பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மின்சார ரயில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
உதாரணமாக ஒரு நாளைக்கு மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டால் சென்னை மாநகரமே திக்குமுக்காடிவிடும். சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, சென்ட்ரல்- அரக்கோணம், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, கடற்கரை-வேளச்சேரி என ஆகிய ரயில் சேவை சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கிறது. இதில் சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடம் முக்கியமான வழித் தடமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 18 ரயில் நிலையங்கள் உள்ளன. மேலும் அந்த ரயில் ரயில் நிலையங்களை ஒட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், இந்த வழித்தடத்தில் ஓடும் மின்சார ரயில்கள் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பு வரை, இந்த வழித்தடத்தில் நாள்தோறும் சுமார் 1 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே சுமார் 279 கோடி ரூபாய் செலவில் 4வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ரயில் பயணிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக சென்னை கடற்கரைக்கு பதிலாக சிந்தாதிரிபேட்டை- வேளச்சேரி, மற்றும் வேளச்சேரி-சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் வேலைக்கு செல்வோர், சென்டரல் ரயில்களுக்கு செல்லும் மக்கள், மருத்துவமனைகள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த 4வது ரயில் பாதை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக பயணிகளால் குற்றம் சாட்டப்படுகிறது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin September 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin September 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
சீரமைக்க கோரிக்கை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.