“ஆமாப்பா... அர்ஜுன் ரெட்டியும், விஜய் கட்சியில் பதவி வாங்கணும்னு தவிக்கிறாராமே?”
“ஆமாங்க தலைவரே, தி.மு.க.வை விமர்சித்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட அர்ஜுன் ரெட்டி, இப்போது தன் 'வாய்ஸ் ஆஃப் காமன்' அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரம்காட்டி வருகிறாராம். இப்போதும் அவர் கவனம் முழுதும் விஜய்யின் த.வெ.க.வில் சேர்ந்து, மாநில அளவில் ஒரு பதவியைப் பெறுவதுதானாம். அதற்காக, சமூக வலைதளங்களில் நியூட்ரலாக, தங்கள் கருத்தை எழுதிவரும் இளைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களைவிட்டு நடிகர் விஜய்க்கு ஆதரவான கருத்துக்களை எழுதிப் பரப்புங்கள் என்று சொல்கிறாராம். இப்படிச் செய்வதன் மூலம் விஜய்யின் மனதை பெரிதும் கவரலாம் என்பது அவரது நம்பிக்கையாம். ஆனால் இவரது முயற்சிகள் நடிகர் விஜய்யிடம் பலிக்காது. அவர் செய்வது வீண் முயற்சி என்கிறது விஜய் தரப்பே.”
“பா.ஜ.க. ஆதரவோட புதுச்சேரியில் ஆதிக்கத்தை நிலைநாட்ட லாட்டரி குடும்பத்தினர் தீவிரமாக செயல்படுகிறார்களாமே?”
“ஆமா தலைவரே, தமிழ்நாட்டில் தனது மருமகன் அர்ஜூன் ரெட்டி மூலமாக நகர்த்திய காய்கள் வெட்டுப்பட்டுவிட்டதால், புதுச்சேரியில் தனது மகன் சார்லஸை அரசியலில் முன்னிலைக்கு கொண்டுவர பலவிதமாகக் காய்களை நகர்த்திவருகிறார் லாட்டரி அதிபர் மார்ட்டின். பா.ஜ.க. ஆதரவுடன், தனது மகனுக்கு துறைமுக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை செய்து தந்துள்ள புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களான ஜான்குமார், ரிச்சர்ட் ஆகிய இரு லாட்டரி அதிபர்களை வைத்து 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவருகிறாராம். இந்த
கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி
இருவரும், நமச்சிவாயத்தோடு அதிருப்தியில் இருப்பவர்களாம். புதுச்சேரியில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டால் சார்லஸை முதலமைச்சராக்கிவிட வேண்டும் என்ற திட்டத்தையும் கைவசம் வைத்திருக்கிறாராம்.
காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜான் குமார், தன்னுடைய தொகுதி யையோ, தன்னுடைய மகன் விவிலி யன் ரிச்சர்ட் தொகுதியான நெல்லித் தோப்பு தொகுதியையோ விட்டுக் கொடுத்து, அந்த தொகுதியில் சார்லஸை நிறுத்தத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் ஒரு தொண்டு நிறுவன நிகழ்ச்சியை நடத்தி அதன்மூலம்நலத்திட்ட உதவிகளை வழங்கி பிரமாண்டப் படுத்தியிருக்காராம் சார்லஸ்.”
Bu hikaye Nakkheeran dergisinin December 28-31, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Nakkheeran dergisinin December 28-31, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.