Poging GOUD - Vrij
ஆரோக்கியமான மருத்துவமனைக்கு 100 வயது!
Dinamani Cuddalore
|March 22, 2025
கடந்த 2023-2024 ஆண்டில் மட்டும் ஒரு ரூபாய் கொடுத்து மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும், நிவாரணமும் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரம் மக்கள் என்றால், இந்தச் சேவைக்கு உங்கள் கரங்கள் இரண்டும் குவிந்து உங்களது வாய் வாழ்த்தும் அல்லவா!
யுர்வேதம் மனிதனின் ஆயுளை 100 ஆண்டுகள் என்கிறது. அவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தவர்களைத் தேடினால், ஸ்ரீரங்கத்தில் 120 ஆண்டுகள் வாழ்ந்த வைணவச் செம்மலான ஸ்ரீராமானுஜாச் சாரியாரின் திவ்ய சரீரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருவது மட்டும் நமக்குத் தெரிகிறது. மனிதர்கள் பல காலம் இருப்பது துர்லபம். ஆனால், மாமனிதர்களால் தொடங்கப் பெற்ற, அருளாளர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அமைப்புகள், மடங்கள் பல நூற்றாண்டுகளாக மக்கள் சேவையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.
கை, கால்கள் அசைவது தெரிகிறது. ஆனால், இதயம் துடிப்பதை வெகு சிலரே அவதானிப்பர். அதுபோன்று, சென்னையில் 127 ஆண்டுகள் தொய்வின்றித் தொடர்ச்சியாக ஆன்மிக, சமய, மருத்துவ, கல்வி, பண்பாடு, புத்தக வெளியீடு, இளைஞர் முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சுய தொழில் வளர்ப்பு மற்றும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவையும் துணிகளையும் துணிவையும் வழங்கிச் சேவையாற்றி வருகிறது சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம்.
இந்த மடத்தைத் தொடங்கியவர் சுவாமி ராமகிருஷ்ணானந்தர். அவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் 16 செல்வங்களாக வந்தமைந்த சீடர்களுள் ஒருவர். சுவாமி விவேகானந்தரால் தென்னகத்துக்கு அனுப்பப்பட்டு ராமகிருஷ்ண இயக்கத்தை நிறுவியவர். சுவாமிகள் ஆரம்பித்த எதுவும் சிறிதாகத் தொடங்கும்; சீர்மையாக மலரும்; தொய்வில்லாமல் நடைபெறும்; தொடர்ந்து மக்களுக்கு பயன் தரும்.
சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சேவைகளுள் முக்கியமான ஒன்றான தர்ம வைத்தியசாலை தனது நூற்றாண்டை இன்று கொண்டாடுகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கோப்பை தேநீர் கூடக் கிடைக்காத இந்தக் காலத்தில், இந்த மருந்தகத்தில் வரும் நோயாளிகள் ஒரு ரூபாய் கொடுத்தாலே போதும்; மருத்துவர்களின் நேரடி ஆலோசனை பெற்று இலவசமாக மருந்துகளும் வாங்கிச் செல்லலாம்.
Dit verhaal komt uit de March 22, 2025-editie van Dinamani Cuddalore.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Cuddalore
Dinamani Cuddalore
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Cuddalore
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Cuddalore
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Cuddalore
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Dinamani Cuddalore
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Dinamani Cuddalore
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Cuddalore
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Cuddalore
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.
1 min
May 29, 2026
Dinamani Cuddalore
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Cuddalore
தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க செயலர்
வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபி நடராஜும் இணைந்தனர்
1 mins
May 29, 2026
Translate
Change font size

