CATEGORIES
Kategoriler
வருங்காலத்தை பற்றி சிந்திப்பதில்லை!
குறுகிய காலத்தில் உயர்ந்த இடத்தை பிடித்த நடிகை பார் என்றால் கீர்த்தி சுரேஷை கை காட்டலாம்.
பெண்களை பித்தாக்கும் சமூக வலைத்தளங்கள்!
ஆண்களை பாரதிக்கும் எவ்வித பழக்கமும் பெண்களை அதிகம் பாதிப்பதில்லை.
பால் அலர்ஜி கவனம்!
அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை உக்கிரமடைந்து வருகிறது என்பதை புள்ளி விவரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. நிலம், நீர், காற்று அகியவை மாசடைவது அதிகரித்து வருவதால் தான் ஒவ்வாமையும் ஆண்டுக்கு ஆண்டு கூடி கொண்டயிருக்கிறது என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றுனர்.
நித்தியானந்தாவை நெருங்குமா போலீஸ்?
ஆசிரமம் ஆபாசமும்
சுகாதார உணவுகள்!
உயிர் காக்கும் உணவுகள்
கனடா அமைச்சரான தமிழ் பெண்!
௮மெரிக்காவை அடுத்துள்ள கனடா நாடு, வெளிநாடுகளில் ஒருந்து புலம் தாராளமய கண்ணோட்டத்தை பின்பற்றி வருகிறது. இதனால்தான் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் கனடாவில் குடியேற விரும்புகின்றனர். இல்வாறு குடியேறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
சமையல்
சமையல்
என்னை ஏங்க வைக்கும் ரொமான்ஸ்!
வெளியாகும் படம் வெற்றியோ, தோல்வியோ அடுத்தடுத்து ஒய்வு இல்லாமல் நடித்து தொடர்ச்சியாக படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் விஷால்.
உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?
இதோ, இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியை ஈட்டிவிட்டது. உச்சந்திமன்றத்தில் டிசம்பர் 2-ம் தேதி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் உறுதியளித்துவிட்டது. உச்சநீதிமன்றமும் அது தொடர்பான அறிக்கையை டிசம்பர் 5-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுவிட்டது. தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மாவட்டவாரியாக ஆட்சியாளர்களை சந்தித்து வருகிறார்.
இளவரசர் அதிகாரத்தை பறித்த பெண் ஆசை!
அரண்மனையில் இருப்பவர்களுக்கும் குடிசையில் லாழ்பலர்களுக்கும் உணர்வில் மாறுபாடு இருக்க வாய்ப்பில்லை. பிரபலமானவர்களின் செயல்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் . அவற்றுக்கு விளம்பர வெளிச்சம் கிடைத்து விடுகிறது. இங்கிலாந்து அரச குடும்பத்தில், அண்மையில் எழுந்த சர்ச்சை உலகம் முழுவதும் அதிர்வலைகளைக் கிளர்ந்தெழ வைத்துள்ளது.
ஆதித்ய வர்மா
தேவதாஸ் காலத்தில் 'வசந்தமாளிகை'யில் வாழ்ந்த “சேது' டைப் காதலன் 'ஆதித்யவர்மா'வின் காதல் என்னவானது என்பது கதை.
வள்ளுவருக்கு வர்ணம் பூசுவது தேவையா?
வள்ளுவருக்கு வெள்ளையை மாற்றி காவி வர்ணம் பூசியூள்ளனர் பாஜகவினர். இது அவர்களின் ஆர்வக்கோளாறு என்று எளிதில் கடக்க முடியாததாகவே உள்ளது. ஓர் அறிஞரையோ, தலைவரையோ வாக்குக்கேற்பவும் வாழ்க்கைக்கேற்பவும் அடையாளப்படுத்துவது அவசியம். வள்ளுவருக்கு இந்த வர்ணம் தவறு என்பதை அவரது வாக்கே உறுதிப்படுத்தும். பிறப்பிற்கேற்ப வர்ண பேதம் கற்பிப்பது ஆகம இந்துமதம். அனால், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவர் வாக்கு அதற்கு முற்றிலும் எதிராகவே உள்ளது.
மிக:மிக அவசரம்
பணிச் சூழலில் பெண் காவலர்களுக்கு ஏற்படும் அவஸ்தைகளை அழுக்தமாக சொல்கிறது மிக மிக அவசரம்.
பள்ளி மாணவிகள் பத்திரம்!
ஒரு பாடசாலை திறக்கும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்றார் ஓர் அறிஞர். ஆனால், இப்போது பாடசாலைகளே சிறைச்சாலைகளாகி விட்டன. பாடங்களே பெரும் தண்டனையாக தோன்றும் நிலையில், பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களும் குண்டர்களாக மாறும் கொடூரம் தொடர்கிறது. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள். மக்கள் அதை அருட்பணியாகவ பார்த்தனர். சமூகத்தில் அவர்களுக்கு தனி மரியாதை கொடுத்தனர்.
நான் மென்மையானவள் இல்லை! - ஸ்ருதிஹாசன்
கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்தை மீறி தனக்கு என்று ஒரு தகுதியை வளர்த்துக் கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். சமூகத்தில் ஒரு மோசமானவளாக இருந்து அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சொல்லும் இவர், தன்னிடம் மென்மையான திறமைகள் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறார். ஸ்ருதிஹாசன் முதல் முறையாக மனம் திறந்து சொன்ன சேதிகள் இதுவரை நாம் கேள்விப்படாதவை.
