CATEGORIES
Categories
பல்வேறு மாநில இடைத்தேர்தல்: பாஜக 20 தொகுதிகளில் வெற்றி
புது தில்லி, நவ. 23: உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் அடங்கிய 46 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக 20 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 6 இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் 7, ஆம் ஆத்மி 3, சமாஜவாதி 2 இடங்களைக் கைப்பற்றின.
ம.பி. இடைத் தேர்தல்: பாஜக அமைச்சர் தோல்வி
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தோ்தலில் பாஜகவைச் சோ்ந்த மாநில அமைச்சா் ராம்நிவாஸ் ராவத், காங்கிரஸ் வேட்பாளா் முகேஷ் மல்கோத்ராவிடம் தோல்வியடைந்தாா்.
வழிகாட்டிய ராகுலுக்கு நன்றி
எனக்கு வழிகாட்டிய தோடு, எப்போதும் ஆதரவளித்துவரும் சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி என்று வயநாடு மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளரும் காங்கிரஸ் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
மேகாலய இடைத்தேர்தல்: முதல்வர் மனைவி வெற்றி
ஷில்லாங், நவ. 23: மேகாலயத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) சார்பில் காம்பேக்ரே தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் கான்ராட் கே.சங்மா வின் மனைவி மெஹ்தாப் சண்டி அகிடோக் சங்மா (படம்) சுமார் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிர தேர்தல்: முதல்வர், துணை முதல்வர்கள் வெற்றி
நாகபுரி/ பாராமதி நவ. 23: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் கோப்ரி-பச்பகாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனை), நாகபுரி தென்மேற்கு தொகுதியில் போட்டியிட்ட மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ், பாராமதி தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு துணை முதல்வர் அஜீத் பவார் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஜார்க்கண்ட் முதல்வர் குடும்பத்தில் மூவர் வெற்றி
ராஞ்சி, நவ.23: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும் அந்த மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் மற்றும் ஹேமந்த் சோரனின் சகோதரர் வசந்த் சோரன் ஆகிய மூவரும் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட்: பாஜகவின் சுழலில் சிக்காத சோரன் தம்பதி!
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
புது தில்லி, நவ. 23: கடன் அதிகரிப்பு, விளைச்சல் தேக்கம், போதிய சந்தை நடைமுறை இல்லாதது, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருவதாக உச்சநீதிமன்றம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, மீனவர் பிரச்னை, டங்ஸ்டன் சுரங்க விவகாரம்
புது தில்லி, நவ. 23: மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் புறக்கணிப்பு, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது, மதுரை அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம வள அனுமதி உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தீவிரமாக எழுப்ப தமிழக எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஜனநாயக தேர்வில் தேர்ச்சி: ஹேமந்த் சோரன் மகிழ்ச்சி
ராஞ்சி, நவ. 23: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பான வெற்றிக்காக மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஹேமந்த் சோரன், 'ஜனநாயகத்தின் தேர்வில் 'இண்டியா' கட்சிகள் தேர்ச்சி பெற்றன' என்றார்.
மகாராஷ்டிரத்தில் எதிர்பாராத முடிவு: ராகுல் காந்தி
புது தில்லி, நவ. 23: மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை; அது குறித்து விரிவாக ஆராய்வோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மகாராஷ்டிர தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு பாடம்: பிரதமர் மோடி
'மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர்' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நல்லவே எண்ணல் வேண்டும்
எண்ணமே வாழ்வு என்பது எமது சனின் வாக்கு. வாழ்க்கை என்னும் கட்டடம் எண்ணங்கள் என்னும் கற்களாலேயே எழுப்பப்பட வேண்டும். எண்ணங்கள் உயர்வானவையாக இருந்தால் வாழ்வும் கோபுரமாக உயரும்.
மகாராஷ்டிர தேர்தலில் சந்தர்ப்பவாதிகள் நிராகரிப்பு
மகாராஷ்டிர தேர்தலில் சந்தர்ப்பவாதிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதல்வர் பங்கேற்கும் விழா: ராமதாஸை அழைப்போம்
விழுப்புரத்தில் வருகிற 29-ஆம் தேதி முதல்வர் கலந்து கொள்ளும் 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்க மாறு பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.
பெண் ஐஜியிடம் 'டிஜிட்டல் அரஸ்ட்' முயற்சி: சைபர் குற்றப் பிரிவு விசாரணை
சென்னையில் பெண் ஐஜியிடம் 'டிஜிட்டல் அரஸ்ட்' மோசடிக்கு முயற்சித்த சம்பவம் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கனிமச் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது
அரிட்டாபட்டி கிராம சபையில் அமைச்சர் உறுதி
குடிமைப் பணி தேர்வில் மருந்தாக்கியல் பாடங்கள்; ஸ்ரீராமச்சந்திரா பல்கலை. நிகழ்வில் கோரிக்கை
சென்னை, நவ. 23: இந்திய குடிமைப்பணி தேர்வில் மருந்தாக்கியல் பாடங்களை சேர்க்க வேண்டும் என்று ஸ்ரீராமச்சந்திரா பல்கலை.யில் நடந்த தேசிய மருந்தாக்கியல் வார நிகழ்வில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
சென்னை திருவல்லிக்கேணியில் லிஃப்டுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பனகல் பூங்கா பகுதியில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணியின் காரணமாக சென்னை பனகல் பூங்கா பகுதியில் திங்கள்கிழமை (நவ.25) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் ஆய்வுக் கூட்டம் நடத்துவது பயனளிக்காது மருத்துவர்கள் குற்றச்சாட்டு
சென்னை, நவ. 23: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் ஆய்வுக் கூட்டம் நடத்துவது எந்த வகையிலும் பயனளிக்காது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.
நவ.26-இல் மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை தேனாம்பேட்டை மற்றும் மீஞ்சூர்-இன் ஒரு சில பகுதிகளில் நவ.26-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
ஏர் இந்தியா விமான சேவை அதிகரிப்பு
சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏா் இந்தியா, இன்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக உயர்வு
சென்னை, நவ. 23: வடசென்னை வளர்ச்சித் திட்ட மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக அதிகரித்துள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
தணிக்கை வார மாரத்தான்
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
ரிப்பன் மாளிகையில் ‘மரபு நடைப்பயணம்’ தொடங்கியது
சென்னை, நவ. 23: சென்னை ரிப்பன் மாளிகையின் வரலாற்று, நிர்வாக முக்கியத்துவத்தை விளக்கும் ‘மரபு நடைப்பயணம்’ சனிக்கிழமை தொடங்கியது.
மறுமலர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கியவர் கருணாநிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை, நவ. 23: அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்கியவர் கருணாநிதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரசுப் பேருந்துகளில் தினமும் 57 லட்சம் மகளிர் கட்டணமின்றி பயணம்: தமிழக அரசு
சென்னை, நவ. 23: மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாள்தோறும் 57 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி செயல்பாடுகள்: நவ.28, 29-இல் ஆய்வுக் கூட்டம்
சென்னை, நவ. 23: பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நவ.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கட்டமைப்பைப் பார்வையிட்ட உத்தரகண்ட் அமைச்சர்
சென்னை, நவ. 23: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை உத்தரகண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தன்சிங் ராவத் பார்வையிட்டார்.