CATEGORIES
فئات
$1 மி. வரை வழங்கும் புதிய மானியம்
சுகாதாரத் துறையில் புத்தாக்கத் திட்டங்களுக்கு அதிகமக்சம் $1 மில்லியன் நிதியாதரவு வழங்கும் புதிய மானியத்தை தேசிய சுகாதார புத்தாக்க நிலையம் (NHIC என்எச்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி நடந்த அந்நிலையத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் சுகாதார மற்றும் தகவல், மின்னிலக்க மூத்த துணை மேம்பாட்டு அமைச்சர் ஜனில் புதுச்சேரி இதை அறிவித்தார்.
பிரிட்டிஷ் மன்னரை அவமதித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கண்டனம்
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்சை அவமதித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஆயுதங்களால் ரஷ்யாவில் தாக்குதல் நடத்த உக்ரேனுக்கு அனுமதி
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசாங்கம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவினுள் தாக்குதல் நடத்த உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் 'ஜான் ஹாப்கின்ஸ்' கிளையைத் திறக்க பேச்சுவார்த்தை
அமெரிக்காவின் பிரபல கல்வி நிலையமான ஜான் ஹாப்கின்ஸ் (John Hopkins) பல்கலைக்கழகத்தின் கிளையை இந்தியாவில் அமைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times of India) போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவ மாணவர் உயிரிழப்பு
குஜராத் மாநிலத்தின் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூத்த மாணவர்களின் பகடி வதை கொடுமையால் 18 வயது பரிதாபமாக மாணவன் உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
வரம்பைப் பலமடங்கு மீறிய டெல்லி பனிப்புகை
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்றின் தரம், உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவை விடவும் 60 மடங்குக்கும் மேல் மோசமடைந்துள்ளது.
திமுக - பாஜக நேரடி கூட்டணி: சீமான்
திமுகவும் பாஜகவும் நேரடியாகவே கூட்டணியில் இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி என்பது பொய்த் தகவல்: விஜய் கட்சி விளக்கம்
அதிமுகவுடன் கூட்டணி என பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது.
நாங்கள் விஷக்காளான்கள்தான்: உதயநிதி ஸ்டாலின் பதிலடி
ஆமாம், நாங்கள் விஷக்காளான்தான் என்று தமிழக துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் (படம்), எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50% உயர்த்துக: ஸ்டாலின்
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 விழுக்காட்டுக்கு மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொள்ளும் தீயணைப்பு அதிகாரி
ஹெண்டர்சன் ரோடு தீச்சம்பவத்தில் தீயணைப்பாளர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரியான 39 வயது முகம்மது காமில் முகம்மது யாசின் தம் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள இசைந்துள்ளார்.
காஸாவிற்கு 50 டன் உதவிப்பொருள்களை அனுப்பிய சிங்கப்பூர் மனிதநேய அமைப்பு
சிங்கப்பூரிலிருந்து காஸாவிற்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குத் தலைமை தாங்கும் 'ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்' எனும் லாப நோக்கற்ற அமைப்பு, கடந்த ஜூலை மாத நிலவரப்படி 50 டன்னுக்கும் மேற்பட்ட உதவிப் பொருள்களை காஸாவிற்கு அனுப்பியுள்ளது.
மோசடியில் ஈடுபட்ட செல்வந்தர் லிம்முக்கு 17.5 ஆண்டுகள் சிறை
ஹின் லியோங் (Hin Leong) நிறுவனத்தின் நிறுவனர் லிம் ஊன் குயின், மோசடி, ஏமாற்று வேலை உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக 17 ஆண்டுகள் 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
$3 பி. பண மோசடி வழக்கு: $1.85 பி. சொத்துகள் ஒப்படைப்பு
சிங்கப்பூரின் ஆகப்பெரிய பண மோசடி வழக்கில் காவல்துறையிடமிருந்து தப்பி ஓடிய 15 வெளிநாட்டவர்களின் கிட்டத்தட்ட $1.85 பில்லியன் மதிப்புள்ள சொத்துகள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கக் கல்லூரிகளுக்குப் படையெடுக்கும் இந்திய மாணவர்கள்
அமெரிக்கக் கல்லூரிகளில் கடந்த கல்வியாண்டில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 23 விழுக்காடு அதிகரித்து, 2009க்குப் பிறகு முதல்முறையாக அனைத்துலக மாணவர்களை அனுப்புவதில் சீனாவை முந்தி மாணவர் சேர்க்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தியது.
