CATEGORIES
Categories
விவசாயி படுகொலை; இளைஞன் கைது
வவுனியா, ஓமந்தை, பரசன்குளம் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“எந்த சூழ்நிலையிலும் இ.தொ.கா. கைவிடாது”
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர்.
ஆடை வடிவமைப்பு பேஷன் ஷோ
கைவிடப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆடை வடிவமைப்பு 'பேஷன் ஷோ' நிகழ்வொன்று ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களால், ஊவா அபிமானி கைத்தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சியுடன் இணைந்து பதுளை சேனாநாயக்க மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது.
விண்ணப்பம் கோரல்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்படும் 2025ஆம் ஆண்டுக்கான இளம் சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.
“எனக்கு VIP கதிரை வேண்டாம்”
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகின்றார்கள் என்பதற்காக, இதற்குப் பிறகு எந்தக் கூட்டத்துக்கும் தேவையில்லாத செலவு செய்யாதீர்கள்.
புலமைப்பரிசில் பரீடசை: அமைச்சரவை அதிரடி
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை(02) அறிவித்துள்ளது.
புதிய பிரதம நீதியரசர் சத்தியப்பிரமாணம்
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில், திங்கட்கிழமை (02) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை "புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது"
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது எனவும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றம் இருவர் காயம்; மூவர் கைது
கல்வி அமைச்சுக்கு முன்பாக திங்கட்கிழமை (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவினரில் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேங்காய் விலை எகிறியது
தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை 200 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
மரணத்தை கணிக்கும் “மரணக் கடிகாரம்"
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் 'டெத் க்ளாக்' 'Death Application' என்ற அப்ளிகேஷனைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர், இது ஒருவரின் தினசரி வழக்கத்தை வைத்து அவர் இறந்த திகதியைக் கணிக்க முடியும்.
குரங்கு பறித்த குரும்பை விழுந்ததில் நபர் மரணம்
குரங்கு பறித்த குரும்பை நபரொருவரின் கழுத்தில் விழுந்ததில், அந்தநபர் உயிரிழந்த சம்பவமொன்று புலக்கொஹுபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஐயாவின் இல்லம் அரசாங்கத்திடம்
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மக்கள் குவிந்தனர்
நுவரெலியா பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட புதிய 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்து விட்டனர்.
அரிசியின் மொத்த விலை அதிகரிப்பு.
அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளனர்.
ட்ரம்ப் பதவியேற்பை முன்னிட்டு - வெளிநாட்டு மாணவர்களுக்கு அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களில், தற்போது சொந்த நாட்டிற்குச் சென்றுள்ள மாணவர்களை உடனடியாக அமெரிக்காவிற்குத் திரும்புமாறு அந்தந்த கல்லூரிகளின் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதலாவது டெஸ்டில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வென்றது.
பட்டமளிப்பு நிகழ்வு
இலங்கை, ஊடகவியல் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பட்டமளிப்பு நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது.
"புதிய மாற்றத்துக்கு விட்டுக்கொடுக்க தயார்”
நாட்டில் நடைபெற்று முடிவடைந்த பாராளுமன்ற தேர்தலின் பின்பு, மலையகத்தின் பல கட்சிகளிலும் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
தங்கத்தை கொடுத்த தங்க சாரதிகள்
வீதியில் கிடந்த பெறுமதி மிக்க தங்க சங்கிலியை ஹட்டன் நகரில் இயங்கும் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள் சனிக்கிழமை (30) உரியவரிடம் ஒப்படைத்து நேர்மையை நிருபித்துள்ளனர்.
பயங்கரவாத குழுவுக்கு நிதி திரட்டியவர் கைது
பிரித்தானியவில் இருந்து பயங்கரவாத குழுவொன்றுக்கு நிதி திரட்டிய நபர் ஒருவர் இலங்கைக்கு வந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது சனிக்கிழமை (30) செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் நினைவேந்தல்: குந்தகம் விளைவித்த மூவர் அதிரடியாக கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துச் சென்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் (டிஐடி) மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.
வே.பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடிய ஆறு பேரிடம் விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“வதந்திகளை நம்ப வேண்டாம்"
சுனாமி வரப்போவதாகக் கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
எகிறியது மரக்கறிகளின் விலை
நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருட்களின் விலையில் மாற்றம்
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், எரிபொருளின் விலையில் சனிக்கிழமை (30) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாதாளத்தில் இருந்து மீள சிறந்த வழி
சுற்றுலாத் துறையானது நமது நாட்டின் அபிவிருத்திக்கு வேகமாக முன்னேறக்கூடியதொரு பிரதானமானதொரு துறையாகும்.
சேதமடைந்த வயல் நிலங்கள் தொடர்பான மதிப்பீட்டு ஆரம்பம்
வெள்ளத்தால் சேதமடைந்த வயல் நிலங்கள் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
காற்றின் தரத்தில் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
வெங்காய வரி குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான 30 ரூபாய் வரியை, 20 ரூபாவாக குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.