பிஞ்சுத் தோழர்களே,
ஆனால், அத்தனை உயிரினங்களையும் விட மனிதன் ஒன்றில் மட்டும் சிறப்பானவனாக இருக்கிறான். எதில்?
பகுத்தறிவு கொண்டு சிந்திப்பதில்.
இந்தப் பகுத்தறியும் நுண்ணறிவு மனிதனின் அன்றாட வாழ்விற்கும் புதியனவற்றைக் கண்டு பிடிக்கவும், உருவாக்கவும் இந்த உலகைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
ஆனால், இந்தச் சிந்திக்கும் நுண்ணறிவு மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது.
மனிதன் தன் வாழ்க்கையை எளிமையாக்கவும் அவன் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் பல கருவிகளை உருவாக்கினான். புதிய கருவிகள் அவன் கைகளை விரிவாக்கியன. சக்கரம் அவனுக்கு ஆயிரம் கால்களைக் கொடுத்தது. புதுப்புதுக் கருவிகள் உருவாக்க உருவாக்க மனிதனின் வாழ்வு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கு உணவு என்பது காட்டில் வேட்டையாடினால் மட்டும்தான் கிடைக்கும். வேட்டையாடவும் அவனிடம் கைகள் மட்டும்தான் இருந்தது. புதுப் புதுக் கருவிகளை உருவாக்கி உருவாக்கி காலப்போக்கில் அவன் விவசாயம் செய்யத் தெரிந்துகொண்டான். விவசாயம் அவன் உணவுத் தேவையை உறுதிப்படுத்தியது. நேரம் மிச்சம் ஆகியது. சும்மா இருந்த நேரத்தில் இன்னும் இன்னும் இன்னும் இந்த உலகைப் பற்றி அறிந்து கொண்டான். மேலும் மேலும் புதிய கண்டுபிடிப்புகள்.
மனிதனின் கருவிகளும் கண்டுபிடிப்புகளும் வாழ்க்கையை மேம்படுத்தினவே தவிர ஒரு போதும் அவனை வீழ்த்தவில்லை. அவன் வாழும் நாள்களையும் அதிகரித்துக் கொடுத்தன.
இன்று நம்மைச் சுற்றி பல ஆயிரம் புதிய கருவிகள் உள்ளன. 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட டிஜிட்டல் கணினி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் மனித சமூகத்தின் வளர்ச்சியை வேகப்படுத்திவிட்டன. இன்று இணையத்தின் உதவியுடன் உலகமே ஒரு கிராமம் ஒரு வீடு எனச் சுருங்கிவிட்டது .
Bu hikaye Periyar Pinju dergisinin June 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Periyar Pinju dergisinin June 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
2023இல் உலக நாடுகளில் குழந்தைகளுக்கு ஆதரவாக என்னவெல்லாம் நடந்துள்ளன?
நாளைய சமுதாயத்தைக் கட்டமைக்கும் தூண்கள், வருங்கால இளைஞர்கள் என்றும், புன்னகை வீசும் ரோஜாக்கள் என்றும் இன்னும் எத்தனையோ வர்ணனைகளில் வர்ணித்தாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும், சுரண்டல்களும், அடக்குமுறைகளும் தொடர்கதையாகவே இருந்து வருவதை நாம் அறிவோம்.
குப்பைக் கழிவு மேலாண்மையும் சுற்றுப்புறப் பாதுகாப்பும்
நமது வீட்டுக் குப்பையில் பாதிக்கு மேல் மட்கும் பொருள்களே. மேலும் இந்தக் குப்பைகள் நகரம் மற்றும் கிராமப் பொருளாதார வசதிகளைப் பொருத்தும் மாறுபடும்.
தைலம் எப்படி வலியைக் குறைக்குது?
நம்மளச் சுற்றி, எதுக்கு எடுத்தாலும் தைலம் தேய்க்கும் நபர்கள் நிச்சயம் இருப்பாங்க, பார்த்து இருக்கீங்களா? அவங்க வலியை ரசிக்கவே மாட்டாங்கப் பா, வலி உடனே நெனைச்சிக்கிட்டே போய்டணும்னு தேய்ப்பாங்க. ஆனா, உண்மையிலேயே தைலம் வலியைப் போக்குதா?
எமள வளர்த்த அவுன்
2004 ஆம் ஆண்டு வேட்டைக்காரர்களால் பெற்றோரைப் பறிகொடுத்து ஆதரவற்று இருந்த நீர்யானைக்குட்டி ஒன்றைப் பாதுகாவலர்கள் காப்பாற்றி அதற்கு அவுன் என்று பெயர் சூட்டி கென்ய மும்பாசா வனவியல் பூங்காவில் வைத்துப் பராமரித்தனர்.
உஷ்ஷ்..
மாலிவியா காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அங்கேதான் காட்டின் மாதாந்திரக் கூட்டம் வழக்கமாக நடைபெறும்.
பாதையை மாற்றும் போதை!
20 வயதுக்கு மேற்பட்டவர்களை எச்சரிக்கை வேண்டிய காலம் மாறி, தற்போது 10 வயது சிறார்களையே எச்சரிக்கை வேண்டிய கட்டாய அவலநிலை வந்துவிட்டது.
தீப்பற்றிய தினம்!
1924ஆம் ஆண்டு மார்ச் 30
ஏரியில் கணிதம் பயில்வோம்!
ஏரியைப் பார்த்திருக்கின்றீர்களா? நிறைய இருக்குமே? எவ்வளவு பெரிய ஏரி [அது! ரொம்ப பெருசு.
டீச்சர்... கரடீ...!
குழந்தைகள் கதைகள்
அல்காரிதம்
செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஒரு கணினி எப்படி இயங்குகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.