ஆலத்தூர் ஊராட்சியில் தொழிற்சாலை கழிவுகளால், குடிநீர் மாசடைந்து ரசாயன துர்நாற்றம் வீசுவதால், குடிநீருக்காக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்போரூரை அடுத்துள்ள ஆலத்தூர் கிராமத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. குளுக்கோஸ், ஷாம்பு, உயிர் காக்கும் மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் சுமார் 30க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இங்கு தொடங்கப்பட்டன. இவற்றில், சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இங்குள்ள, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு கலந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே பொதுக்கால்வாயில் விட வேண்டும். இதற்கென சிட்கோ சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மையம் முறையாக செயல்படவில்லை.
இதன் காரணமாக பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து திறந்தவெளி கால்வாய் மூலம் ரசாயனம் கலந்த கழிவுநீர் தொழிற்பேட்டை வளாகத்திலேயே விடப்படுகிறது. இவை, நேராக சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லாமல் ஆங்காங்கே சாலையோரம் தேங்கி பொதுமக்களுக்கு தொற்று நோயை பரப்பி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளை கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லாததால், பல்வேறு தொழிற்சாலைகள் தங்களின் கழிவுநீரை தான்தோன்றித் தனமாக வெளியேற்றி வருகின்றன. இவ்வாறு, வெளியேற்றப்படும் கழிவுநீர் விவசாய நிலங்களின் வழியே பக்கிங்காம் கால்வாயில் சென்று கலக்கிறது. இதனால் ஆலத்தூர், வெங்களேரி கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன. மேலும், இவ்வாறு செல்லும் கழிவுநீரை குடிக்கும் ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பக்கிங்காம் கால்வாயில் கலக்கும் ரசாயன நீரால் முகத்துவாரத்தில் பிடிக்கப்படும் இறால் உள்ளிட்ட சிறுவகை மீன்களும் உண்ணத் தகுதியற்றதாக மாறிவிட்டன.
Bu hikaye Dinakaran Chennai dergisinin September 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin September 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
சீரமைக்க கோரிக்கை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.