வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!
Nakkheeran|December 25-27, 2024
'தமிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
எஸ்.பி.எஸ்.
வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!

சென்னை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் 5000 ரூபாய் நிவாரணம் வழங்கிய அரசு, தற்போது கடலூர் -விழுப்புரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 ரூபாய் வழங்குகிறது.

விவசாய நிலங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்று அறிவித்துள்ளது. 'இந்த இழப்பீடுகள் போதாது' என்று கொந்தளிக்கிறார்கள் விவசாயிகளும், பொதுமக்களும். விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் சுமார் 50,000 ஹெக்டேர் விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்து பயிர் நாசமானதோடு, நிலங்களை மண் மூடிவிட்டது. அதை சீர்படுத்த இந்தத் தொகை போதாது என்று குமுறுகிறார்கள்.

அதோடு கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரிக்கு அடுத்து திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் அமைந்துள்ளது. மிகப்பெரிய வெலிங்டன் ஏரிமூலம் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை நம்பி கொடிக்களம், கூடலூர், இறையூர், தொளார், மாளிகை கோட்டம், புத்தேரி, அருகேரி, கோனூர், வடகரை, மேலூர், மருதத்தூர், முருகன்குடி, வெண்கரும்பூர், தீவளூர், தாழநல்லூர் உட்பட 63 கிராமங்கள் பயனடைகின்றன.

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் மூன்றில் இரண்டு பங்கு இதில் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட இந்த ஏரி, 1996ஆம் ஆண்டு முதல் பலவீனமடைந்து சரிந்து வந்தது. அதை சீர் செய்து பாசனத்தை பாதுகாக்ககோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த நிலையில், கடந்த 2006-2011, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அப்போதைய திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த செல்வப்பெருந்தகை, பெருமுயற்சியெடுத்து முதல்வர் கலைஞரிடம் கரையை சீர் செய்யுமாறு எடுத்துக் கூறி நிதி ஒதுக்கீடு செய்ய வைத்து, சுமார் 600 மீட்டர் நீளத்துக்கு கரையை சரிசெய்தனர்.

மிச்சமுள்ள கரைப் பகுதிகளை அடுத்தடுத்த ஆண்டுகளில் சரிசெய்வதாக அரசு உறுதியளித்தது. ஆனால் 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் இதைக் கண்டுகொள்ளவில்லை.

This story is from the December 25-27, 2024 edition of Nakkheeran.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 25-27, 2024 edition of Nakkheeran.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM NAKKHEERANView All
இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!
Nakkheeran

இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!

\"ஹலோ தலைவரே, அம்பேத்கர் மீதான விமர்சனத்தால், நாடாளுமன்றத்தையே நடத்த முடியாத நிலைக்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது.”

time-read
4 mins  |
December 25-27, 2024
லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!
Nakkheeran

லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!

“ஜி.எஸ்.டி. அதிகாரிகள் எங்களிடம் மிரட்டுகிறார்கள். உங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்துவிடுவோம்.

time-read
1 min  |
December 25-27, 2024
கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!
Nakkheeran

கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!

ஊராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!

time-read
2 mins  |
December 25-27, 2024
காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!
Nakkheeran

காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!

தீபத்தன்று மட்டும் இருபது லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பக்காவான பாதுகாப்பு நடவடிக்கையை செய்திருந்தது காவல்துறை. ஆனாலும் போலீசாரின் சர்வாதிகாரத்தால் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றனர்.

time-read
1 min  |
December 25-27, 2024
ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!
Nakkheeran

ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!

ஆட்சி, அதிகாரப் பதவிகளனைத்தும் கைவிட்டுப்போயிருக்கும் நிலைமையை மாற்ற, ஓ.பி.எஸ். கோவில் கோவிலாய் யாத்திரை கிளம்பியிருக்கிறார்.

time-read
1 min  |
December 25-27, 2024
ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
Nakkheeran

ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!

-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!

time-read
1 min  |
December 25-27, 2024
வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!
Nakkheeran

வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!

'தமிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

time-read
3 mins  |
December 25-27, 2024
கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?
Nakkheeran

கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?

கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை வளங்கள் கண்ணும் கருத்து மாகப் பாதுகாக்கப்படுகின்றன.

time-read
2 mins  |
December 25-27, 2024
அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!
Nakkheeran

அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!

“அமைச்சரே நான் சொல்றதத்தான் கேட்பாரு” -செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊராட்சி கவுன்சிலரான அருள்தேவியின் ஆட்டத்தால் ஒரு கிராமமே தவிக்கிறது.

time-read
2 mins  |
December 25-27, 2024
கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!
Nakkheeran

கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!

ஓலா, ஊபர் வாடிக்கையாளர்“மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க..”“அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...”“மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...”

time-read
1 min  |
December 25-27, 2024