குடும்ப வன்முறை: மாதர் சாசனத்தில் முக்கியத் திருத்தங்கள்
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேம்பட்ட ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குவதை உறுதிசெய்ய சாசனத்தில் புதிய திருத்தங்கள் மாதர் ஜனவரி 2025ல் நடைமுறைக்கு வரவுள்ளதாக உள்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெ லிங் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரியா
இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரியா (படம்) மீண்டும் திங்கட்கிழமை (நவம்பர் 18) பதவியேற்றுள்ளார்.
சிங்கப்பூரில் முக்கிய ஏற்றுமதி அக்டோபரில் 4.6% குறைந்தது
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள், கடந்த அக்டோபர் மாதம் குறைந்தன.
போலி முகமூடி அணிந்து பழிவாங்குகிறார்: நடிகர் தனுஷ் மீது நயன்தாரா காரசாரப் புகார்
நடிகர் தனுஷ் தம்மை பழிவாங்கத் துடிப்பதாக நடிகை நயன் தாரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவில் கத்திக்குத்து: 8 பேர் மரணம்
சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் சனிக்கிழமை நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்; 17 பேர் படுகாயமடைந்தனர்.
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ; வீடு, கால்நடைகள் அழிவு
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதியன்று காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணுவா ‘ஏஐ’ எடு லிமா: அணுவாயுதப் பயன்பாடு
அணுவாயுதப் பயன்பாடு குறித்த முடிவுகளை மனித இனமே எடுக்க வேண்டும் என்றும் ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு அதில் இடமில்லை என்றும் அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் ஒப்புக் கொண்டு உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணையைப் பாய்ச்சிய இந்தியா
இந்தியா அதன் உள்நாட்டிலேயே தயாரித்த நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணையை (Hypersonic Missile) வெற்றி கரமாகப் பாய்ச்சியுள்ளது.
டெல்லி காற்று மாசு; விமானச் சேவையில் கடும் பாதிப்பு
டெல்லியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் உள்ளது.
மணிப்பூரில் உச்சக்கட்ட பதற்றம்
காணாமற்போன மூன்று பெண்களும் மூன்று குழந்தைகளும் கொல்லப்பட்டதால் மணிப்பூரில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
மகன் கைது செய்யப்பட்டதற்குப் போராட்டம்: அர்ஜூன் சம்பத் கைது
கோயம்புத்தூரில் அக்டோபர் 27ஆம் தேதி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தோர் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குற்றாலம் பிரதான அருவியில் மட்டும் சுற்றுப் பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு
வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் நவம்பர் 16ஆம் தேதி காலை முதல் பரவலாகக் கனமழை பெய்தது
நடிகை கஸ்தூரி தெலுங்கானாவில் கைது
தலைமறைவாக தெலுங்கானா மாநிலத்தில் பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரியை தமிழ்நாட்டுத் தனிப்படை காவல் துறை அதிகாரிகள் அங்கு சென்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இளையரிடையே தொழில்முனைப்புடன் வர்த்தகத் திறன்களை ஊக்குவித்த போட்டி
லாப நோக்கமற்ற அமைப்பான ‘ஹாலோஜென்’, ஆண்டுதோறும் நடத்தும் 'தேசிய இளம் தொழில்முனைப்புச் சவால்', நவம்பர் 14ஆம் தேதி ஷா அறக்கட்டளை முன்னாள் மாணவர் மன்றத்தில் இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்தது.
மதியிறுக்க பாதிப்பு அதிகரிப்பு
அறிவுத்திறன் குறைபாடு போன்ற பிரச்சினைகள் உடைய பிள்ளைகளுக்குச் சேவை வழங்கிவந்த சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளில் தற்போது மதியிறுக்கப் பிரச்சினையுடைய (Autism) மாணவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.