CATEGORIES
فئات
மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஷீல்ட் றக்பி சம்பியன்ஷிப்: சம்பியனானது மடவள மதீனா தேசிய கல்லூரி
மத்திய மாகாண றக்பி நடுவர் சங்கமும், மத்திய மாகாண றக்பி சம்மேளனமும் இணைந்து மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையே நடத்திய றக்பி தொடரில் மடவள மதீனா தேசிய கல்லூரி சம்பியனானது.
தங்கச் சிலையை திருட முயன்ற இருவருக்கு வலை
புத்தளம் - கருவலகஸ்வெவ, புளியங்குளம், வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையைத் திருடுவதற்காக வருகை தந்த கொள்ளையர்களின் இருவர் கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்திய துணைத் தூதரக அதிகாருகளுடன் சந்திப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் துணை தூதர் அதிகாரிகள் மட்டும் திருகோணமலையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு திருகோணமலையில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (17) மாலை இடம்பெற்றது.
“மீள்கிறது இலங்கை”
இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வியாழக்கிழமை (19) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் இலங்கையின் வங்குரோத்து நிலை முற்றாக முடிவடைந்து அனைத்து நாடுகளினதும் ஆதரவு மீண்டும் நாட்டுக்குக் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இருளில் தள்ளும் அரசியலுக்கு "பலியாகி விடாதீர்கள்”
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது
20 இலட்சம் மேலதிக வாக்குகளால் “வெற்றி நிச்சயம்”
திருடிச் சென்ற அனைத்து சொத்துக்களையும் வளங்களையும் மீண்டும் பெற்றுக்கொள்வோம் இறுதித் தருணத்தில் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் தொலைபேசிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
இருவருக்கு மட்டுமே தனி வாக்களிப்பு நிலையம்
வாக்கெடுப்பு நிலையத்தில் பின்பற்றப்படும் சகல நடைமுறைகளும் இங்குப் பின்பற்றப்படவுள்ளது
விபத்தில் மாணவி பலி
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் தரம் 9 பயிலும் 14 வயது மாணவி வாகன விபத்தில் பரிதாபகரமாக பலியானார்.
வாக்காளர் அட்டையை சனியன்றும் பெறலாம்
இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், தேர்தல் நடைபெறும் தினம் (21) வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
அரியநேத்திரனுக்கு MSD பாதுகாப்பு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்த்தத்தில் ஒருவர் மரணம்; மற்றுமொருவர் மாயம்
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத்தீர்த்த திருவிழாவின் போது, ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
“பதிலளிக்காது தலையை பரிசோதிக்க சொல்கிறார்”
அனுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஓரினச்சேர்க்கை நிலையங்களும் விபசார விடுதிகளும் சட்டப்படி திறக்கப்படும் என்று நான் கூறிய கருத்துக்கு அவர் பதிலளிப்பதை விடுத்து, எனது தலையை பரிசோதிக்க வேண்டுமென கூறியுள்ளார் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.ம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
பரீட்சை திணைக்கள அறிவிப்புக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம்
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் 3 வினாக்களை நீக்கி பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுமாறு பரீட்சை திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பெற்றோர்கள் சிலர் பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக புதன்கிழமை(18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன் கடித்ததால் மீனவருக்கு ஆபத்து
தெற்கே ஆழ்கடலில் மீன் கடித்து கவலைக்கிடமான நிலையில், இருந்த மீனவர் ஒருவரை வெளிநாட்டு கப்பல் ஒன்று புதன்கிழமை(18) மீட்டு, கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு சென்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு கிரிக்கெட் சம்பியன் ரீமாஸ் அணி
புறக்கோட்டை சமூக பொலிஸ் பிரிவும், புறக்கோட்டைமுதலாம் குறுக்குத் தெரு சுய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து மூன்றாவது தடவையாகவும் திங்கட்கிழமை (16) நடத்திய எல்.டபிள்யூ. பெரேரா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் கிண்ணத்தை 28 ஓட்டங்களால் ரீமாஸ் அணி தன் வசப்படுத்தியது.
மோடிக்கு பாலாபிஷேகம்
பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று (செப்., 17) விஸ்வகர்மா ஜெயந்தியும் கொண்டாடப்படுவதால், பா.ஜ., பிரமுகர் ஒருவர் அவரின் படத்தை விஸ்வகர்மாவாக சித்தரித்து பூஜை மற்றும் பால் அபிஷேகம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் கவுன்சில் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை காரைதீவு விளையாட்டு கழகத்திற்கு வழங்கியுள்ளது.
"தமிழர்கள் முட்டாள்களில்லை"
இலங்கை பொருளாதார ரீதியில் திவாலானமைக்கு தமிழ் மக்கள் மீதான யுத்த செலவீனமும் இனவாதத்தினால் தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்தியில் பயன்படுத்தத் தவறியமையுமே காரணம் என்ற உண்மையை ஏற்று சிந்திக்காத செயல்படாத பேரினவாதத் தலைவர்களை நோக்கி நாம் இனியும் வாக்களிக்க முடியாது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் தலைமைக் குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
ஒத்துழைப்பு வழங்க 'பெப்ரல்' தயார்
சுமார் 25 வருடங்களாக இலங்கையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தும் வகையில், தொடர்ச்சியாகத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் 'பெப்ரல்' அமைப்பு இம்முறையும் ஜனாதிபதித் தேர்தலை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைக்கும் வகையில், நாடு பூராகவும் உள்ள 25 மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மிகச்சிறப்பான ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்துள்ளது.
தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணன் கைது
சம்மாந்துறையில் சம்பவம்
முறைப்பாடு செய்யுங்கள்
தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் மோதல்கள் குறித்து முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்களை தேர்தல்கள் சிக்கல்களை தீர்க்கும் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.
வினாத்தாளை பகிர்ந்த அறுவர் கைது
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானப்படை விளக்கம்
தேர்தல் பிரசாரத்திற்கு விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து இலங்கை விமானப்படை விளக்கமளித்து ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
பசையை பொலிஸாரின் மீது கொட்டிவிட்டு ஓட்டம்
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக பன்னல - எல்படகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஜனாதிபதி வேட்பாளரின் எலபடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.
வேட்பாளர் அனுரகுமாரவை பதற்றமடைய வைத்த புறா
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார் திசாநாயக்கவினை புறா ஒன்றின் மூலம் பதற்றமடைய காரணமான இருவர் எச்சரிக்கை செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு நள்ளிரவுடன் தடை
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப்ப ணிகளுக்கு புதன்கிழமை(18) நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
GMOA இன்று வேலை நிறுத்தம்
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து புதன்கிழமை (18) தொழிற்சங்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
கூட்டமைப்பில் இருவர் ரணிலுக்கு ஆதரவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சசிகலா ரவிராஜ் மற்றும் கலைஅமுதன் சேனாதிராஜா ஆகியோர் யாழ்.
4,411 முறைப்பாடுகள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை குழாமில் ஒஷாத பெர்ணாண்
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் ஒஷாத பெர்ணாண்டோ இடம்பெற்றுள்ளார்.