CATEGORIES
Kategorien
எங்கும் நிறைந்த அவதாரம்!
அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் இறைவன்' என்பதை பக்தர்களுக்கு உணர்த்துவதே பகவான் மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம்.
கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்
அனுஷாவின் 'ஒரு வார்த்தை' படித்து கலகலவென்று சிரித்தேன். அனுஷாவிற்குக் கூட இவ்வளவு அழகான ரசிக்க வைக்கும் ஜோக் சொல்லத் தெரியுமா என்று ஒரு நிமிஷம் என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பெண்கள் ஆல்வேஸ் ராக் என்பது உண்மைதான்.
பூங்கார் அரிசி
சமீபகாலமாக நம் பாரம்பரிய உணவுகளின் பக்கம் நம் கவனம் திரும்பியுள்ளது வரவேற்கத்தக்கது. பூங்கார் அரிசியும் இந்தப் பாரம்பரிய சிறுதானிய வரிசையில் இடம்பெற்றுள்ளது.
லாக்டவுன் சமையல் சாதம்; அதுவே எனக்குப் போதும்!
ரேணுகா... இந்தச் சின்னத்திரை தேவதை நாடகத்தின் மூலமாக கலை உலகுக்கு அறிமுகமாகி, மலையாளப் படங்களில் நடித்து பிரபலமாகி, தமிழ்ப்படங்களில் தலைகாட்டி, சின்னத்திரைக்கு வந்து கொடி நாட்டியவர். இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் நடித்த சீரியல்கள் இப்போது மீண்டும் யு-டியூபில் வலம்வந்து கொண்டிருக் கின்றன. அதன் மூலமாக மறுபடியும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ரேணுகா. மங்கை யர் மலருக்கு பேட்டி என்றதும், சந்தோஷமாகச் சம்மதித்தார். சரவெடி கணக்காய்ப் படபட வென்று பொரிந்து தள்ளுகிறார். ஸ்ரீரங்கத்து சின்ன வயசு முதல் கொரோனா லாக்டவுன் காலத்து சமையல் வரை பல விஷயங்களை ஜாலியாகப் பகிர்ந்து கொண்டார். அவரது பாஸிடிவ் பேட்டி நமக்கு ஒரு பூஸ்ட் வாருங்கள்.... ரேணுகா வைச் சந்திக்கலாம்!
ஒரே கல்லில்...
"மாதங்கி! மாதங்கி!" அப்பாவின் குரல் கேட்டு பால்கனியில் நின்றுகொண்டே மழைச் சாரலை அனுபவித்துக் கொண்டிருந்தவள், 'இதோ வருகிறேன் அப்பா'' என்றபடி உள்ளே வந்தாள்.
ஜாய்புல் சிங்கப்பூர்
பயணத்துக்குத் தடா போட்ட கொரோனாவை ஓரம் கட்டிவிட்டு, உங்க நீங்கா நினைவுகளை எழுதி அனுப்பும்படி மங்கையர் மலர் ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டிருந்தோம்... எண்ணற்ற பங்கேற்புகள் குவிந்தன! இதோ தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பயண அனுபவக் கட்டுரைகளின் அணிவகுப்பில்.....
ஆதி ரங்கர் ஆலயம்!
விஷ்ணு பகவான் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீ வைகுண்டத்துக்கு இணையான சிறப்பு வாய்ந்தது ஸ்ரீரங்கப்பட்டணத்தில் பெருமாள் அனந்த சயனத் திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலாகும். வானுலகில் பாயும் விரஜாந்திக்கு இணையான புண்ணிய நதி காவிரியால் சூழப்பட்ட தீவாக இருக்கிறது ஸ்ரீரங்கப்பட்டணம்.
பறவைகளுக்கான தண்ணீர்ப் பந்தல்
நீரின்றி அமையாது உலகு. எல்லா உயிர்களுக்கும் தண்ணீர் அத்தியாவசியம். அவ்வளவாக நீர் அருந்தாத உயிரினங்கள் கூட உணவிலிருந்தே தங்களுக்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொள்கின்றன. தவிர, கோடைக் காலங்களில் தண்ணீரில் அமிழ்ந்து குளிப்பது, வெப்பத்தின் தாக்கத்தைக் குறைத்து உடலை சமநிலைக்குக் கொண்டுவரும்.
ஒருபாலினத்தவருக்கு திருமண உரிமை உள்ளதா?
