CATEGORIES
Kategorien
இந்தியா-சிங்கப்பூர் இடையே நீர்மூழ்கி மீட்பு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்
கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக, ஐந்தாவது இந்திய சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை இன்று காணொலி மூலம் வெற்றிகரமாக நடைபெற்றது.
மக்களுக்கு ஏற்ற பொது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
மக்களுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பான, சிக்கனமான, மாசற்ற பொது போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
பிப்.19ம் தேதி திருப்பதி கோவிலில் ரத சப்தமி விழா
அடுத்த மாதம் (பிப்ரவரி) 19ந்தேதி ரதசப்தமி விழா திருமலையில் நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ரத சப்தமி விழாவின்போது உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி காலை முதல் இரவு 7 வரை வாகனங்களில் மாடவீதிகளில் வீதி உலாவருவது வழக்கம்.
நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில் 11 கோடிவீடுகளுக்கு ஒப்புதல்
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் 1.1 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 52வது கூட்டத்தில், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1,68,606 புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கிரேட் ரிபப்ளிக் டே சிறப்பு விற்பனை அமேசான் நிறுவனம் துவக்கம்
அமேசான் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனையை (கிரேட் ரிபப்ளிக் டே விற்பனை) அறிவித்து இருக்கிறது. அதன்படி, ஜன.21 முதல் நடைபெற்று ஜன.23ம் தேதி வரை இந்த விற்பனை நடைபெற உள்ளது.
கிராமப்புற வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதி நரேந்திர மோடி வழங்கினார்
உத்தர பிரதேசத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கினார்.
ஆன்லைன் வினியோக நிறுவனங்களை டாடா குழுமம் கையகப்படுத்த திட்டம்
பிக்பாஸ்கெட் மற்றும் ஒன் மில்லிகிராம் ஆகிய நிறுவனங்களை டாடா குழுமம் கையகப்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2025-க்குள் சாலை விபத்துகளை பாதியாக குறைக்க அமைச்சர் நிதின் கட்கரி அறைகூவல்
2025-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை பாதியாக்க் குறைக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அறைகூவல் விடுத்துள்ளார். அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பொதுப்பணித்துறை மற்றும் சாலை கட்டமைப்பு தொடர்பான பல்வேறு முகமைகளில் உள்ள பொறியாளர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த மூன்று நாள் கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
டிசம்பர் காலாண்டில் விப்ரோ லாபம் 21 சதம் உயர்வு
விப்ரோ அதன் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் டிசம்பர் மாதத்தில் நிகரலாபம் 21 சதம் அதிகரித்து, ரூ.2,968 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2,456 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது காலாண்டில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா லாபம் ரூ.154 கோடி
நாட்டின் பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் மூன்றாவது காலாண்டில் ரூ.154 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
வாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகள் கவலையளிக்கும் விதமாக உள்ளது: தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
வாட்ஸ் ஆப் நிறுவனம் அதன் பிரைவஸி பாலிசியை சமீபத்தில் மாற்றுவதாக அறிவித்திருந்தது. அதன்படி வாட்ஸ் அப் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அதன் சக நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரும் என தெரிவித்திருந்தது.
வாட்ஸ் ஆப்பை விட பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானது
சைபர் பாதுகாப்பு நிபுணர் தகவல்
கடந்த டிசம்பரில் போன்பே செயலியில் சுமார் ரூ.1.82 லட்சம் கோடி பணப் பரிமாற்றம்
நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட் சேவையைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி உருவாகியுள்ளது. இந்தியாவில் போன்பே, கூகுள் பே, பேடிஎம், ஆகிய நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி உருவாகியிருந்த நிலையில் அண்மையில் வாட்ஸ்அப் பே அறிமுகம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
உலக நாடுகள் அமெரிக்காவை மீண்டும் மதிக்கத் தொடங்கியுள்ளனர்: டொனால்ட் ட்ரம்ப்
தனது முயற்சியால் அமெரிக்காவை மீண்டும் உலக நாடுகள் மதிக்கத் தொடங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு கடந்த டிசம்பரில் ரூ.87,132 கோடியை எட்டியது
உள்நாட்டு மூலதனச் சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக மேற்கொண்ட முதலீடு கடந்த டிசம்பர் மாதத்தில் ரூ.87,132 கோடியை எட்டியுள்ளது என செபி தெரிவித்துள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் தமிழக தேர்தல் ஆணையம் வெளியீடு
சுமார் 9 லட்சம் முதல்முறை வாக்காளர்கள்
பிளே ஸ்டோரிலிருந்து லோன் ஆப்கள் நீக்கம்: கூகுள்
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மனிதனின் அனைத்து தேவைகளும் மிக சுலபமாக கிடைத்திடும் வகையில் விரல் நுனியில் அடங்கிவிடுகிறது.
வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு?
வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனாளிகளின் தகவல்களை பரிமாறும் வகையில் சமூக வலை தளத்தின் தனிநபர் தகவல் பாதுகாப்பு எனப்படும் பிரைவசி கொள்கை மாற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சமாளிக்க இந்தியா துணை நிற்கும் அமெரிக்கா தகவல்
சீனாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு இந்தியா துணை நிற்கும் என்று அமெரிக்க அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டவுன்லோட்களில் 2.5 கோடி பேர் பயன் அசத்தும் டெலிகிராம் ஆப்
டெலிகிராம் குறுந்தகவல் செயலியை பயன்படுத்த 72 மணி நேரத்தில் 2.5 கோடி புது பயனர்கள் இன்ஸ்டால் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில், முதல் 9எம்எம் இயந்திர துப்பாக்கியை உருவாக்கியது இந்தியா
உள்நாட்டு தொழில்நுட்பத்தில், நாட்டின் முதல் 9 எம்எம் இயந் திர துப்பாக்கியை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர் டிஓ) மற்றும் இந்திய ராணுவம் இணைந்து உருவாக்கியுள்ளது.
ஜிஎஸ்டி வரி இழப்பீட்டிற்காக மாநிலங்களுக்கு 12வது தவணையாக ரூ6,000 கோடியை அரசு வழங்கியது
மத்திய நிதி அமைச்சகம், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்காக 12-வது தவணையாக ரூ.6,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறது.
போலி இணையத்தில் பணம் செலுத்த வேண்டாம் பிஎஸ்என்எல் நிறுவனம் எச்சரிக்கை
போலியான இணையதள முகவரிக்குள் சென்று வாடிக்கை யாளர்கள் பணம் செலுத்த வேண் டாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை தொலைத்தொடர்பு வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பாவது:
கோவிட் தடுப்பூசியை நாடு முழுவதும் பெற்றுக்கொண்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 3.8 லட்சத்தை தாண்டியது
நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் மூன்றாம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 7,704 அமர்வுகளில் 3,81,305 பயனாளிகளுக்கு இது வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டு இருக்கிறதென்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் பொருளாதாரம் 2.3 சதம் வளர்ச்சி
கோவிட் பேரிடர் காலத்திலும் சீனப் பொருளாதாரம் 2.3 சதம் வளர்ச்சி கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2021 ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கு நடப்பு பாடத்திட்டமே தொடரும்
மத்திய அரசு அறிவிப்பு
விடுபட்ட பகுதிகளை ரயில்வே மூலம் இணைத்து வருகிறோம்: மோடி பேச்சு
நாட்டில் உள்ள இணைக்கப்படாத பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளை ரயில்வே மூலம் இணைக்கப்படுகின்றன என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நாட்டின் பல பகுதிகளில் இருந்து கெவாடியவுக்கு 8 ரயில்கள் தொடக்க விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் பேசியதாவது:
பிரைம் வீடியோ மொபைல் எடிசன் சேவையை ரூ.89 கட்டணத்தில் வழங்குகிறது அமேசான்
தனது பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சேவையை அமேசான் நிறுவனம் ரூ.89 மாதாந்திர கட்டணத்தில் வழங்குகிறது. இது குறித்து விரிவான செய்தியாவது: அமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ சேவையின் பிரைம் வீடியோ மொபைல் எடினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய முடிவுகளுக்கு எதிராக அரசாணைகளைப் பிறப்பிக்க ஜோ பைடன் திட்டம்
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே, தற்போ தைய டொனால்ட் டிரம்ப் இதுவரை எடுத்திருந்த முக்கிய கொள்கை முடிவுகளுக்கு எதிரான அரசாணைகளைப் பிறப்பிக்க புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு செய்திகள் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒரே வாரத்தில் 534 கி.மீ தூரத்துக்கு சாலைகள் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சாதனை
ஒரே வாரத்தில் 534 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைத்து, மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சாதனை படைத்துள்ளது.