CATEGORIES
Kategorien
பச்சை நுரையீரல்கள்
இந்தப் பிரபஞ்சத்தில் மொத்தம் ஒன்பது உலகங்கள் இருப்பதாகவும், அந்த ஒன்பது உலகங்களையுமே 'யிக்ட்ராசில்' என்கிற பிரம்மாண்டமான புனித மரம் ஒன்று தாங்குவதாகவும் நம்புகிறது நார்ஸ் மதம்.
உறுதி ஏற்போம்!
'காதலுக்குக் கண்ணில்லை' அந்தக் காலப் பழமொழி. இப்போதெல்லாம் காதலுக்கு வரையறைகளும் இல்லை. காமம் மட்டுமே அடிப்படையாக முக்கால்வாசி காதல்கள் முளைத்து, முளைத்த வேகத்திலேயே தங்கள் இளமைத் தேடல்கள் முடிந்தவுடன் விலகியும் விடுவதை அதிகம் காண முடிகிறது.
பெண்களின் தலைமைப் பண்பு உயர்விற்கு உயர்கல்வியே உரம்!
இந்த உலகமே தாய்வழிச் சமூகத்தின்படியாகச் செதுக்கப்பட்டது. உலகின் எல்லா உயிர்களும் இப்போதும் தாய்வழிச் சமூகத்தில் தான் இயங்குகின்றன. அதுதான் இயற்கையின் படைப்பு. மனிதகுலத்தையும் முதலில் தலைமைப் பண்புடன் வழிநடத்தியது பெண் சமூகம்தான்.
சமையலறை-சமூகம்-சமத்துவம்
The great indian kitchen மலையாளத் திரைப்படம் பற்றி நிறைய பேசப்பட்டு, அலசப்பட்டுட்ரண்டிங் ஆகி வருகிறது. திருமணமாகி வேறு குடும்பத்தில் நுழையும் பெண்களின் வாழ்வியல் சிக்கல் குறித்துப் பேசுகிறது இந்தப் படம்.
அம்மாவின் ஆட்சியே மீண்டும் மலரும்!
அப்சரா ரெட்டி ஆஸ்திரேலியாவில் இதழியலில் பட்டப்படிப்பு. அதன் பிறகு லண்டனில் ஒளி(லி) வரப்பியலில் எம்.ஏ. முடித்து விட்டு, பி.பி.சி.யில் பணி. அடுத்தடுத்து தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்போது டெக்கான் கிரானிகிள் தினசரியில் மூத்த ஆசிரியர். தந்தி டி.வி.யிலும், ஜெயா டி.வி.யிலும் நிகழ்ச்சிகள் வழங்கி இருக்கிறார். இது அவருடைய ஊடக முகம் என்றால், அரசியல் கட்சிகளில் சேர்ந்து சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கு கிறார். காங்கிரசில் இருந்து விலகி, தற்போது அ.இ.அ.தி.மு.க.வில் இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் துவக்கிவிட்டார். மங்கையர் மலர் மகளிர் தினச் சிறப்பிதழுக்காக அப்சரா ரெட்டி அளித்த பிரத்தியேகப் பேட்டியின் தொகுப்பு:
பொங்காலைத் திருவிழா
கற்புக்கரசியாம் கண்ணகி தன் கணவனான கோவலன் மேல் தகாத பழியைச் சுமத்திய பாண்டிய மன்னனிடம், தனது கால் சிலம் பிலுள்ளவை மாணிக்கப் பரல்கள் என்பதை நிரூபித்து ரூ பித்து மதுரை மாநகரையே எரித்த கதை அனை வரும் அறிந்ததே.
நல்லுள்ள நங்கை நளினி
Frozen Times என்ற பத்திரிகையை நடத்தும் ஜோதி கணேசன் என்பவரை ஒரு நாள் சந்திக்க நேர்ந்தது. ஒவ்வொருவரும் தங்கள் வாழும் இடத்தில் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்திருப்பார்கள்.
மகளிர் நலம் காக்கும் சித்த மருத்துவம்!
