சர்ச்சைக்குள்ளான திருப்பதி லட்டு விவகாரம் தோஷ நிவர்த்தி பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு
கலியுக வைகுண்டமாக விளங்கும் திருப்பதியில் ஏழுமலையானுக்கு படைக்கும் நெய்வேத்தியம் மற்றும் லட்டு பிரசாதத்துக்கான நெய்யில் மீன், பன்றி, மாட்டின் கொழுப்புகள் கலந்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தோஷ நிவர்த்தி பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் கலியுக வைகுண்டமாக விளங்கி வருகிறது. இதில் திருப்பதி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஏழுமலையானின் லட்டு பிரசாதம் தான். தினமும் சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நண்பர்கள், சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களுக்கும் கூடுதலாக லட்டு பிரசாதம் வாங்கி செல்கின்றனர். இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினந்தோறும் 3.5 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. இதில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க கூடிய நிலையில், கூடுதல் லட்டு ஒன்று ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு மாதந்தோறும் 1 கோடிக்கு மேல் லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. தேவஸ்தான நிர்வாகம் லட்டு பிரசாதம், சுவாமிக்கு படைக்கும் நெய்வேத்தியம், திருச்சானூர் கோயிலுக்கு பிரசாதம் என ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி ஆண்டுக்கு ரூ.260 கோடிக்கு மேல் நெய் கொள்முதல் செய்யப்பட்டு பிரசாதம் தயார் செய்யப்படுகிறது. இந்த நெய் கொள்முதல் டெண்டர் விடப்பட்டு தேவஸ்தான நிபந்தனைக்கு உட்பட்டு தர முன்வரும் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு 5 நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பக்தர்களிடம் இருந்து லட்டு பிரசாதம் தரம், சுவை இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தில் புதிதாக பொறுப்பேற்ற செயல் அதிகாரி ஷியாமளா ராவ் லட்டு பிரசாதம் தரம் உயர்த்துவதற்காக கமிட்டி ஏற்பாடு செய்தார்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin September 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin September 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
சீரமைக்க கோரிக்கை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.