CATEGORIES
Kategoriler

மரம் விழுந்ததில் இரு தொழிலாளிகள் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தின் அருகில் இருந்த மரத்தை வெட்டி இழுத்த போது, விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

செல்ஸியை வீழ்த்தியது ஆர்செனல்
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், ஆர்செனல் 1-0 கோல் கணக்கில் செல்ஸியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதல்வர் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை என்பதை மறைக்கவே முதல்வர் மு.க.ஸ்டாலின் 'விடியோ ஷூட்' நடத்தி கேள்வி - பதில் காணொலி வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.
வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் தீ விபத்து: 59 பேர் உயிரிழப்பு; 155 பேர் காயம்
வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர், 155 பேர் காயமடைந்தனர்.
வடசென்னையில் ரௌடி கைது
வடசென்னையில் தலைமறைவாக இருந்து ரௌடியை போலீஸார் கைது செய்தனர்.

உலகில் மிகவும் தொன்மையான மொழி தமிழ்
உலகில் மிகவும் தொன்மையான கவித்துவம் கொண்டது தமிழ் மொழி என திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்தார்.

ஓயாத ஹோலி கொண்டாட்டம்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மேனார் கிராமத்தில் மேனாரியா பிராமண சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிய 'வெடிமருந்து ஹோலி'.
7,783 அங்கன்வாடி பணியாளர்-உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்
தமிழகத்தில் நேரடி நியமனம் மூலம் 7,783 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு
இரண்டாவது ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.
வலி நிவாரண மாத்திரைகள் முறைகேடாக விற்பனை: 2 பேர் கைது
சென்னையில் முறைகேடாக வலிநிவாரண மாத்திரைகளை விற்றதாக 2 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 400 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
வெளி மாநிலத்தில் உதவி லோகோ பைலட் தேர்வு மையம் ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்
உதவி லோகோ பைலட் தேர்வுக்கு வேறு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில், ரயில்வே வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் ‘ரைசினா உரையாடல்’ மாநாடு: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்
தில்லியில் ‘ரைசினா உரையாடல்’ எனும் 3 நாள் சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்கிவைக்க உள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல் நலக் குறைவு: நலம் விசாரித்தார் முதல்வர்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இயற்கை விவசாயி அந்தோணிசாமிக்கு சட்டப் பல்கலை. விருது
முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமிக்கு 'வேளாண் வேந்தர்' எனும் விருதை தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வழங்கி கௌரவித்துள்ளது.
பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்; 3 துணை ராணுவத்தினர் உள்பட ஐவர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே

நியூஸிலாந்து பிரதமர் இந்தியா வருகை
நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சர்களுடன் ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
தனியார் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி: ஊழியர்கள் 3 பேர் கைது
தனியார் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி செய்த வழக்கில், ஊழியர்கள் 3 பேரை மத்திய குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்தியா-மலேசியா இணைந்து நடத்தும் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு
ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மற்றும் அதன் 8 பார்வையாளர் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணர் பணிக்குழுவின் (இடபிள்யுஜி) இரண்டு நாள் மாநாடு தில்லியில் புதன்கிழமை (மார்ச் 19) தொடங்க உள்ளது.

இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்
'இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்; இப்போட்டி மோதலாக உருவெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி
சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடன் செயலிகளை நம்ப வேண்டாம் சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை
பொதுமக்களுக்கு கடன் வழங்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டிரம்ப்பை எதிர்கொள்ள ஒருங்கிணைவோம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.
இல்லாத மதரஸாக்களின் பேரில் அரசிடம் நிதியுதவி: 219 வழக்குகளைப் பதிவு செய்த உ.பி. போலீஸார்
இல்லாத மதரஸாக்களின் பேரில் அரசிடம் நிதியுதவி பெற்றுவந்ததாக எழுந்த புகாரின் பேரில் 219 மதரஸாக்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநில போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

91 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்: முதல் டி20-யில் நியூஸிலாந்து வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி பெற்றது.

காலமானார் எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன்
எழுத்தாளரும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலருமான இரா. நாறும்பூநாதன் (64) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
சிசுவைத் தவிக்கவிட்டு மாயமான காதல் ஜோடி
பிறந்த 2 நாள்களே ஆன சிசுவைத் தவிக்க விட்டு மாயமான காதல் ஜோடியைத் தேடி கண்டுபிடித்த போலீஸார் குழந்தையை அந்த ஜோடியிடமே ஒப்படைத்தனர்.
நாய் உமிழ்நீர்பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்
நாய் கடித்தால் மட்டுமன்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீர் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

வேளாண்மையில் காலநிலை மாற்ற சவாலை எதிர்கொள்ள முன்மாதிரித் திட்டம்
காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு விவசாயம் செய்ய முன்மாதிரித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலர் வ.தட்சிணாமூர்த்தி கூறினார்.