CATEGORIES
فئات
தொடரைக் கைப்பற்றியது இலங்கை
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது.
துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகவுள்ள உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (30) தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
குமார வெல்கம காலமானார்
களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குமார வெல்கம தனது 74 ஆவது வயதில் காலமானார்.
ஜனாதிபதியின் தீர்மானம்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவுத்தொகையாக எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் நிதியை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
அரிசி வழங்க முடியாது"
கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்க முற்பட்டால் வியாபாரம் முற்றாக வீழ்ச்சியடையலாம் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டங்கள் எம்மிடம் இல்லை”
இன்று நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி பக்க பலத்தை வழங்கும்.
பஸ் உரிமையாளர் மீது வாள் வெட்டு
யாழ்ப்பாணம் - மணியம்தோட்டம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில், வாள்களுடன் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று பஸ் உரிமையாளரை வாள்களால் தாக்கியதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“நீதி, நல்வாழ்வுக்காக துணிந்து குரல் கொடுத்தவர்”
நீதிக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் என்றும் துணிந்து குரல் கொடுத்த ஒரு அரசியல்வாதி குமார வெல்கம என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
"வேலுகுமாரை இணைத்துக்கொள்வதில்லை என சஜித் உறுதி"
பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் ஞாயிற்றுக்கிழமை (29) தெரிவித்தார்.
‘யுக்திய’ நிறுத்தம்
'யுக்திய' நடவடிக்கைகளுக்காக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.
மீள் திருத்தத்திற்கான விண்ணப்பம் கோரல்
சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.
விளையாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் செலவு செய்யப்பட்டமை குறித்த புள்ளிவிபரங்கள் உள்ள போதிலும் அதன் முன்னேற்றம் தொடர்பில் உரிய கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமெனவும், அதுதொடர்பில் உடனடியாக உள்ளக கணக்காய்வொன்று நடத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்தார்.
“நாங்கள் போக முடியாது”
அவர்கள் தான் விட்டுச் சென்றவர்கள் எனவே, அவர்கள்தான் வரவேண்டும். அவர்கள் வந்தால் எமது கட்சிகளோடும், சிவில் அமைப்புகளின் கூட்டோடும் கலந்துரையாடியபின்னரே முடிவினை எடுக்கலாம்
"பிரிந்தவர்கள் மீண்டும் இணையுங்கள்"
சவால் மிக்க ஒரு சூழலில் இந்த தேர்தல் இருப்பதனால் இணங்கி வந்து இந்த தேர்தலுக்கு முகங்கொடுக்குமாறு இரு கரம் நீட்டி அழைக்கின்றோம்
கிழக்கு மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல் பஹ்ரியா பிரகாசிப்பு
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், கல்முனை அல் பஹ்ரியா வித்தியாலயம் பிரகாசித்தது.
பலமான நிலையில் நியூ சிலாந்து
இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் பலமான நிலையில் நியூசிலாந்து காணப்படுகின்றது.
மூன்று வாகனங்கள் மோதி விபத்து; ஒருவர் காயம்
அக்குரஸ்ஸ தெனியாய வீதியில் ஹுலங்தாவ பிரதேசத்தில் வியாழக்கிழமை (19) மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாயின் "சூனியமாகும்”
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது, வாக்களிப்பு நிலையத்தில் 'ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால், அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்க நேரிடும் என்பதுடன், அங்கே மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நெடுந்தாரகை பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தது
நெடுந்தாரகை பயணிகள் படகு சுமார் ஒரு வருடத்தின் பின்னர் வியாழக்கிழமை (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
“சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும்”
தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஜனாதிபதி தெரிவிப்பு
500 பணியாளர்கள் பாதிப்பு
பொலன்னறுவை, பக்கமூன பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 500 பணியாளர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.
சனியன்று விசேட போக்குவரத்து திட்டம்
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு 1,358 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
"9 மாகாணங்களிலும் கண்காணிக்கின்றோம்”
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 32 குறுகிய கால தேர்தல் கண்காணிப்பாளர்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளனர்.
நான்கு துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி
நாடளாவிய ரீதியில், புதன்கிழமை (18) இரவும் வியாழக்கிழமை (19) மாலை 6 மணிக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற நான்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடத் தடை
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளை திரையிட தடை
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“வாக்களிக்குமாறு இரந்து கேட்க முடியாது”
ஆறு முக்கிய விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக 1,124 சூரிய பாடசாலைகளுக்கு மின்சக்தி திட்டம்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் திருகோணமலையில் உள்ள முதல்கட்டமாகத் 348 பாடசாலைகளுக்கு solar panel வழங்கி வைக்கப்பட்டது.
கெஹலியவின் மகனுக்கு தடை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் மகனும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு அதிசொகுசு வீடுகளை கொழும்பு மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது.
முதலாம் நாளில் முன்னிலையில் இலங்கை
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டின் முதலாம் நாளில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.