சென்னை, மார்ச் 17: அதிமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டம் வாக்கு வங்கி அரசியலுக்காக அமல்படுத்தப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.
வாக்கு வங்கி அரசியலுக்காக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது குறித்து பேரவையில் திமுக - அதிமுக இடையே திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பேரவையில் அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசியதாவது:
அமைச்சர்கள் சமூகநலத்திட்டங்கள் பற்றி குறிப்பிட்டனர். எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தைக் கொடுத்தார். ஜெயலலிதா குழந்தைகளுக்கு உடையிலிருந்து மடிக்கணினி வரை அனைத்தும் கொடுத்தார். இதுவும் சமூகநலத் திட்டங்கள்தான். இந்தத் திட்டங்களால் பயன் அடைந்தவர்களின் வயது 4. ஆனால், மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வயது வாக்கு செலுத்தும் வயது. அதைப்போல கல்லூரி செல்லும் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கப் போவதாக நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளீர்கள். அவர்களுக்கும் வாக்கு செலுத்தும் வயது. சமூக மாற்றத்துக்காகக் கொண்டு வந்த திட்டங்கள் எங்களுடையது. வாக்குவங்கிக்காகக் கொண்டுவரப்பட்டவை உங்களுடைய திட்டங்கள் என்றார்.
This story is from the March 18, 2025 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 18, 2025 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

ஐசிஎஃப் ரயில் கண்காட்சி நிறைவு
சென்னை ஐசிஎஃப்- பில் 3 நாள்கள் நடைபெற்ற ரயில் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. இந்தக் கண்காட்சியை நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்!
மழை வெள்ளம், அடர் பனி ஆகியவற்றைத் தொடர்ந்து வெயிலின் கொடுமையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராகிவரும் நேரத்தில் திடீரென்று ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி பிரச்னை தலைதூக்கியுள்ளது.

1,000 பேருக்கு நல உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்
திருவேற்காட்டில் திமுக சார்பில் 1,000 பேருக்கு நல உதவிகளை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
மக்கள் நலனைவிட இணையவழி விளையாட்டு நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா? - ராமதாஸ் கேள்வி
மக்கள் நலனை விட, இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது
லஞ்ச வழக்கில் சிபிஐ நடவடிக்கை
பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத்தொகை 33% அதிகரிப்பு
பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத்தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..
நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படவுள்ளது.

அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவே தேசிய கல்விக் கொள்கை
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து: பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வி
பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.