்வாங்க. அவங்க அமெரிக்கா வந்தாலும் அங்கும் வெளி சாப்பாடு வேணாம்னு சொல்லி அவங்களே சமைப்பாங்க. அப்படித்தான் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் அம்மாகளுக்கு தனிப்பட்ட கைப்பக்குவம் மற்றும் சுவை இருக்கும். அந்த நினைவுகளை மீட்டுக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது" என்றவர், பூக்லே ஆரம்பித்தது குறித்து விவரித்தார்.
Denne historien er fra 1-15, Dec 2024-utgaven av Thozhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 1-15, Dec 2024-utgaven av Thozhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
விவாகரத்து நல்லதா... கெட்டதா?
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விஷயம் டிரெண்டாகி வரும். இந்த வருடம் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டில் பேசப்படுவது பிரபலங்களின் விவாகரத்தாகத்தான் உள்ளது.
நன்மை தரும் ப்ளாக் டீ
கே மல்லியா சினசிஸ் என்று அழைக்கப் படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்து வது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.
வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி
பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்' என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும்.
ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்!
\"கோவிட் துவங்கும் போதுதான் நான் இதை ஆரம்பிச்சேன். ஒரு ஓட்டலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து திறக்கும் தருவாயில் இருக்கும் போதுதான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாம் ஷட்டவுன் சொல்லிட்டாங்க.
குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்!
எந்தநாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒன்று... குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.
தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!
பிசினஸ் ஆரம்பிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதை சக்சஸ்ஃபுல்லாக நடத்துவதுதான் பெரிய விஷயம்.
குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்
சருமத்தில் வறட்சி, பிக்மென்டேஷன் சபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு.
பெருமையான உறவுகள்
உறவுகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் அனுசரணையாக இருந்து குடும்பத்தை, குடும்ப கௌரவத்தை பாதுகாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
அரங்கநாத சுவாமி கோயில்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் 108 'வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்டு ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது.
இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
\"ஆப்பிள்\" பழம் உடலைப் பாதுகாக்கிறது, நலமளிக்கிறது, உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷத் தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.