தனிப்பட்ட வகையில் மகளிரை அச்சுறுத்தும், மகளிரைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றுக்கான சித்த மருத்துவம் குறித்து விரிவாக அறிந்து கொள்ள, திருச்சி மாநகராட்சி சித்த மருத்துவர் திருமதி வே. ரத்தினம் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம். இனி, அவரிடம் நாம் பேசியதிலிருந்து...
பாப் கட்டிங் செங்கமலமும் தோழிகளும்!
''கல்யாணி இங்கே வா; அங்கே சென்று பசுந்தீவனத்தை எடுத்து வா; பாப் கட்டிங் செங்கமலம் எங்கே காணவில்லையே?" என்று பாகன்களின் குரல் அந்த முகாமில் கேட்கிறது. தாயின் குரலைக் கேட்டவுடன் ஓடிவரும் குழந்தையைப் போல செல்லமாக கல்யாணியும் செங்கமலமும் பாகன்களைத் தேடி வருகின்றன.
குறள் ஓவியங்கள்
திருக்குறளுக்கான பொருள் சொல்லக்கூடிய உருவங்களை ஓவியங்களில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? ஓவியங்கள் வழியாகப் புத்துணர்வூட்டும் புதுச்சேரியைச் சேர்ந்த சௌமியா இயல் அள்ள அள்ளக் குறையாத தீர்வுகள் சொல்கிற 1330 திருக்குறள்களுக்கு, குறளோவியங்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்.
திருமாலின் சயனத் திருக்கோலம்!
ஸ்ரீமந் நாராயணன் சில திருத்தலங்களில் நின்றும், இருந்தும், கிடந்தும் என பல்வேறு திருக்கோலங்களில் அருள்புரிகிறார். அவற்றில் கிடந்த கோலம் எனப்படும் சயனத் திருக்கோலம் எட்டு வகைப்படும்.
செடிகளும் நாமும்
மனிதனுக்கும், செடிகளுக்கும் என்ன வித்தியாசங்கள்னு கேட்டால், பத்திரிகையில் வரும் போட்டி போல கடகடவென்று பதில் எழுதி அனுப்பிடுவோம்.
சிலம்பம் பெண்களின் பாதுகாப்பு வளையம்
பெண்கள் வெளியில் செல்லும் போது, எல்லாச் சூழலும் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதில்லை.
எழுத்தின் பாலினம்
எழுத்தாளர் சீவகனுடைய புகழ் வெகு குறுகிய காலத்துக்குள் உயர்ந்தது. பல பத்திரிகைகளில் வெளியான அவரது ஒவ்வொரு சிறுகதையும் தனித் துவம் மிக்கதாக இருந்தது.
'ப்ராஜெக்ட்' வழிக் கல்வி
"அம்மா, திஸ் இஸ் தன்வி. எங்க குடும்ப நண்பரோட பொண்ணு.
மெலிந்த உடல்; குறைந்த எடை பாதுகாப்பானதா?
இன்றையத் தேதியில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைப்பாடு மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.
பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்
தமிழ் மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, பெண் குழந்தைகளைக் கொண்டாட நினைத்தோம். 'குட்லைஃப் சென்டர்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், 25 ஆண்டுகளாக, சிறுவர்கள் இல்லத்தை நடத்தி வருகிறது என்று கேள்வியுற்று அங்கு சென்றோம்.
பட்ஜெட் 2021-2022
பட்ஜெட் 2021-2022
“இது விவசாயத்துக்குக் கிடைத்த விருது”-பத்மஸ்ரீ பாப்பம்மாள்
"இந்த வயசுல நீங்கள் விவசாயம் செய்வதைப் பார்த்து எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு... உங்களைப் போன்ற தாய்மார்கள்தான் இன்று விவசாயத்துக்கு முதுகெலும்பாய் இருக்கீங்க...'' என்று பாப்பம் மாள் பாட்டியைப் பாராட்டினார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்.
மருந்தாகும் மூலிகைகள்
மருந்து என்றால் கசக்கும் என்பது பொதுவான கருத்து. அப்படி இல்லாமல் மருந்தை விருப்பப்பட்டு, ருசித்து சாப் பிடும்படி இருக்க வேண்டும் என்று நாம் உண்ணும் உணவே நம் தேகத்தை நோயிலிருந்து காக்கும் மருந்தாகும் படி செய்தனர் நம் சித்தர்கள்.
