CATEGORIES
Kategoriler
ரயில்வே மருத்துவமனைகளில் 86 ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படவுள்ளன
புது தில்லி, மே 19 கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், தனது மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் 86 ரயில்வே மருத்துவமனைகளில் மிகப்பெரிய அளவில் திறனை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி சவாலான காரியம் தான் : சீரம் தலைவர் தகவல்
புனே, மே 19 இந்தியாவில் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என சீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலையை அப்போலோ மருத்துவமனை உயர்த்தியது
ஹைதராபாத், மே 19 நாட்டில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் இருந்தாலும், போதுமானதாக இல்லை. இந்தச் சூழ்நிலையில் ரஷ்யாவில் இருந்து டாக்டர் ரெட்டி லேப்ஸ் இறக்குமதி செய்துள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி அரசு ஒப்புதல் பெற்று பயன்பாட்டு வந்துள்ளது.
தினசரி நான்காயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் எஃகு ஆலைகள் தொடர்ந்து விநியோகம்
புது தில்லி, மே 19 நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் துறையை சேர்ந்த எஃகு ஆலைகள் உயிர் காக்கும் திரவ மருத்துவ ஆக்சிஜனை தொடர்ந்து விநியோகித்து வருகின்றன. எஃகு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வழிகாட்டுதலின்படி, கோவிட் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அவை எடுத்துள்ளன.
13 சதம் கோவிட் பாதிப்பை இந்தியா குறைத்தது உலக சுகாதார அமைப்பு தகவல்
ஜெனீவா, மே 19 கோவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா தொடர்ந்து மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால் கடந்த ஒரு வாரத்தில் தொற்று 13 சதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மே 23ல் நெஃப்ட் சேவை நிறுத்தம்: ஆர்பிஐ தகவல்
மும்பை, மே 18 மே 22 வரும் சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிறு (மே 23) பிற்பகல் 2 மணி வரையில் 14 மணி நேரத்துக்கு நெஃப்ட் பணப்பரிமாற்ற சேவையை வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது என்று ஆர்பிஐ அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஊரடங்கால் தமிழகத்தில் 75 சதம் லாரிகள் நிறுத்தம்
நாமக்கல், மே 18 தமிழகம் முழுவதும் ஊரடங்கால் 75 சத லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ரெம்டெசிவிரை பெற இணையதளம் தொடக்கம்
சென்னை, மே 18 தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கு பதிலாக இனி இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நாட்டில் கோவிட் 2வது அலையில் 270 மருத்துவர்கள் உயிரிழப்பு: இந்திய மருத்துவ கூட்டமைப்பு தகவல்
புது தில்லி, மே 18 இந்தியாவில் கோவிட் தொற்று 2வது அலையில் சிக்கி, இதுவரை 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என, இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ.) தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ கூட்டமைப்பு தலைவர் மருத்துவர் ஜெயலால் தெரிவித்துள்ளதாவது:
1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெளிநாட்டிலிருந்து வாங்குகிறது ஓஎன்ஜிசி
புது தில்லி, மே 18 கோவிட் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாக ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ரெம்டெசிவிர் உற்பத்தி மற்றும் ஒதுக்கீடு கணிசமாக அதிகரிப்பு: சதானந்த கவுடா
புது தில்லி, மே 17 ரெம்டெசிவிர் மருந்தின் தேவை ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு அவற்றின் இருப்பை உறுதி செய்யவும், மே 23 வரை மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றிய தகவல்களை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் டிவி சதானந்த கவுடா வெளியிட்டார். ரெம்டெசிவிர் மருந்துகளின் உற்பத்தி மற்றும் ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
சுதந்திர போராட்டத்துக்கு பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து
சிகாகோ , மே 17 சுதந்திர போராட்டத்துக்கு பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கோவிட் தொற்று பெருந்தொற்று என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ஜூலைக்குள் 51.6 கோடி பேருக்கு தடுப்பூசி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை
புது தில்லி, மே 17 வரும் ஜூலை மாதத்திற்குள் 51.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவிட் சவால்கள் இருந்தபோதும் கொல்கத்தாவில் 800 மீட்டர் சுரங்கப்பாதை பணியை முடித்தது ரயில்வே