தீவிரவாதி அல் பாக்தாதி மடிந்த கதை!
உலகத் தீவிரவாதத்தின் ஊற்றுக் கண்களாக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானும் விளங்குகின்றன. இந்த நாடுகளில் தான் இன்றும் அதிக அளவில் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றார்கள். 1959-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குள் ரஷ்ய ராணுவம் புகுந்தது. அன்று முதல் அந்த நாட்டில் தீவிரவாதத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அமெரிக்கா-ரஷ்யா இடைய பனிப்போர் உச்சத்தில் இருந்த காலம். ஆகவே ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்ய ராணுவத்தை விரட்ட அங்குள்ள போராட்டக்காரர்களுக்கு பாகிஸ்தான் மூலம் அமெரிக்கா ஆயூத சப்ளை செய்தது. பின்னர் அதுவவ அமெரிக்காவுக்கு தலை வலியாகவும் மாறியது.
கெட்ட வார்த்தையில் திட்டிய நடிகை!
இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா' படத்தில் நடித்தவர் நடிகை சுவாரா பாஸ்கர், பல இந்தி படங்களில் தலை காட்டியிருக்கிறார்.
குக்கர் சாதம்... சுகர் வருமா?
நவம்பர் மாதம் 1 4-ம் தேதி சர்வதேச நீரிழிவு நோய் தினமாகும். நீரிழிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2006-ம் ஆண்டு, இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தலையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. இந்த இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் பிரெட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகே இந்நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கலர் கலர் மோசடிகள் கவனம்!
கடந்த வாரம் ஹைதராபாத்திலிருந்து கிளம்பிய 200க்கும் மற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகை மந்த்ராவின் உறவினருக்கு சொந்தமாக சென்னை, பெங்களூர், டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட கலர்ஸ் எடை குறைப்பு மையங்களில் அதிரடி சோதனை நடத்தினர். நடிகை மந்த்ராவின் தமிழக, ஆந்திர வீடுகளிலும் தீவிர சோதனை நடந்தது. இதில் பல நூறு இலட்ச ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்தது. ஆரம்பித்து சில ஆண்டுகளே ஆன நிலையில், கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் அழகு விரும்பிகளைலரவழைத்து, பலகட்டங்களாக கட்டணம் வசூலித்து அலர்களின் பர்ஸ்களை இளைக்க வைத்திருக்கிறது கலர்ஸ்.
உயிர் காக்கும் துடுப்பு!
ஜாக்மா சீனா பீர் என்று டைப் செய்தார். “விவரம் எதுவும் இல்லை' என்றது வெள்ளித்திரை. சீனாவில் வகை வகையான பீர்கள் இருக்கின்றன. கம்ப்யூட்டர் ஏன் கையை விரிக்கிறது என்று ஏமாற்றம் 'சீனா' என்று டைப் செய்தார். சீனாவின் வரலாறு, பண்டையநாகரிகம் பற்றிச் சுமார் பன்னிரெண்டூ வாக்கியங்கள். ஜாக்மா மனம் உடைந்து போனார். “எத்தனை தொழில்வளம் என் திருநாட்டில், ஏன் அந்த விவரங்கள் இல்லை இணையத்தில்' என்னும் தார்மீக கோபம் உச்சம் பெற்றது.
உணர்வுகள் முடிவதில்லை...!
பயணிகள் கூட்டத்தால் பிதுங்கி வழிந்த அந்த டவுன் பஸ்ஸை விட்டு இறங்கினாள் சுகந்தி. கிட்டத்தட்ட அரை மணி நேர போராட்டத்தில் இருந்து விடுபட்டாள். பஸ்ஸூக்குள் கூட்டமா அது? கால் லைக்க இடமில்லை. ஒற்றக்காலில் நீன்று கொண்டு மேல் கம்பியைப் பிடித்துத் தொங்கியபடி வந்து இறங்கியாயிற்று. கால்கள் இரண்டும் விண்விண்னென்று வலித்தன. தினசரிப் போராட்டம் இது! ஸ்கூட்டியில் வேலைக்குப் போகலாம் என்றால் வீட்டுக்கும் சுகந்தி வேலை பார்க்கும் பள்ளிக்கும் தூரம் அதிகம். தினசரி டூவீலரில் போய் வந்தால் அலுத்துப் போய்விடும். அதற்கு டவுன் பஸ்ஸில் போவது சிறந்தது. இவற்றை எல்லாம் பெரிதாக எடூத்துக் கொண்டால் வேலைக்குப் போகாமல் நின்று விட வேண்டியதுதான். உலகத்தின் சுழற்சி நிற்கலாம். ஆனால் சுகந்தியின் சுழற்சியை நிறுத்த முடியுமா?
அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நீர், காற்று மாசு!
பஞ்ச பூதங்களும் மாசுற்று வருகின்றன. இதனால் உயிர் வாழ தகுதியற்ற இடமாக பூமியை நாம் உருக்குலைத்து வருகிறோம். இதில் எனக்கு பங்கு இல்லை என்று யாரும் நழுவி விட முடியாது. சிலருக்கு பங்கு குறைவாக இருக்கலாம். மற்றவர்களுக்கு அதிகமாக இருக்கலாம். ஆனால் யாரும் இதில் எனக்கு தொடர்பு கிடையாது என்று ஒதுங்கி விட முடியாது. மண்ணும், நீரும், காற்றும் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகின்றன.