6வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், சான் பிரான்சிஸ்கோவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற்றது. யுனைடெட் ஸ்டேட்ஸ் கேரம் அசோசியேஷன் (USCA) தலைமையில் நடைபெற்ற, 18 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நம் இந்திய வீராங்கனை காசிமா மகளிர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு ஆகிய மூன்று பிரிவுகளிலும் வெற்றியை சொந்தமாக்கி மூன்று தங்கப் பதக்கங்களை தன் வசப்படுத்தியுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றிருக்கும் காசிமா, தமிழ்நாட்டின் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். உலக அளவிலான கேரம் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள காசிமா தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். "உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தது சந்தோஷமாக இருக்கிறது. போட்டியின் இறுதிக் கட்டத்தில் பதட்டமான நிலையில் இருந்தாலும் கவனக்கூர்மையுடன் விளையாடவே முயற்சி செய்தேன். மகளிர் ஒற்றையர் பிரிவில் பீகாரைச் சேர்ந்த ராஷ்மி குமாரி யுடன் விளையாடும்போது எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. ராஷ்மி குமாரி ஒரு நல்ல பிளேயர். அவர் இதுவரை 11 முறை தேசிய அளவிலான பட்டங்களையும் 3 முறை உலக அளவிலான பட்டங்களையும் வென்றுள்ளார். ஆனால் எனக்கு இதுதான் முதல் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி என்பதால் அவருடன் விளையாடுவது சவாலான தருணங்களாகத்தான் இருந்தன. இறுதி வினாடி களில் வெற்றி என் பக்கம் இருந்தது. இரட்டையர் பிரிவில் விளையாடும்போது நானும் மதுரையை சேர்ந்த மித்ரா என்பவரும் ஒரு பிரிவாகவும், எங்களின் எதிரணியாக ராஷ்மி குமாரி மற்றும் நாகஜோதி இருவரும் இருந்தனர். இந்தப்போட்டியிலும் நான் தங்கம் வென்றேன். குழு பிரிவில் இந்தியா மற்றும் இலங்கை என்றிருக்கையில் இந்திய அணிக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு 18 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றிகளில் நான் முதலிடமும், பீகாரை சேர்ந்த ராஷ்மி குமாரி இரண்டாம் இடமும், அமெரிக்காவை சேர்ந்த ப்ரீத்தி ஜகோட்டியா மூன்றாம் இடமும், மதுரையை சேர்ந்த மித்ரா நான்காம் இடத்தையும் பிடித்தோம்.
Denne historien er fra 1-15, Dec 2024-utgaven av Thozhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 1-15, Dec 2024-utgaven av Thozhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
விவாகரத்து நல்லதா... கெட்டதா?
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விஷயம் டிரெண்டாகி வரும். இந்த வருடம் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டில் பேசப்படுவது பிரபலங்களின் விவாகரத்தாகத்தான் உள்ளது.
நன்மை தரும் ப்ளாக் டீ
கே மல்லியா சினசிஸ் என்று அழைக்கப் படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்து வது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.
வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி
பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்' என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும்.
ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்!
\"கோவிட் துவங்கும் போதுதான் நான் இதை ஆரம்பிச்சேன். ஒரு ஓட்டலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து திறக்கும் தருவாயில் இருக்கும் போதுதான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாம் ஷட்டவுன் சொல்லிட்டாங்க.
குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்!
எந்தநாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒன்று... குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.
தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!
பிசினஸ் ஆரம்பிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதை சக்சஸ்ஃபுல்லாக நடத்துவதுதான் பெரிய விஷயம்.
குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்
சருமத்தில் வறட்சி, பிக்மென்டேஷன் சபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு.
பெருமையான உறவுகள்
உறவுகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் அனுசரணையாக இருந்து குடும்பத்தை, குடும்ப கௌரவத்தை பாதுகாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
அரங்கநாத சுவாமி கோயில்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் 108 'வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்டு ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது.
இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
\"ஆப்பிள்\" பழம் உடலைப் பாதுகாக்கிறது, நலமளிக்கிறது, உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷத் தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.