புண்ணிய பலனை அதிகரிக்கும் மாசி மகம்! 27.02.2021
உலகில் இருக்கும் எல்லாத் தலங்களுக்கும் பீஜமாக அதாவது தோற்றுவாயாக இருப்பது கும்பகோணம். ஊழி காலத்தின் இறுதியில் சிருஷ்டி பீஜங்கள் அனைத்தும் ஒரு குடத்தில் தங்கின. அந்தக் குடம் தங்கிய இடமே கும்பகோணம். கும்பகோணத்தை, சர்வேஸ்வரரான ஈஸ்வரனே உருவாக்கினார்.
சிறப்புமிகு குராமலர்
திருமுருகப் பெருமான் உறையும் புகழ்பெற்ற திருத்தலமான திருவிடைக்கழி, நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் தில்லையாடியிலிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சிவப்புக் கம்பளம் விரித்து பெண் சிசுவை வரவேற்போம்!
இன்று செய்தித்தாளைப் புரட்டுகிறேன். பல செய்திகளுக்கு மத்தியில் ஒரு செய்தி கண்ணில் பட்டு மனதைச் சுண்டி இழுத்தது.
இந்தியா ஒளிர்கிறது; இளைஞர்களின் கையில்!
திட்டமிடலும் இலக்கும் துல்லியமாக இருந்தால் எதையும் எளிதில் வெல்ல முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் செல்வி அர்பிதா முரளிதரன்.
அம்மா...நான் செத்துப் போறேம்மா!
உலகை உலுக்கிய ஆதிகுடி சிறுவன் கண்ணீர்! கைகொடுத்த மனிதநேயம்!
வேதாந்தா மூத்த குடிமக்களுக்கான ஒரு வரப்பிரசாதம்
வேதாந்தா மூத்த குடிமக்களுக்கான ஒரு வரப்பிரசாதம்
வந்தாச்சு தடுப்பூசி!
2020ஆம் ஆண்டு கொரோனா அசுரனின் அச்சுறுத்தலோடு பிறந்தது. லட்சக்கணக்கில் உயிர் பலி வாங்கியதுடன், சுனாமியாக தனிமனித, தேச, உலகப் பொருளாதாரத்தையும் புரட்டிப் போட்டது கொரோனா . மருத்துவ விஞ்ஞானிகளின் விடா முயற்சியாலும், அயராத உழைப்பினாலும் கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, நம்பிக்கையோடு 2021 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
மனித உடலின் தலைமைச் செயலகம்
"மனித மூளை ஒரு பி.எம்.டபிள்யூ கார். சரியாக ஓட்டினால் சாதனைகள் செய்யும்.” சொல் பவர், சென்னை காவேரி மருத்துவமனையின் நரம் பியல் மற்றும் மூளை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஷ்யாம் சுந்தர். (Senior Consultant, Spine and Brain Surgeon).அவர் தரும் வேறு விளக்கங்கள் என்ன? தெரிந்துகொள்வோமே!
ஊரெல்லாம் கரகோஷம்; மனசெல்லாம் சந்தோஷம்
பேண்டு வாத்தியங்கள் முழங்க சுத்துப்பட்டு கிராமமே கூட, தமிழகத்தின் பிரதிநிதிகள் சூழ, கழுத்து முழுவதும் மாலைகள் சூடி இளைஞர்களின் ஆடல் பாடலுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தன் மகனைப் பார்க்கும் தாயின் மனநிலை எப்படி இருக்கும்?
நம்ம நாட்டுப் பொண்ணு; இணையத்தில் கலக்கும் கண்ணு
ஆடல், பாடல், செய்திகள் சார்ந்த ஷயங்களைத் தாண்டி இன்று ணையத்தில் ட்ரெண்டாகி வரும் டாபிக் 'சமையல்'. யுடியூப், முகநூல் என எல்லாவற்றிலும் சமையல் செய்து வீடியோ அப்லோட் செய்பவர்களும், அதைச் சமைத்துப் பார்க்காவிட்டாலும் விரும்பிப் பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளனர்.