புது தில்லி, மே 17 கொல்கத்தாவின் போபஜார் பகுதியில், கிழக்கு மேற்கு மெட்ரோ வழித்தடத்தின் சுரங்கப் பாதை பணி நேற்று முடிவடைந்தது. இங்கு உர்வி' என்ற இயந்திரம் மூலம் சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2வது டோஸ் இடைவெளி நீடிப்பால் கோ-வின் இணையதள முன்பதிவு முறையில் மாற்றம் மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
கோவிஷீல்டு 2வது டோஸ் இடைவெளி நீடிப்பால் கோ-வின் இணையதளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ரெம்டெசிவிரை பதுக்கி விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மின்சார கார்களின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உயர்த்தியது
இந்தியாவின் மலிவு விலை மின்சார காரின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்திக் கொள்ளலாம்
மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கம்
எல் & டி நிறுவனத்தின் லாபம் 11.3 சதம் அதிகரிப்பு
முன்னணி பொறியியல் மற்றும் கட்டுமானத் துறை நிறுவனமாகத் திகழும் லார்சன் & டூப்ரோ (எல்&டி நான்காவது காலாண்டில் ரூ.3,820 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து எல் & டி நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கோவிட் தொற்று பரவல் வேதனை அளிக்கிறது: டெட்ராஸ் அதனாம்
இந்தியாவில் கோவிட் தொற்று சூழல் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதும், உயிரிழப்பதும் வேதனையளிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.
மே 17ல் தங்க பத்திர வெளியீடு: நிதியமைச்சகம் தகவல்
நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின், முதலாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, மே 17ம் தேதியன்று துவங்குவதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரூ.239 கோடி நிகர லாபம் ஈட்டியது
கடந்த மார்ச் காலாண்டில் டாடா குழு மத்தைச் சேர்ந்த வோல்டாஸ் நிறுவனம் ரூ.239 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாய் நாட்டிற்கு பணம் அனுப்பிய தொகை 0.2 சதம் குறைவு: உலக வங்கி
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு கடந்த ஆண்டு நிலவரப்படி, ரூ.6.22 லட்சம் கோடி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மருந்துகளின் இருப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு
நாட்டில் கொவிட்-19 தொடர்பான நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று விரிவான ஆய்வை மேற்கொண்டார். பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் கொவிட் பாதிப்பு குறித்து அவருக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை மேற்கொண்டு வரும் 12 மாநிலங்கள் பற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. நோயின் தாக்கம் அதிகமுள்ள மாவட்டங்கள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.
மருத்துவமனைகளுக்கு 22 ஜெனரேட்டர்கள் எல் அண்ட்டி நிறுவனம் வழங்க திட்டம்
மும்பை, மே 6 நாட்டில் கோவிட் பரவலின் இரண்டாம் அலை தீவிரமாகியுள்ள நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில், முன்னணி உட்கட்டமைப்பு நிறுவனமான எல்&டி ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய 22 ஜெனரேட்டர்களை மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
216 கோடி தடுப்பூசி 5 மாதங்களில் தயாராக இருக்கும்: மத்திய அரசு தகவல்
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் -வி ஆகிய 3 தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு கடந்த ஜனவரி 16ந் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தற்போத பயன்பாட்டில் உள்ளது.
12 வார கால இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் எதிர்வினை ஆற்றும் தன்மை அதிகரிப்பு : ஆய்வு தகவல்
12 வார கால இடைவெளியில் செலுத்தப்படும் ஃபைசர் தடுப்பு மருந்தில் கோவிட் தொற்றுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகம் உருவாகும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐபிஓ வெளியிட மெடி அசிஸ்ட் திட்டம்
புது தில்லி, மே 13 மெடி அசிஸ்ட் ஹெல்த்கேர் சர்வீசஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான, செபிக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜிஎஸ்டியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதமாக நிர்ணயிக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ஆக்ஸிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகை
தமிழக அரசு உத்தரவு