CATEGORIES
Kategorien
கடமைக்குத் தவறினால் ஒரு இனிச ரூபாய் தண்டம்
தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சகல அதிகாரிகளும் கடமைகளுக்குக் கண்டிப்பாக வருகை தருவது அவசியம் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விமான படையினர் உஷார்
தற்போதைய பாதகமான காலநிலை காரணமாக, அவசரநிலைகளை எதிர்பார்த்து விமானங்களையும் துருப்புகளையும் தயார் நிலையில் வைக்குமாறு இலங்கை விமானப்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
118,210 பேர் பாதிப்பு
இருவர் மாயம்: 235 வீடுகளுக்கு சேதம்
கொம்புடன் கூடிய மண்டை ஓடு ஏலம்
நாகா இனத்தைச் சேர்ந்த 19ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் புதன்கிழமை (09) ஏலம் விடப்பட்டது.
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை தவறவிடும் வில்லியம்சன்
இலங்கைக்கெதிரான தொடரில் ஏற்பட்ட அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக நியூசிலாந்திலிருந்து கேன் வில்லியம்சன் புறப்படுவது தாமதமாவதன் காரணமாக இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை அவர் தவறவிடவுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து காணப்படுகின்றது.
சகலதுறைவீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பாண்டியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.
பிரேசிலில் எக்ஸ் மீதான தடை நீக்கம்
பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்.
பாடசாலையிடம் விளக்கம் கோர தீர்மானம்
தாமரை கோபுரத்திலிருந்து குதித்து மாணவி உயிர்மாய்த்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட பாடசாலையிடம் விளக்கம் கோர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அமெரிக்க அட்மிரல் இலங்கைக்கு விஜயம்
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பினைப் பலப்படுத்துவதற்காக
பிணை நிபந்தனை உறுதிக்குப்பின் வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை
எம்.ஹொசாந்த் பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால், புதன்கிழமை (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
"சலுகைகளை குறைக்கும் எண்ணமே இல்லை”
\"அரசாங்கத்தினால் முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக நான் அறிந்தேன்.
மீண்டும் வெளியேறினார் சாள்ஸ்
எஸ்.ஆர்.லெம்பேட் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாயக்கவின் கட்சி உதயமானது வடிவேல் சுரேஷும் தாவினார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான 'ஐக்கிய ஜனநாயக குரல்' என்ற புதிய அரசியல் கட்சி, கொழும்பில் புதன்கிழமை (09) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
'வானத்தில் பாலம்' மூடப்படும்
பதுளை மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் காணப்படும் 'வானத்தில் பாவம்” என்றழைக்கப்படும் ஒன்பது வளைவு பாலத்தில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித புதைகுழி 'ஸ்கேன்' ஆரம்பம் முழுத் தடை விதிப்பு
நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு பணி இவ்வாரம் மீண்டும் இடம் பெறவுள்ள நிலையில் தடய பொருட்களைப் பிரித்தெடுத்தல், புதைகுழியைச் சூழ உள்ள பகுதியை ஸ்கேன் செய்தல், அகழ்வு செய்யும் பணிகள் முதற்கட்டமாக இடம்பெற்று வருகின்றது.
நூரளை தபால் நிலையத்தை விற்பது இடைநிறுத்தம்
கடந்த 130 வருடங்கள் பழைமையான நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தைத் தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்காகப் பிரத்தியேகமாக வைத்திருக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
21/4 விசாரணைக்கு வத்திக்கான் ஆதரவு
இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகை (Rev.Dr.Brian Udaigwe) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் புதன்கிழமை (09) சந்தித்தார்.
“வாய்ப்பை பெண்களுக்கு வழங்கவும்”
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கஃபே அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
தென்னாபிரிக்காவை வென்றது அயர்லாந்து
தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அயர்லாந்து வென்றது.
ஜனாதிபதித் தேர்தலில் கையிஸ் சையத் வெற்றி
வடக்கு ஆபிரிக்க நாடான துனீஷியாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இன்று இரண்டாவது போட்டி: இந்தியாவுக்கு சவர்லளிக்குமா பங்களாதேஷ்?
இந்திய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது டெல்லியில் புதன்கிழமை (09) 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் மீண்டும் மிரட்டல்
கொரியயாவில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இங்கிலாந்து இந்திய, பங்களாதேஷ்
அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது டெல்லியில் புதன்கிழமை (09) 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் எச்.ஐ.வி அதிகரிப்பு
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவ்வருடம் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களின் துரித அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
2028 இல் கடனை அடைக்க வேண்டுமானால் “அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும்”
2028ஆம் ஆண்டிற்கான கடனை அடைப்பதற்கு எமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும். அந்நிய நேரடி முதலீடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். இங்கு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். புதிய முதலீடுகளுக்கு இங்குக் காணப்படும் சம்பிரதாய சட்ட திட்டங்கள் மாற்றியமைக்கப் பட வேண்டும்.
சட்டத்தரணிக்கு எட்டு வருட கடூழிய சிறை
காணி உறுதிகளை தயாரித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட சட்டத்தரணி ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, அவருக்கு செவ்வாய்க்கிழமை (08) அன்று 08 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
“மாயமான பக்கங்கள் குறித்து விசாரணை”
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரவுக்கு ஜோ பைடன் வாழ்த்து
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியின் 3 திட்டங்கள் நிறுத்தம்
கடந்த ஆட்சியினால் முன்னெடுக்கப்பட்ட மூன்று திட்டங்களை நிறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.