CATEGORIES
Kategorien
பாக்யத லக்ஷ்மீ பாரம்மா!
நான் பிறந்த வீட்டில், 'வரலக்ஷ்மி பூஜை' செய்வது வழக்கமில்லை. (கொஞ்சம் கூடுதல் செலவாகும் விஷயங்களை நாசூக்காக, ‘பத்ததி இல்லை' என்று சொல்லிவிடுவது நிர்மலா சீதாராமன் சொல்லாமலே, எங்க வீட்டுல அனுசரித்த பட்ஜெட் ட்ரிக்!)
வரலாற்று எழுத்தாளர் வெங்கட்ரத்னம்
அப்பாவுக்கு நூறாவது பிறந்த நாள் வருகிறது. அவசியம் நீங்க வந்து ஆசீர்வாதம் வாங்கிக்குங்க' என்று மதுரையின் மூத்த எழுத்தாளர் வீட்டிலிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது.
மகாலட்சுமி மகாத்மியம்
மகாலட்சுமிக்கு, ‘கோலா பயங்கரி' என்று ஒரு பெயர் உண்டு. பன்றி முகம் கொண்ட ஒரு அசுரன் கோலாசுரன். பன்றியை வேட்டையாடுவது கடினம். அவ்விதம் பயங்கரமான கோலாசுரனை மகாலட்சுமி வதம் செய்தமையால், தாயாருக்கு அந்தப் பெயர் வந்தது.
நம்பிக்கைச் சிறகு!
அது ஒரு கொரோனா காலத்து லாக்டவுன் நாளின் நண்பகல் நேரம். நாங்கள் வசிப்பது எதிரெதிர் வீடுகள் அமைந்த அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதி.
திருவோண திருநாள்
மகாபலி மன்னன், வாமனராக வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானமளித்து, அதன் மூலம் அவரது பேரருளுக்குப் பாத்திரமானான். அதுசமயம் அவன் இறைவனிடம், 'ஆண்டிற்கு ஒருமுறை நான் எனது நாட்டு மக்களை பார்க்க அனுமதிக்க வேண்டும்' என வரம் கேட்டான். இறைவனும் அவ்வாறே மகாபலிக்கு வரம் அளிக்க, அதன்படி மக்களை மகாபலி காண வரும் நாளே திருவோண திருநாள்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020
32வது ஒலிம்பிக்ஸ் போட்டி டோக்கியோ நகரில் ஜூலை 23, 2021ல் ஆரம்பமாகி, ஆகஸ்ட் 8, 2021 அன்று நிறைவு பெற்றது.
பதிக்கக் குவிப்பில் முன்னணி அதிலுண்டு விசித்திர பின்னணி
ஓலிம்பிக் போட்டிகளில் ஒரு நாடு அதிக பதக்கங்களைக் குவிக்க வேண்டும் என்றால், அது என்ன செய்ய வேண்டும்?
காயத்ரி ஜபம், ஆகஸ்ட் 23
காயத்ரி மந்திரத்தை, விசுவாமித்ரர் உருவாக்கிய நாள் மகர சங்கராந்தி (பொங்கல் திருநாள்) அன்று தான்.
தேசிய கொடி
இந்தியாவின் முதல் தேசியக் கொடியில் மேல்பாகம் பச்சை நிறமாகவும், அடிப்பாகம் சிவப்பு நிறமாகவும் நடுவில் மஞ்சள் நிறமாகவும் பச்சை பகுதியில் எட்டு தாமரைகளும் நடுவில் உள்ள மஞ்சளில் வந்தே மாதரம் என்று இந்தியிலும் அடிபாகத்தில் ஓரத்தில் பிறை வடிவம் வலது புறமும், சூரியன் இடது ஓரமும் இருந்தது. இது 1906ம் ஆண்டு உருவானது.
'சல சல' ஓசை!
இளங்காலை பொழுதில் கொஞ்சம் மேகமூட்டமான சூழ்நிலையில் சுடச்சுட செய்திகளைத் தாங்கிய செய்தித்தாளை ஒரு கையிலும், சூடான தேநீரை இன்னொரு கையிலும் வைத்துக் கொண்டு அன்றைய தினத்தைத் துவங்கினேன்.