ராமச்சந்திர சிரஸ் என்ற பேராசிரியர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மராத்திய இலக்கியத் துறையின் தலைவராக இருந்தார்.
அன்பே அர்ப்பணிப்பு
உறுதியான அர்ப்பணிப்புடன் கூடிய சேவை, பொறுமை, தொடர்ந்து மாற்றம் ஏற்படும் நவீன மருத்துவ முன்னேற்றங்களைக் கற்றுக் கொண்டு செயலாற்றுதல், உடற்கூறு பற்றிய அறிவு, உபகரணங்களைக் கையாளும் திறன், மருத்துவ நெறிமுறைகள் பற்றிய தெளிவு, எந்த நேரத்திலும் விழிப்புணர்வு என்று செவிலியரின் பணிகளும், பயிற்சிகளும் மற்ற எந்தத் துறையை விடவும் சிறப்பானது, புனிதமானது, போற்றப்பட வேண்டியது....
“மனிதர்களாக மதிக்கப்படுகிறோம்!”
ரயில் ஓட்டுனர்களுள் 50 சதவிகிதம் பெண்கள், ஊழியர்களில் கடைநிலை ஊழியர்கள் முதல் இன்ஜினீயர்கள் வரை மொத்தப் பணியாளர்களில் 50 சதவிகிதம் பெண்கள். மெக்கானிக்குகள் பெரும்பாலும் பெண்கள், பெண்களுக்குத் தனிப் பெட்டிகள், ஸ்டேஷனில் தாய்மார்களுக்காகப் பாலூட்டும் அறைகள் என முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்து வாய்ப்புகளை வாரி வழங்கி வரும் (சென்னை மெட்ரோ ரயில்) சி.எம்.ஆர்.எல். தற்போது புதியதாகத் தொடங்கியுள்ள புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள், திருநம்பிகள் என 13 பேருக்கு நிலையத் தில் வேலை வாய்ப்பை வழங்கியிருக் கிறார்கள். இது பொதுமக்களிடையேயும், சமூகச் செயற்பாட்டாளர்கள் மத்தியிலேயும் பொது நோக்கர்கள் மத்தியிலேயும் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந் திருக்கிறது. நாம் புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணி யில் உள்ள சில திருநங்கைகளையும் திருநம்பிகளையும் சந்தித்துப் பேசினோம்.
ஸ்ரீராம நாமம் சொல்வோம்; பாவ வினைகளை வெல்வோம்!
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஏழாவதாகக் கொண்டாடப்படுவது ஸ்ரீராமா வதாரம்.
விழுந்து எழுந்து...
பயணத்துக்குத் தடா போட்ட கொரோனாவை ஓரம் கட்டி விட்டு, உங்க நீங்கா நினைவுகளை எழுதி அனுப்பும்படி மங்கையர் மலர் ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டிருந்தோம்... எண்ணற்ற பங்கேற்புகள் குவிந்தன! இதோ தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பயண அனுபவக் கட்டுரைகளின் அணிவகுப்பில்.....
பயண அனுபவம்
பயணத்துக்கு தடா போட்ட கொரோனாவை ஓரம் கட்டிவிட்டு, உங்க நீங்கா நினைவுகளை எழுதி அனுப்பும்படி மங்கையர் மலர் ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டிருந்தோம்... எண்ணற்ற பங்கேற்புகள் குவிந்தன! தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பயண அனுபவக் கட்டுரைகளின் அணிவகுப்பில்...
ராம...ராம...ராம...
ராம...ராம...ராம...
ராம கதைகள்
ராம கதைகள்
ரமாமணி சுந்தர்
"உன்னோடு அருமைப் பிள்ளை பேசறான். இந்தா நீயே பேசு" என்று தொலைபேசியைத் தன் மனைவி சரோஜாவின் கையில் திணித்தார் கணேசன். பெற்றவர்களின் மேல் பாசத்தைப் பொழிந்து கொண்டு, பெற்றோரே எல்லாம் என்றிருந்த வரையில் 'நம்ம பிள்ளையாக இருந்த மகனை இப்பொழுதெல்லாம் உன் பிள்ளை என்று குறிப்பிட ஆரம்பித்துள்ளார் கணேசன். மகனிடம் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள விரும்பாத அவர், அவனிடமிருந்து தொலைபேசி வந்தால் கூட சரோஜாவைப் பேச அழைத்து விடுகிறார்.
மணக்கும் மசாலாஸ்!
