நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணி, சொல்லி வைத்த மாதிரி 40-க்கு 40 தொகுதிகளையும் தட்டித் தூக்கி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் நேரத்தில்....இங்கே பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க., பல இடங்களில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, மதுரையில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜு, முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா ஆகிய அ.தி.மு.க.வின் இரண்டு பவர்ஃபுல் மா.செ.க்கள் இருந்தும், அ.தி.மு.க. வேட்பாளரான டாக்டர் சரவணன் இந்தத் தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். மதுரை அ.தி.மு.க.வினரோ, இந்த வீழ்ச்சிக்குக் காரணமானவர்கள் என மேற்கண்ட இருவரையும் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இப்படி ஒரு குற்றச்சாட்டை அவர்கள் வைக்கக் காரணம், மதுரை மா.செ.க்களாக செல்லூர் ராஜுவும், ராஜன் செல்லப்பாவும் கடந்த 20 வருடங்களாக இருந்து வருகின்றனர். இவர்களை மீறி அ.தி.மு.க.வில் எவராலும் தலையெடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கட்சியையாவது பலப்படுத்த வேண்டாமா? என்கிற கேள்வியை ரத்தத்தின் ரத்தங்கள் பலரும் வைக்கிறார்கள்.
மதுரை ஒருகாலத்தில் அ.தி.மு.க.வின் கோட்டையாகப் பார்க்கப்பட்டது. முக்குலத்தோர் அதிகமுள்ள மதுரையில் சவுராஷ்டிரா சமூகத்தினரின் வாக்குகள் ஒரு லட்சம் அளவிற்கு இருக்கின்றது. அதற்கு அடுத்தடுத்த இடத்தில் இஸ்லாமியர், பிள்ளைமார், கோனார், தலித்துகள் வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க.விற்கே தொடர்ந்து வாக்களித்து வந்திருக்கிறார்கள். இருந்தும் இப்போது அ.தி.மு.க. அங்கே கோமா நிலைக்கு வந்திருக்கிறது.
Bu hikaye Nakkheeran dergisinin June 19 - 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Nakkheeran dergisinin June 19 - 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நஷ்டம்... ஆனாலும் இஷ்டம்!
நான் தயாரிப்பாளர் ஆனதே.... எதிர்பாராமல் நடந்ததுதான். என் னைப் படம் தயாரிக்கச் சொல்லி ஊக்கமும், உதவியும் செய்ததே ஏவி.எம்.மெய்யப்பன் அப்பச்சிதான்.
அந்த இரண்டு பெண்கள்! Exclusive ஆடியோ! சிக்கும் ஐக்கி!
சாமியாரும், ஈஷா யோகா மையத்தின் நிறுவனருமான ஜக்கி வாசுதேவ் குறித்து 'துவக்கத்திலிருந்தே 'நக்கீரன்' செய்திகள் மூலம் அம்பலப்படுத்தி வருகிறது.
ட்ரம்ப் செகண்ட் இன்னிங்ஸ்!
உலகமே உற்றுக்கவனித்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று, இரண்டாவது முறை யாக அமெரிக்க அதிபராகிறார்.
விஷவாயு? மயங்கிவிழும் மாணவிகள் -திருவொற்றியூர் பள்ளி அவலம்!
எண்ணூரில் சில மாதங்களுக்கு முன்பாக விஷவாயுக் கசிவு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் தாக்கம் மாறுவதற்குள் திருவொற்றியூரில் திடீரென பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிவிழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் பேரகராதி உருவாக்கும் ஜெர்மன் பேராசிரியர்!
தமிழ் என் தாய்மொழி யில்லை. ஆனால் தமிழ் செய்யுள்கள் என் காதலுக்குரிய வை' என்கிறார் ஈவா வில்டன்.
இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா!
போதைப் பொருள்களை ஒழிக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஒருபக்கம் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், அதைப்பற்றிக் கொஞ்ச மும் கவலைப்படாமல் சமூக விரோதிகள் சிலர், சட்டவிரோத போதைப் பொருட்களை கடத்தியும், விநியோகித் தும் சட்டம் ஒழுங்கிற்கு சவால் விட்டு வருகின்றனர்.
கூட்டுறவு சங்க சுருட்டல்கள்! விரக்தியில் விவசாயிகள்!
விவசாயிகளுக்கும், நலிவடைந்த மக்க ளுக்கும் குறைந்த வட்டியிலும், வட்டி இல்லாம் லும் கடனுதவி செய்து, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர பேருதவியாக இருப்பதற்காகத் தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தொடங் கப்பட்டன. இப்படி பொது மக்கள், விவசாயிகளென எளிய மக்களுடன் பின்னிப்பிணைந்த கூட்டுறவு சங்கங்களில், தற்போது ஊழியர்கள், அதிகாரிகளென அனைவரும் முறைகேட்டில் ஈடுபடு வது தொடர் சம்பவங்களாக நடைபெற்றுவருகின்றது. இதனால் சுமார் 500 வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளனர்.
விஜய் வருகையால் வேகம் எடுத்த தி.மு.க.!
அமைச்சர்களுக்கு மார்க் போடும் ஸ்டாலின்!
குடிபோதை! சினை மாடுகள் மீது மோதல்! ஈஷா நிர்வாகி அட்டூழியம்!
கோவை ஈஷா யோக மையத்தின் நிர்வாகி தினேஷ் ராஜா, மடக்காடு கிராமத் தினருகே குடிபோதையில் காரை ஓட்டி வந்து, தங்கமணி என்ற பெண் வளர்த்துவந்த சினைப்பசு மாடுகள் மீது மோதியதோடு, போலீஸ் ஆதரவோடு மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவலி பதில்கள்
சிலிண்டர் 16.500 மட்டுமே [ஜார்கண்டில் மட்டும்]