ஹோமியோபதியும் யோக சிகிச்சையும்
கோவிட் பரவிய கடந்த ஒன்றரை வருட காலத்தில், அதனால் பாதிப்பு ஏற்பட்ட பலருக்கும் ஹோமியோபதி மருத்துவத்தோடு, யோகா தெரபி மூலமும், அதுவும் முக்கியமாக மூச்சுப் பயிற்சி மூலமாக சிகிச்சை அளித்து குணமாக்கிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஹோமியோபதி மருத்துவர், யோகா மற்றும் யோக சிகிச்சை நிபுணர் டாக்டர் சியாமளா விஜய்சிவா. மருத்துவம், உடற்பயிற்சிகள், யோகா பயிற்சிகளோடு நடைப்பயிற்சியும் அவசியம் என்பதை வலியுறுத்தி, 'Walking is the King of Exercises' என்றும் குறிப்பிடுகிறார் சியாமளா.
ஓரிரவு உறக்கம்!
அலை பேசி அடித்துக் கொண்டே இருந்தது. நான்காவது முறை அடித்ததும் கண்களைத் திறந்தான் பிரகதீஷ். சற்றே சலிப்புடன் போனை எடுத்து, அழைப்பது யார் என டிஸ்ப்ளேயில் பார்த்தான். அமர்!
சீதாப்பழக் கேக்
சமையல் குறிப்பு!
ஸ்ராவண மாதம்
தமிழ் ஆடி மாதத்தைப் போலவே, மராத்தியர்கள் ‘ஸ்ராவண' மாதத்தை மிகவும் விசேஷமாகக் கருதுகின்றனர். ஆடி அமாவாசையை அவர்கள், 'கடாரி அமாவாசை' யென்று கூறுகின்றனர்.
அன்பா? ஆத்திரமா?
அனுஷாவின், 'அன்பு விளக்கத்தை' ஜூலை 19, 2021 இதழின் அன்பு வட்டத்தில் படிக்கையில், இதை எழுதத் தோன்றியது. 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!' அருமை.
நாக பூஜை!
நம் நாட்டில் வேத காலத்திலிருந்தே நாக பூஜை வழக்கில் இருந்து வருகிறது. வேதங்களில் நாகராஜனின் துதிகள் உள்ளன. தந்த்ராகமம், வைதிக ஆசாரணைகளில் நாகாராதனை காணப்படுகிறது. பவிஷ்யோத்ர புராணத்தில் அஷ்ட நாகர்கள் மற்றும் துவாதச நாகர்கள் குறித்த விவரங்கள் உள்ளன. மஹாபாரதத்தின் பல உப கதைகளில் பாம்புகளின் பாத்திரமும் குறிப்பிடத்தக்கன.
ராணுவ வீராங்கனைக்கு ராயல் சல்யூட்
ராணுவத்தின் பெண்கள் பிரிவின் தலைவர், மருத்துவர், இந்திய மேலவை உறுப்பினராக விளங்கியவர், பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராகக் கடுமையாகப் போரிட்டவர், 'பத்மபூஷண்' விருது பெற்றவர், 'கேப்டன் லட்சுமி' எனப்படும் லட்சுமி சேகல் அவர்களை நமது சுதந்திர நாளன்று நினைவுகூர்வதற்கு வேறென்ன காரணம் வேண்டும் ? பல சுவாரசியப் பக்கங்களைக் கொண்டது அவரது வாழ்க்கை.
துப்புறவாளர் டூ ஆட்சியர்! அசத்தும் ஆஷா
கணவர் கைவிட்டாலும் நம்பிக்கையைக் கைவிடாமல் சாதித்துக் காட்டிய பெண்னைப் பற்றி அறிந்து கொள்வோமா?
ஒரு வார்த்தை!
சமீபத்தில் ஒரு பெண், தன் தோழி பற்றி உருக்கமாக எழுதியிருந்த செய்தி வைரலானது. அது ஒரு பெரிய பகிர்வு... அதன் சாராம்சம் இதுவே!
அஜீரணத்திற்கு அருமருந்து!
சுக்கு 50 கிராம், சீரகம் 100 கிராம், நாட்டுச் சர்க்கரை 150 கிராம் வாங்கி, சுக்குவை ஒன்றிரண்டாகத் தட்டிக்கொண்டு மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். பிறகு சீரகத்தையும் பொடி செய்து, அதில் நாட்டுச் சர்க் கரையைச் சேர்த்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். வயிறு மந்தமாக இருக்கும்போது அதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு வெதுவெதுப் பான தண்ணீர் குடித்தால் நன்றாகப் பசியெடுக்கும்.
பிரபஞ்சம்
எப்படிப்பட்ட பிரச்னையாயினும், அது நம்மை நேரிடையாக பாதிப்பதை விட, அந்தப் பிரச்னை பற்றி நம் மனதில் ஏற்படும் எண்ணங்களே நமக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
முள் சீதா பழம்!