உங்க சமையலில் கூடுதல் ருசியும் மணமும் சேர்க்க, இந்த இன்ஸ்டன்ட் மசாலாக்களைச் செய்து சேர்த்து அசத்துங்க... (சமையல் தெரியாத இந்தக் கால சில 2K கிட்ஸ்களுக்கும் இது உதவும்)
பலம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு, அலுவலகம் செல்ல வேண்டிய தினம் வந்தது.
நகங்களும் நலம் பெற...
அழகு நிலையங்கள் சென்று, கேட்கும் பணத்தைத் தந்து, முகம், தலைமுடி போன்றவற்றின் அழகை மேம்படுத்துவதில் அதிககவனம் காட்டும் பெண்கள், அதிகம் பலன் தரும் சிறு விஷயங்களை அலட்சியம் செய்வதுண்டு.
ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் முதல் வாள் வீச்சு வீராங்கனை!
சாய்னா நேவால், பி.வி. சிந்து, சானியா மிர்சா, தீபா கர்மாகர் போன்றவர்களைப் போல உலக அரங்கில் கலக்கிக்கொண்டிருக்கும் இந்திய வீராங்கனைகளின் வரிசையில் அதுவும், மிகவும் தனித்துவம் வாய்ந்த விளையாட்டான வாள்வீச்சுப் (Fencing) போட்டிகளில் சாதனைப் பெண்மணியாக உருவெடுத்துள்ளார் பவானி தேவி.
சவாலே சமாளி... ஜிம்மே கதி!
சராசரியாக இந்தப் புவியில் ஒரு ஆண் எதிர்கொள்ளும் உடல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்னைகளைவிட ஒரு பெண் எதிர் கொள்ளும் பிரச்னைகள்தான் அதிகம்.
தபால் தலை தகவல்கள்
தபால் தலை தகவல்கள்
தனி ஒருத்தி
சுடர் விட்டு எரியும் விளக்கின் சாந்தம், ஊதுபத்தியின் நறுமணம், மல்லிகைப் பூவின் வாசம், சாம்பிராணி சுகந்தம், மெல்லிய மங்கள சையின் நாதம், கடவுளுக்கு நன்றி சொல்லி கைகூப்பி, கண்மூடி நின்றிருந்தாள் சிவப்பிரியா. இடம் அவள் வீட்டுப் பூஜை அறை.
கடல் கால்வாயில் ட்ராஃபிக்ஜாம்
சூயஸ் கால்வாய் குறித்து இன்று உலகம் முழுவதும் பேச, அநேகர் அதை இணையதளம் மூலமாக தேடோ தேடெனத் தேடிப் பார்க்கிறார்கள். அன்று, எழுத்துச் சித்தர் மறைந்த பால குமாரன் ஐயா, மகான் சேஷாத்திரி சுவாமிகளின் வாழ்க்கை பற்றி எழுதிய 'தங்கக்கை' எனும் புத்த கத்தில் சூயஸ் கால்வாய் குறித்து எழுதியிருக்கிறார். அதன் சிறு பகுதி பின்வருமாறு:
ஆனந்தக் குயிலின் பாட்டு
வீடு என்பது ஒருசிலருக்கு அசையாச் சொத்து. சிலருக்கு ஒரு லாபகரமான முதலீடு. இன்னும் சிலருக்கோபல மடங்கு விலையேறும் ஒரு லாபம் தரும் பண்டமாற்றுப் பொருள். வேறு சிலருக்கு அது கௌரவம், சமுதாய மதிப்பு, ஆசை, கனவு, லட்சியம், முயற்சி...
எங்கள் உயிருடன் கலந்தகலை
இரவு நேரம்... அண்ணன் தங்கைப் பாசத் துக்கு எடுத்துக்காட்டான 'நல்லதங்காள்' நாடகம் பொம்மலாட்டத்தின் மூலம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது.
அன்புள்ள வாசக சகோதரிகளே...
நான் ராஜி. ராஜி ரகுநாதன். ஹைதராபாத்தில் வசித்து வரும் (உங்களைப் போன்ற) மங்கையர் மலரின் நெடுநாள் தீவிர வாசகி.
'விரல் நுனியில் உன் உலகம்!'
டெக் தொடர் 2
பக்க விளைவு
ஒரு சோம்பலான ஞாயிற்றுக்கிழமை. அஷோக் நகரின் 17வது அவென்யூ இன்னும் தூங்கிக்கொண்டிருந்தது.