CATEGORIES
فئات
யெஸ் வங்கி கடனளிப்பு 13% உயர்வு
தனியாருக்குச் சொந்தமான யெஸ் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 12.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்
ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யு குழுமத்தின் பிஎம்டபிள்யு மற்றும் மினி கார் களின் இந்திய விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறி உள்ளனர்.
வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி
கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை முந்தைய 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்
ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சி யமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளி யுறவுத் துறை அமைச்சர் அலெக் ஸாண்டர் ஷலன்பர்க்(படம்) நிய மிக்கப்பட்டுள்ளார்.
குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.
டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு
கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு?
‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’
அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே கார் குண்டு வெடிப்பு நடத்திய ராணுவ வீரர் மாத்யூ லிவல்பர்கர், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.
வதந்தியும் உண்மையும்!
எச்எம்பி தீநுண்மி: சாதாரண சளித் தொற்று
காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா
ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான முன்னோட்டமாக நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க போட்டியாளர்களான டாமி பால், ஜெஸிகா பெகுலா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
சிட்னி 'திருப்தி'; இதர நான்கும் ‘மிக நன்று!' - ஆஸி. ஆடுகளங்களுக்கு ஐசிசி மதிப்பீடு
பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 5 மைதான ஆடுகளங்களின் மதிப்பீட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை வெளியிட்டது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரணாய், மாளவிகா
மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், மாளவிகா பன்சோட் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை தகுதிபெற்றனர்.
ஒருநாள் கிரிக்கெட்: 2-ஆவது வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து
இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், நியூஸிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றிபெற்றது.
பெண்களின் உடல் வடிவத்தை வர்ணிப்பதும் பாலியல் துன்புறுத்தல்தான்! - கேரள உயர்நீதிமன்றம்
கொச்சி, ஜன.8: 'பெண்களின் உடல் வடிவம் குறித்து பாலியல் ரீதியில் வர்ணிப்பதும் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்' என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
\"நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட அணைப் பாதுகாப்புச் சட்டம் இருந்தும், நிர்வாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை என்று முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
லெபனான் ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
லெபனானில் ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 62 வாகனங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் அதானி மீதான விசாரணை
பைடன் நிர்வாகத்தின் முடிவுக்கு டிரம்ப் கட்சி எம்.பி. கடும் எதிர்ப்பு
மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சில் இந்தியா உறுதி
'மாலத்தீவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த இந்தியா ஆதரவளிக்க தயாராக உள்ளது' என்று அந்நாட்டு அமைச்சரிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை உறுதியளித்தார்.
தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம்: விசாரணையை பிப்.4-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மேலானதா அல்லது சட்டம் இயற்றும் அதிகாரம் மேலானதா என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சிறு விவசாயிகள் வளர்ச்சியில் பயிர் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு - பிரதமரின் முதன்மைச் செயலர்
சிறு விவசாயிகளின் வளர்ச்சியில் வீரிய ஒட்டுரக பயிர் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும் என்று பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தெரிவித்தார்.
முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மீதான கொலை வழக்கில் ஜனவரி 21-இல் தீர்ப்பு
முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் மீதான கொலை வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் ஜனவரி 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.
அஸ்ஸாம் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளர்கள்: சடலமாக ஒருவர் மீட்பு
அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளர்களில் ஒருவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
மூத்த பத்திரிகையாளர், கவிஞர் பிரீதீஷ் நந்தி மறைவு
மூத்த பத்திரிகையாளரும் கவிஞரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிரீதீஷ் நந்தி (73) மும்பையில் புதன்கிழமை மாரடைப்பால் காலமானார்.
சம்பல் வழக்கு: சிவில் நீதிமன்ற விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதி தொடர்பான சிவில் நீதிமன்ற விசாரணைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆந்திரத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - கூட்டணித் தலைவர்களுடன் வாகனப் பேரணி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூட்டணித் தலைவர்களான மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமர் மோடி புதன்கிழமை வாகனப் பேரணியில் பங்கேற்றார்.
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் 371 ஊராட்சிகள் மட்டுமே இணைப்பு
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் 371 ஊராட்சிகள் மட்டுமே இணைக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
டங்ஸ்டன் சுரங்கம்: ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம்
மதுரை அரிட்டா பட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம் என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
பேரவைக்கு நெருக்கடி: ஆளுநருக்கு பேரவைத் தலைவர் கண்டனம்
சட்டப்பேரவைக்கு ஆளுநர் நெருக்கடி கொடுத்ததாகக் கூறி, அவருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு கண்டனம் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க நடவடிக்கை -துணை முதல்வர் உதயநிதி தகவல்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
அதிமுக இரு முறை வெளிநடப்பு
சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் இரண்டு முறை வெளிநடப்பு செய்தனர்.