புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய பெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெறப்பட்டது.
குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
அத்துடன், மேற்படி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக்கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைமுறையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
Bu hikaye Malai Murasu dergisinin December 03, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin December 03, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
புதியவகை வைரஸ் குறித்து பதற்றமடைய தேவையில்லை!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!
49-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி!
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!!
பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்!
டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல்!!
தமிழக அரசின் திராவிட சாயம் வெளுத்து விட்டது!
என்.ஆர்.தனபாலன் கண்டனம்!!
தமிழுக்கு ‘செம்மொழி' தகுதியை தந்தவர் மன்மோகன் சிங்!
படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
51-ஆவது மாநிலமாக கனடாவை சேர்க்கலாம்!
டொனால்டு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்!!
யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது!
கட்சியினருக்கு விஜய் உத்தரவு!!
திபெத்தில் 53 பேர் பலி
வட இந்தியாவையும் நில நடுக்கம் உலுக்கியது!!
அ.தி.மு.க.ஒத்திவைப்பு தீர்மானம்!
சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பினார்!!
‘யுஜிசி-நெட்' தேர்வு தேதியை மாற்றுங்கள்!
மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!!