இயற்கை கொடுத்த எண்ணற்ற கனிகளில் நாட்டு சீதா பழம் சாப்பிட்டிருப்போம். அதென்ன, 'முள் சீதா பழம்?' புற்று நோய்க்கு பலன் தரக்கூடியது மற்றும் அதிக மருத்துவ குணம் இப்பழத்தில் இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது.
ஆடிப் பெருக்கும் கதம்பச் சோறும்
"ஏவள்ளி வாரயா?'' “இன்னிக்கு என்ன விசேஷம் ஆண்டாளு?''
சகோதரிகள் ஐவரும் IAS!
அது ஒரு அபூரவமான குடும்பம். அந்த வீட்டில் அனைவரும் கலெக்டர்கள்! வியப்பாக இருக்கிறதல்லவா?
செடி மரங்களை வளர்க்க பாதுகாக்க சில டிப்ஸ்
முருங்கை மரம் பூக்காமல் இலைகளாகவே வந்து கொண்டிருந்தால், மரத்தைச் சுற்றி செல்லும் இரண்டு பெரிய வேர்களை மேலேயுள்ள மண்ணை நீக்கி, அந்த வேரின் பட்டையைப் பிளந்து அதன் இடுக்கில் ஒரு ஸ்பூன் பெருங்கயத்தூள் வைத்து, பிளந்த பட்டையை வேருடனே ஒட்டி, மறுபடியும் மண்ணால் வேரை மூடி விட்டால், பதினைந்து நாட்களில் பூ மொட்டுகள் கட்டிவிடும்.
'கிக் பணியாளர்கள் (Gig workers) யார் இவர்கள்?
'கிக்' பணியாளர்களுக்கும், அவர்கள் பணியாற்ற விழையும் நிறுவனத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருக்கும். 'இந்த ப்ராஜெக்ட்டை நீ முடித்து தர வேண்டும். அதற்காக உனக்கு இவ்வளவு தொகை தருவேன் எனும் படியான ஒப்பந்தம். அந்த ப்ராஜெக்ட் முடிவடைந்தவுடன் அவர்களுக் கிடையேயான தொடர்பு முடிவடைந்துவிடும். வேறொரு ப்ராஜெக்ட் வரும்போது மீண்டும் அவர்கள் அணுகப்படுவார்கள்.
தாய்ப்பால் அமுது!
டீனா அபிஷேக் மன நலம், மகப்பேறு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆலோசகர். 'மகப்பேறு கொண்டாட்ட மையம்' என்ற அமைப்பின் (Pregnancy Celebration Centre) நிறுவனர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலத்திற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் வாயிலாக வழங்கிவரும் பேச்சாளர்.
சிறப்போ சிறப்பு!
தற்சமயம் பெருந்தொற்று காலமாதலால், நாம் உண்ணும் உணவில் பெரிதும் கவனத்துடன் இருப்பது அவசியமாகிறது. தமிழில் பொதுவாக, ‘அறுசுவை உணவு' என்று கூறினாலும், அந்த அறுசுவைகளையும் உள்ளடக்கிய சமையல் கலை பல சவால்களைக் கடந்து பயணித்து வருகிறது.
அலைவதிலே ஆத்ம திருப்தி
அவரது செல்போனுக்கு அழைப்பு வருகிறது. டூ வீலரில் சற்று வேகமாக ஒரு ரெஸ்டாரன்ட்டுக்குப் போகிறார். பார்சல் தரப்படுகிறது. அவரை நிறுத்தி, நாம் பேச முயற்சிக்கிறோம். “சார்... என் கைக்குப் பார்சல் வந்துடிச்சு. இந்த ஆர்டர் தந்தவங்க என்ன பிசியில இருப்பாங்கன்னு தெரியாது. ப்ளீஸ்...
'என்' கொயரி
குற்றம் சாட்டப்பட்டவர்களை அதிகாரியாகச் சில சமயம் நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். இதனை, 'என்கொயரி ஆஃபீஸர்' என்பார்கள். குற்றம் சாட்டப்பட்டவரின் சமாதானம், அவருக்கு ஆதரவான சாட்சிகளிடம் விசாரணை, அரசு தரப்பு சாட்சிகள், இரு தரப்பிலும் குறுக்கு விசாரணை, சாட்சித் தடயங்கள் என அச்சு அசலாக நீதிமன்ற நடவடிக்கைகள் போலவே இருக்கும்.