பா.ம.க.-அ.தி.மு.க. டீல்!
Nakkheeran|June 19 - 21, 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் உற்சாகமாகியிருக்கிறது பா.ம.க.
இரா.இளையசெல்வன்
பா.ம.க.-அ.தி.மு.க. டீல்!

அ.தி.மு.க.வின் இந்த புறக்கணிப்பு அக்கட்சியின் தேர்தல் அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன்? எதற்கு? என்கிறவிவாதங்கள் அ.தி.மு.க.வில் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.

விக்கிரவாண்டியின் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நடக்கும் என சொல்லப்பட்ட நிலையில், போட்டியிலிருந்து ஜகா வாங்கியிருக்கிறது அ.தி.மு.க.

ஏன் இந்த முடிவு? என அ.தி.மு.க. முகாம்களில் விசாரித்தபோது, விக்கிரவாண்டிக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்கிற சாய்சை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைத்திருந்தார் எடப்பாடி. அதேசமயம், சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணனை நிறுத்தலாம் என்கிற ஒரு யோசனை எடப்பாடி மற்றும் சீனியர்களிடம் இருந்துள்ளது. ஆனால், இதனை ஏற்கவில்லை சண்முகம். இதனையடுத்து, முழுபொறுப்பும் அவரிடமே ஒப்படைக்கப்பட்ட நிலையில், மாவட்ட அ.தி.மு.க.வினருடன் சண்முகம் ஆலோசனை நடத்தினார். ஆனால், யாருக்குமே தேர்தலில் நிற்க ஆர்வமில்லை. காரணம், இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும். ஆளுங்கட்சி செய்கிற செலவுகளுக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியாது என சொன்ன அ.தி.மு.க.வினர், 'தேர்தல் செலவுகளை கட்சி கவனித்துக்கொண்டால் போட்டியிட முன்வருகிறோம்... இல்லையெனில், கஷ்டம்' என தெரிவித்திருக்கின்றனர் மாவட்ட ர.ர.க்கள்.

இதனைத்தொடர்ந்து, அ.தி.மு.க. தலைமையகத்தில் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி. அதில் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சீனியர்கள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்ட அ.தி.மு.க.வினரின் நிலையை எடுத்துச் சொன்னார் சண்முகம். அதனால், 'ஆளுங்கட்சியின் அராஜகங்களை சுட்டிக்காட்டி விட்டு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுக்கலாம்' என்றும் சொன்னார்.

அப்போது, 'ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் நடத்திய காட்சிகளைவிட அதிகமாகவே விக்கிரவாண்டியில் நடத்துவார்கள். அதிகார பலம், பண பலம் மொத்தமாக இறங்கும். இந்த சிக்கலில் சிக்கிக்கொண்டு 3-வது இடமோ, 4-வது இடமோ அ.தி.மு.க.வுக்கு கிடைத்தால் அது கட்சியை பாதிக்கும். அதற்குப்பதில், தேர்தலை புறக்கணித்துவிடலாம்' என வேலுமணி சொல்லியிருக்கிறார்.

Bu hikaye Nakkheeran dergisinin June 19 - 21, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Nakkheeran dergisinin June 19 - 21, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

NAKKHEERAN DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
Nakkheeran

போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்

மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.

time-read
1 min  |
December 28-31, 2024
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
Nakkheeran

டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?

மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
2 dak  |
December 28-31, 2024
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
Nakkheeran

ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!

ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

time-read
2 dak  |
December 28-31, 2024
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
Nakkheeran

2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!

‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.

time-read
3 dak  |
December 28-31, 2024
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
Nakkheeran

டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!

தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.

time-read
1 min  |
December 28-31, 2024
தொழிலாளர்களுடன் தோழமை!
Nakkheeran

தொழிலாளர்களுடன் தோழமை!

சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.

time-read
3 dak  |
December 28-31, 2024
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
Nakkheeran

எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!

தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.

time-read
1 min  |
December 28-31, 2024
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
Nakkheeran

கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!

கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!

time-read
2 dak  |
December 28-31, 2024
மாவலி பதில்கள்
Nakkheeran

மாவலி பதில்கள்

மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.

time-read
1 min  |
December 28-31, 2024
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
Nakkheeran

அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!

அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.

time-read
3 dak  |
December 28-31, 2024