"ஆமாம்பா, கடலோர மாவட்டங்களில் புயல் அதிக மூர்க்கம் காட்டிய நிலையிலும் சென்னை தப்பித்திருக்கிறதே?' ''உண்மைதாங்க தலைவரே, இந்த ஃபெஞ்சல் புயல் பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்த போதே, சென்னைக்கு பெரும் பாதிப்பும் சேதமும் இருக்கும் என பலரும் கணித்தனர். ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் நேரடிப் பார்வையில் பாதுகாப் புப் பணிகளை மேற் கொண்டதால், தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னை பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லாமல் தப்பித்துவிட் டது. அதே நேரம், பிற கடலோர மாவட் டங்களை புயலின் முரட்டுத்தனம், விட்டு வைக்கவில்லை. குறிப்பாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் மூர்க்கத் தாண்டவம் ஆடியிருக்கிறது."
"டிசம்பர் 6-ல் தன்னை மையமாகக் கொண்டு உருவாக இருந்த ஒரு பெரும் சூறாவளியை, திருமாவளவன் திடீரெனத் தவிர்த்திருக்கிறாரே?"
"உண்மைதாங்க தலைவரே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செய லாளரான லாட்டரி மார்ட்டினின் மருமகன் அர்ஜுன் ரெட்டி, பல கோடிகள் செலவில் டிசம்பர் 6-ல் நடத்தும் அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், தி.மு.க.வை விமர்சித்துவரும் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யையும், திருமாவளவனையும் ஒரே மேடையில் ஏற்றி, அரசியல் களத்தில் பெரும் சூறாவளியை உருவாக்கத் திட்டமிட்டார். இதன்மூலம் திருமாவை, தி.மு.க. கூட்டணியை விட்டு நகர்த்திவிட வேண்டும், அல்லது அதுபோன்ற தோற்றத்தையாவது உருவாக்கிவிட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் இது ஒரு நூல் வெளியீட்டுவிழாதானே என்ற கோணத்தில் விஜய் வருவது தெரிந்தும், இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்திருந்தார் திருமா.தி.மு.க. தரப்போ, நடிகர் விஜய்யுடன் அவர் ஒரே மேடையில் ஏறுவதை விரும்பவில்லை. ஆனாலும் இதை வெறும் நூல் வெளியீட்டு விழாவாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று திருமா சொல்ல, விஜய் மேடையில் நீங்களா? யோசியுங்கள் என்று கறாராக இருந்தது அறிவாலயம். இதனால், கடைசி நேரத்தில் ரெட்டி ஏற்பாடு செய்த இந்த நூல் வெளியீட்டு விழாவைத் தவிர்த்து, அவரது திட்டத்தை முறியடித்திருக்கிறார் திருமா."
"நடிகர் விஜய் இந்த விழாவை எப்படிப் பார்க்கிறாராம்?''
هذه القصة مأخوذة من طبعة December 04-06, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 04-06, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.